Thursday, December 7, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-ரிஷபம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே!!!

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் இப்போது 10-ஆம் இடமான கும்பத்துக்கு செல்கிறார்.

குருவின் விசேஷ பார்வைகளான 5, 7, 9-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு முறையே 2, 4,6-மிடத்தில் விழும். இந்த அமைப்பின்படி உங்களுக்கு உழைப்புக்கு ஏற்ப உயர்வுகளை தரக்கூடியதாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும். எந்த சமயத்திலும் தன்னம்பிக்கையோடு இருந்தால் தலை நிமிர்ந்து நடக்கலாம்..

 • ரிஷப ராசியினர் அன்பானவர்கள்.
 • அழகான கண்களை உடையவராக இருப்பர்.
 • இவர்களது குடும்பம் நையாண்டி பேச்சுடைய குடும்பமாக இருக்கும்.
 • தங்கை அமைதியாக இருப்பாள்.
 • தாயார் மிகக் கண்டிப்பானவராக அமைவார்.
 • இவர்களது பரம்பரை ஏதோ ஒரு வகையில் சிறப்பும், புகழும் மிக்கதாக இருக்கும். வெப்பம் கலந்த வியாபாரம் செய்வர்.
 • சிலர் பிறரிடம் பழகும்போது கடுமை காட்டி இன்முகமின்றி பழகுவர்.
 • சிலரது வாழ்க்கை துணை சற்று பொல்லாதவராக அமைவார்.
 • சிலரது இலட்சியம் சிலசமயம் சறுக்கலை தரும்.
 • தந்தை சோம்பலுடன், அதிக நேரம் தூங்குபவராக அமைவார்.
 • தொழில் பார்க்குமிடம் அழுக்கு, பிசுக்கு நிறைந்ததாக இருக்கும்.
 • பலரது மூத்த சகோதரர் நியாய தர்மம் பேசிய வீணாகப் போவார்.
 • திருமணம் அநேக பெயரை வெளியூர், வெளிநாடு செல்ல வைக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022

குரு இருப்பிட பலன்:


பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்பது ஜோதிட வாக்கு. உங்களின் பத்தாமிடத்தில் புண்ணிய குருவே அமர்ந்துள்ளார். குரு ரிஷப ராசிக்கு 8 மற்றும் பதினோராம் 11 அதிபதி. இந்த நிலை பெற்று குரு பத்தில் அமரும்போது தொழில் நிலையை பெருக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் குரு 8மிடத்தின் அதிபதியாகவும் இருப்பதால் தொழிலில் சற்று மறைவு தன்மையான செயல்கள் நடக்கும்.

 • தொழில் ஆரம்பிக்க லஞ்சம்கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது கள்ளக் கணக்கு எழுத வேண்டியிருக்கும். தொழிலில் வரியை குறைத்து காட்ட சில குறுக்கு வழிகளை செய்ய வேண்டியிருக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-ரிஷபம்
குருவின் பார்வை பலன்

குருவின் ஐந்தாம் பார்வை பலன்

குரு தனது ஐந்தாம் பார்வையால் 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இரண்டாம் இடம் என்பது வாக்கு ஸ்தானம். வாக்கு சுத்தம் என்றால் வாழ்வும் சுகம்தான். பொய் பேசாதவர்கள், சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்கள், காசு பண விஷயத்தில் நேர்மையானவர்களை இந்த உலகம் தனி மரியாதையோடு மதிக்கும்.

இப்போது ரிஷப ராசியின் 2-ம் இடத்தை குரு பார்ப்பதால் இந்த மரியாதையை குரு பகவான் உங்களுக்கு தாராளமாக வழங்குவார். இவ்வளவு நாள் எப்படி இருந்தாலும் இப்போதைய குரு பார்வை உங்களின் வாக்கை காப்பாற்ற உதவும்.

குரு பார்வை பெறுவதால் பேச்சில் உறுதித் தன்மை வெளிப்படும். இந்த ஆற்றல் மிக்க பேச்சால் வழக்கறிஞர், ஜோதிடர், ஆசிரியர், பேராசிரியர், அரசியல் பேச்சாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் போன்ற தொழில் செய்வோர் கம்பீரம் பெறுவர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆதாயம் பெறுவர். அதேபோல் வங்கி சேவையில் இருப்போர் நலம் காண்பர்.

இதுவரையில் குடும்பத்தில் இருந்த குழப்பங்களை குரு அழகாக தீர்த்து வைப்பார்.

