Rasi Palan Today-25.09.2021

மேஷம்-Mesham
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்-Rishabam
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
மிதுனம்-Mithunam
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.
கடகம்-Kadagam
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
சிம்மம்-Simmam
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள் வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.
கன்னி -Kanni
மனதில் இனம் தெரியாத குழப்பத்திற்கு இடம் தராதீர்கள். புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு நிதானமாக யோசித்துச் செய்யவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள் தான். சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.
துலாம்-Thulam
மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்-Viruchigam
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள். மேற்கண்ட சோதனைகளை தவிர்க்க விநாயகரை வழிபடுங்கள்.
தனுசு-Thanusu
வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
மகரம்-Magaram
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.
கும்பம்-Kumabm
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள்.
மீனம்-Meenam
ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எனினும் எதையும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெல்வீர்கள். கவலை வேண்டாம்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …