Friday, December 8, 2023

Rasi Palan Today-14.11.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-14.11.2021

Rasi Palan Today

மேஷம்-Mesham 

உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். தொழிலில் வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். சிலருக்கு எதிர் காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பெரும்பாலும் குடும்பத்தின் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி சிலருக்கு வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர்.

ரிஷபம்-Rishabam 

இன்று மன சஞ்சலம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வீண் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கோபத்தைக் குறைத்து நிதானத்தால் வெல்ல வேண்டிய நாள். சிலருக்கு வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் தென்படும். மொத்தத்தில் நாளின் இறுதியில், சோதனையை சாதனை ஆக்குவீர்கள்.

மிதுனம்-Mithunam 

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

Rasi Palan Today

கடகம்-Kadagam 

எந்த காரியத்தை தொட் டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகபேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப் படும் நாள்.

சிம்மம்-Simmam 

மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். தெளிவாகப் பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கன்னி -Kanni

புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப் பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

Rasi Palan Today

துலாம்-Thulam 

சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்-Viruchigam 

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு-Thanusu 

வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Rasi Palan Today

மகரம்-Magaram 

பழைய தவறுகளை நினைத்து வருந்த நேரிடலாம். உத்யோகத்தில் மகிழ்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளால் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் சில விஷயங்களைச் சீர் செய்து லாபத்தை பெருக்க முயல்வீர்கள்

கும்பம்-Kumabm 

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்-Meenam 

உற்சாகமான நாளாக அமையும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular