Rasi Palan Today-15.09.2021

மேஷம்-Mesham
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சிலர் கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்-Rishabam
அனாவசிய பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வந்து நீங்கும். அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
மிதுனம்-Mithunam
தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட அல்லல்கள் நீங்கும்.
கடகம்-Kadagam
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
சிம்மம்-Simmam
குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது. வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.
கன்னி -Kanni
வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.
துலாம்-Thulam
புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.
விருச்சிகம்-Viruchigam
வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு-Thanusu
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எனினும், உடனுக்குடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று சிலருக்கு கிடைக்கக் கூடும். வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். எனினும், தேவைகள் இறுதியில் நிறைவேறும்.
மகரம்-Magaram
தாய் வழி ஆதரவு அவ்வப்போது ஆறுதல் தரலாம். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும்.
கும்பம்-Kumabm
தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசுப்பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
மீனம்-Meenam
மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணை மூலம் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …