Tuesday, May 21, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-சிம்மம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-சிம்மம்

சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!!!

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான மகரத்தில் இருந்து வந்த குருபகவான், இப்போது ஏழாம் இடமான கும்பத்துக்கு பெயர்ச்சி அடைகிறார்..

குருவின் விசேஷ பார்வைகளான 7-ஆம் பார்வை உங்கள் ஜென்ம ராசியான சிம்மத்திற்கும், ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வைகளால் முறையே 11 ,3-ம் இடங்களிலும் இருக்கும். இந்த அமைப்பு உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதேசமயம் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்..

சிம்ம ராசியினரின் பொதுவான குணங்கள்:

 • சிம்ம ராசியினர் கம்பீரமாக ‘ஈகோ’ உணர்வு கொண்டவராக தான் சொல்வதை எல்லோரும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என நிர்ணயிப்பார்.
 • இதற்கு ஏற்றார் போல் இவர்கள் குடும்பமும் படிப்பறிவு மிக்கதாக அறிவுக்கூர்மை கொண்டவர்களாக இருப்பர்.
 • இவர்களுடைய இளைய சகோதரி பார்க்க லட்சனமாக இருப்பாள்.
 • தாயார் சற்று கோப குணம் கொண்டவராக இருப்பார்.
 • இவர்களின் குலதெய்வம் அமைதியான தெய்வமாக அந்தணர்கள் வணங்க தக்கதாக இருக்கும்.
 • சிலரது தாய் மாமன் சோம்பேறியாக இருப்பார்.
 • இவர்களுடைய வேலையில் அழுக்கும், பிசுக்கும் இருக்கும்.
 • வாழ்க்கை துணை சற்று நிறம் குறைந்தவராக இருப்பார்.
 • இவருக்கும் வாழ்க்கை துணைக்கும் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்படும்.
 • சிலரது பழக்க-வழக்கங்கள், ஒழுக்கமின்மை அவமானத்திற்கு காரணமாக அமையும்.
 • தந்தை சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பார்.
 • இவர்களுடைய தொழில் அழகியலும் கலையும் சேர்ந்து இருக்கும்.
 • மூத்த சகோதரன் சற்று கோமாளி போல இருப்பார்.
குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-சிம்மம்

குருவின் பொதுப்பலன்கள்:

இந்த குரு பெயர்ச்சியில் சிம்ம ராசியின் ராசி வீட்டையும், லாப தைரிய ஸ்தானத்தையும், பார்ப்பதால் சிம்ம ராசியினர் வாழ்க்கைத்தரம் மிக உயரும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்:

குரு தனது ஐந்தாம் பார்வையால் சிம்ம ராசியில் லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.

முதலில் அரசியலில் எல்லோரும் தள்ளுங்க, நான்தான் ‘பஸ்ட்’ என இடித்துத் தள்ளி அவர்கள் அளவில் உள்ள முதல் இடத்தைப் பிடித்துவிடுவார். இதேபோல் பதவியில் இருப்பவர்களும் அரசு-தனியார் என எதில் இருப்பினும் கொடுக்க வேண்டியதை கொடுத்து பதவி உயர்வு வாங்கி விடுவர்.

இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு நிறைய மனை, வயல், தோட்டம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. கல்வி மேன்மை உண்டு. மாணவர்கள் எந்த உயர்கல்வியில் சேர வேண்டும் என்று நினைத்தார்களோ அவ்வண்ணமே சேர்ந்து விடுவார். சிலரின் கல்வியில் வெளிநாட்டு சம்பந்தம் உண்டு.

ஒரு சிலர் தியானம் கற்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களின் ஆன்மீக எழுத்துக்கள் புத்தகமாக வெளியிட ஆவண செய்வீர்கள்.

சமையல் போட்டியில் பங்கேற்கும் சிம்ம ராசியினர் முதல் பரிசு பெறுவர். சமையல் கலைஞர்கள் நன்மை பெறுவர்.

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-சிம்மம்

குருவின் ஏழாம் பார்வை பலன்:

குரு தனது ஏழாம் பார்வையால் சிம்ம ராசியை பார்க்கிறார்

உங்களின் தனித்தன்மை மிளிரும், ஒவ்வொரு நொடியும் ‘ஈகோ’வழியும். சிலர் எந்த இடத்திலும் நான்தான் தலைமை தாங்குவேன் என அடம் பிடிப்பார்கள். நல்லதோ கெட்டதோ இவர்கள் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டும் எனும் தீரா ஆவல் இருக்கும். சிம்ம ராசி பெண்களும் கெத்து காட்டுவதில் குறை வைக்க மாட்டார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள மெனக்கெடுவார். அழகு பொருட்கள், வாசனை பொருள்கள் உபயோகம் அதிகம் இருக்கும். நல்ல ருசியான உணவு உண்பர். நகைகள் வாங்குவர், விதவிதமான ஆடைகள் வாங்கி பயன்படுத்துவர்.கலைத்தொழில் சம்பந்தமான கலைஞர்கள் மிக மேன்மை அடைவீர்கள். சிலர் அதன் தயாரிப்பாளர்களாக முதன்மை இடத்தை பிடிப்பீர்கள். உங்கள் புகழ் திக்கெட்டும் பரவ நீங்களே காசு கொடுத்து விளம்பரம் செய்வீர்கள்

குருவின் 9ம் பார்வை பலன்:

குரு தனது 9ம் பார்வையால் சிம்ம ராசியின் மூன்றாம் இடத்தைப் பார்க்கிறார்..

3-ஆம் இடம் என்பது வீர,தீர,தைரிய, வீரிய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம். உங்கள் மனதிலும் புத்தியிலும் தைரியம் பொங்கி பெருகும். ஒரே நிமிடத்தில் எல்லாத்தையும் சரி பண்ணி விடுவேன் என்று கூறும் அளவுக்கு தைரியம் இருக்கும். சிலர் செய்யும் தொழில் செய்யும் இடத்தில் என்னை கேட்காமல் ஒரு தூசு நகரக் கூடாது என ஆணை இடுவர்.

உங்களது இளைய சகோதரம் அவர் பங்குக்கு தூள் கிளப்புவார். அவரின் திருமணத்தை சிறப்பாக மிகச் சிறப்பாக நடத்துவீர்கள்.

சில பெண்கள் காதல் விஷயத்தில் ஈடுபடக்கூடும். அதனால் ஏற்படும் அவமானத்தையும் வாழ்வில் இதெல்லாம் ‘சகஜமப்பா’ என்று தட்டிவிட்டு தொடர்வார்கள்.

பரிகாரம்:

 • ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று தாயாரையும்,அரங்கனையும் ஆராதியுங்கள்.
 • கொடிமர கருடனை மறக்காமல் கும்பிடுங்க.
 • குலதெய்வத்தை தினமும் சிறிது நேரமாவது கும்பிடுங்க,
 • ஏழை மாணவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்,

குரு பெயர்ச்சி மனம்குளிர நன்மை தரும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular