Rasi Palan Today-10.09.2021

மேஷம்-Mesham
இன்று உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனினும் பின்னாளில் அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது இன்றைய தினத்தில் பலருக்கு நன்மை தரும்.
ரிஷபம்-Rishabam
இன்று புதிய முயற்சிகளில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட இடம் தராதீர்கள். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும், உங்களது முயற்சி வீண் போகாது. சிலருக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எனினும் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட உங்கள் பணிகளை மற்றவர் களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மொத்தத்தில் பொறுமையால் வெல்ல வேண்டிய நாள்.
மிதுனம்-Mithunam
செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி மற்றும் பொறாமை குறையும். சிலர் கடனில் ஒருபகுதியைச் செலுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.
கடகம்-Kadagam
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். எனினும், உங்களது உழைப்பு வீண் போகாது.
சிம்மம்-Simmam
கடினமான காரியங்களையும் எளிதாக, திட்டமிட்டு முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கன்னி -Kanni
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.
துலாம்-Thulam
பழைய நினைவுகளில் மூழ்கி வீட்டில் தடைப்பட்ட வேலையைமாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூட தவறு என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
தனுசு-Thanusu
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
மகரம்-Magaram
எதிர்காலம் பற்றி கவலைவந்து போகும். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கும்பம்-Kumabm
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மீனம்-Meenam
கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை கள் வந்து விலகும். எதிலும் நிதானம் தேவைப் படும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …