Rasi Palan Today-25.12.2021

மேஷம்-Mesham
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்-Rishabam
உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
மிதுனம்-Mithunam
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பு வீண் போகாது. விடா முயற்சியால் வெற்றி பெறும் நாள்.
கடகம்-Kadagam
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலர் பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை சிலர் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்க இடம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்-Simmam
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கன்னி -Kanni
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சிலருக்குப் பூர்வீக சொத்து பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சிலர் புது ஏஜென்சி கூட எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அலைச்சல் தந்தாலுமே இறுதியில் வெற்றி பெறும் நாள்.
துலாம்-Thulam
கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலரைப் பொறுத்தவரையில், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு ஆக்கபூர்வமான புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்க இடம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகளை சிலர் கொள்முதல் செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
விருச்சிகம்-Viruchigam
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வர இடம் தராதீர்கள். குறிப்பாக யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். பிற்பகலுக்கு மேல் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
தனுசு-Thanusu
இன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பணவரவில் திருப்தி காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும்.
மகரம்-Magaram
மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்-Kumabm
தாமதமான செயல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வர். வாகன வகையில் சிறிய செலவினங்கள் ஏற்படலாம். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு உண்டு. வருமானம் ஓரளவே திருப்தி தரும். மொத்தத்தில், அலைச்சல் இருந்தாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது.
மீனம்-Meenam
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.