கண்களில் பார்வை பலம் பெறும். முகம் ஜொலிஜொலிக்கும். அசையும் சொத்துக்களை வாங்குவீர்கள். இரண்டாம் இடம் என்பது உணவுக்கான இடம் குரு கொழுப்பை குறிப்பவர். எனவே சத்தான உணவுகளை சாப்பிட ஆரம்பிப்பீர்கள். வருமானத்தை இன்னுமின்னும் எவ்வாறு பெருக்கலாம் என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்

ரிஷப ராசியின் 4-ஆம் இடமான சிம்மத்தில் குரு தனது ஏழாம் பார்வையால் நோக்குகிறார்.
இந்த கும்ப குரு எவ்வித வாழ்வுப் படிகளில் உள்ளவர்களையும் அவரவர் நிலைக்கேற்ப வீடு வாங்க வைத்துவிடுவார். மேலும் விவசாய நிலங்கள், பண்ணை, தோட்டம், பம்செட், கிணறு, குட்டை என இவற்றையும் கொடுப்பார்.
ரிஷப ராசி பெண்கள் தாயாகும் பாக்கியம் பெறுவர். ரிஷப ராசிக்காரர்களின் தாயாரின் உடல் நலம் மேன்மை அடையும்.உங்கள் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை தீரும்.

மாணவர்களின் கல்வி ஈடுபாட்டை குருபகவான் அதிகரிக்க செய்வார். அரசு சார்ந்த வாகனம் கிடைக்கும். எனில் உங்களுக்கு அரசின் உயர் பதவி கிடைக்கும் என்று அர்த்தமாகிறது. பள்ளி கல்லூரி என கல்வி தாளாளர்களாக இருப்பவர்கள் அரசின் மூலம் ஆறுதலும், நஷ்ட ஈடும், முன்னேற்றமும் பெறுவீர்கள்

குருவின் 9ம் பார்வை பலன்

ரிஷப ராசியின் 6ம் வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்க்கிறார். 6-ஆம் இடம் என்பது கடன் ,நோய், எதிரி ஸ்தானம். குருவின் பார்வைக்கு பெருக்கும் குணமும் உண்டு. அப்படியாயின் கடன் பெருகுமா என்றால்? பதில் ஆம்! எனினும் மற்ற கிரக பார்வைக்கும் குரு பார்வை வித்தியாசம் உள்ளது. குரு பார்வை கடன் வாங்க செய்தாலும் அது சுப கடனாகவே இருக்கும்.

முதலில் வீடு வாங்க கடன் பெறுவீர்கள் இது முதலீட்டுக் கடன். வேலையில் சேர டெபாசிட் பணத்துக்கு கடன் வாங்குவீர்கள் இது வாழ்வு முன்னேற்ற கடன். திருமணம் செய்ய கடன் வாங்குவீர்கள் இது சுபக் கடன். நோயிலிருந்து விடுபட கடன் வாங்கி மருந்து மாத்திரை வாங்குவீர்கள் இது ஆரோக்கிய கடன் இதுபோன்ற கடன் வாங்கினாலும் அதில் கிடைக்கும் நன்மை பெரிதாக இருக்கும்.

6-மிடம் வேலைக்குரிய இடம் எனவே இதுவரை வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை அமையும். அந்த வேலை வெளிநாட்டு சம்பந்தம் கொண்டதாகவும், ந மனிதவள மேம்பாடு கொண்டதாகவும், கொஞ்சம் அரசியல் சம்பந்தம் கொண்டதாகவும் அமையும்.

6-ஆம் இடத்தில் ஒரு காரகமான எதிரி பெருக்கம் ஏற்படினும் குருபகவான் எதிரிகளிடமிருந்து உங்களை காப்பாற்றி விடுவார்.

6மிடம்நோய் ஸ்தானம் அதனையும் குரு பார்ப்பதால் நோய் பெருகுமா? எனில் இல்லை நோய் பெருகாது. நோய் தொந்தரவு கொஞ்சம் ஏற்பட்டாலும் அது கட்டுக்குள் வந்து விடும். இதற்கு காரணம் குரு உங்கள் எட்டாம் அதிபதியும் ஆவார். 6ம் இடத்தில் குரு நட்சத்திரமான விசாக ஓடுகிறது நோய் சிறிது தலை தட்டினாலும் குரு அதன் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவார். வயிற்றில் அஜீரண கோளாறுகள் அவ்வப்போது வந்து போகும்.

பரிகாரம்:

ஒருமுறை ஆலங்குடி சென்று சுவாமி, அம்பாள், தட்சிணாமூர்த்தியை வணங்கி விட்டு வாருங்கள்.

சனிக்கிழமைகளில் நரசிம்மரை வணங்குங்கள்.

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும்..

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular