Saturday, December 2, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கும்ப ராசி

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கும்ப ராசி

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கும்ப ராசி

சனி பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!!!

குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகரத்தில் இருந்தார். இப்போது அவர் உங்கள் ஜென்ம ராசியான கும்பத்துக்கு பெயர்ச்சியாகி வருகிறார்.

இது ஜென்ம குரு அமைப்பு. ஜென்மத்தில் குரு வந்தால் சங்கடம் தருவார், சஞ்சலம் ஏற்படுத்துவார், இப்படியெல்லாம் பலரும் சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. ஜென்மகுரு வந்தாலும் அவரவர் ஜாதகத்தில் உள்ள பிற கிரகங்களின் அமைப்பின் படியே முழுமையான பலன்கள் ஏற்படும் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள்

இந்த சமயத்தில் குருவின் தனிச்சிறப்பு பார்வைகள் ஆன 5,7,9-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு முறையே 5, 7, 9-ஆம் இடத் திலேயே பதியும். இந்த அமைப்பின் காரணமாக இது உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதேசமயம் எந்த செயலிலும் முழுமையான கவனமும் பொறுமையான செயல்பாடும் அவசியம்.

கும்ப ராசியினரின் பொதுவான குணநலன்கள்:

 • இந்த ராசியின் உருவம் கும்பம் ஆகும்.
 • இவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்வர்.
 • இவர்கள் குடும்பத்தினரால் கூட இவர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.
 • இவர்கள் குடும்பத்தினர் இனிமையான சொற்களும், தெய்வபக்தியும் நிரம்பியவர்கள்.
 • இளைய சகோதரர் முன் கோபியாக இருப்பார்.
 • தாய் அழகான கண்களுடன், அழகு மிக்கவராக இருப்பார். இவருடைய பரம்பரை சற்று அறிவு பூர்வம் கொண்டது.
 • இவர்களுக்கு அலைச்சலான பயணம், நீர் சம்பந்தமான வேலை அமையும்.
 • வாழ்க்கை துணை அரசு சம்பந்தம் கொண்டவராக அமைவார்.
 • இவர்களுடைய எதிர்மறையான புத்திசாலித்தனமே அவமானத்துக்கு காரணமாகும்.
 • தந்தை நல்ல மனிதத் தன்மையுடன் இருப்பார்.
 • இவர்களுடைய தொழில் நெருப்பு, மின்சாரம், செம்பு, மண் போன்றவை கலந்து இருக்கும்.
 • மூத்த சகோதரர் அமைதியும் ஆன்மீகமும் உடையவர்.
 • இவர்களுக்கு தூங்குவது மிகவும் பிடிக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்

கும்ப குருவின் பொது பலன்கள்:

இதுவரையில் கும்ப ராசிக்கு 12ல் விரயத்தில் அமர்ந்த குரு, இப்போது ராசியிலேயே அமர்ந்து உள்ளார். குரு உங்களுக்கு லாப-தனாதிபதி ஆவார். உங்களின் கும்ப ராசியில் குரு அமர்ந்துள்ளார். இது சனியின் வீடு.

குரு கும்ப ராசிக்கு 2, 11 -ன் அதிபதி. இரண்டாம் இடம் எனும் தனாதிபதி ராசியில் சஞ்சரிக்கும் போது உங்கள் வாக்கு வன்மை பலம்பெறும். நீங்கள் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்ன பலன் இருக்கும்.

இந்த குரு பெயர்ச்சியில் தன, லாபாதிபதி உங்கள் ராசியில் ஓடுவதால், பணவரவு செழிக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து தனப்பிராப்தி கிடைக்கும். குடும்ப மேன்மை அடையும். அசையும் சொத்துக்கள் வாங்குவீர்கள். அதிக அளவு ஃபிக்ஸட் டெபாசிட் செய்வீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் வரவேண்டிய பணம் வருதலும், எண்ணிய எண்ணம் நிறைவேறுதலும், குடும்ப முன்னேற்ற சிந்தனைகளும், அரசியல் முன்னெடுப்புக்கான முயற்சிகளும், எதிர்காலத் தேவைக்கு பணத்தை பத்திரப்படுத்தலும் என உங்களின் அனைத்து அபிலாசைகளும் அருமையாக நிறைவேறும்.

குருவின் பார்வை பலன்கள்:

குருவின் 5-ம் பார்வை பலன்:

கும்ப ராசியில் உள்ள குருபகவான் தனது 5ம் பார்வையால் ராசிக்கு 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். குரு 5-ஆம் இடத்துக்கு காரகர். ஒரு காரக கிரகம் தனக்கு உரிய காரக வீட்டை பார்ப்பது விசேஷம். இதனால் இவ்வளவு நாளும் வாரிசு ஏக்கம் கொண்டிருந்தவர்களுக்கு புத்திர யோகம் கிட்டும். உங்களது சில வாரிசுகள் ஏதேனும் தீய பழக்கத்தில் சிக்கிக்கொண்டு இருப்பின் அதிலிருந்து மீண்டு விடுவர்.

குரு பெயர்ச்சி பலன்கள்

சிலர் எதிர்மறை இன-மத ஆட்களோடு காதல் புரிய நேரிடும். ஒரு சிலருக்கு குழந்தைகள் கல்வி சம்பந்தமாக மந்திரி பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்க முடியாமல் தடைபட்டுக் கொண்டே இருப்பின் தற்போது அவை விற்று நல்ல லாபம் கிடைக்கும். குலதெய்வத்திடம் நேர்ந்து கொண்ட நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

குருவின் 7-ம் பார்வை பலன்:

குரு தனது 7ம் பார்வையால் உங்களின் ஏழாம் வீட்டை எட்டிப் பார்க்கிறார். ஏழாம் வீடு களத்திர ஸ்தானம். குரு பார்வை பட்ட களத்திர ஸ்தானம் உடனே வேலை செய்யும். ஆம் திருமணத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் ஆண் பெண்களுக்கு உடனடியாக கெட்டி மேள சத்தம் கேட்க ஆரம்பிக்கும். வரும் வரன் அரசு சம்பந்தம் கொண்டவராக இருப்பர்.வரன் பெயரில் சொந்த வீடு இருக்கும். தாய் தந்தையர் நல்லவிதமாக இருப்பார்.

உங்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்தால் வரும் வரன் சற்று தோரணையாக அதிகாரம் மிக்கவராக அமைவார். அதிர்ஷ்டத்தின் சாயல் அதிகம் படித்தவராக இருப்பார். சிலர் விவசாய வயல், தோட்டம்,பண்ணை ஆகியவற்றை வாங்கும் யோகம் பெறுவீர்கள். சிலர் கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்வீர்கள். வெளிநாட்டு வாகனம் வாங்ககூடும். திருமணவாழ்வு அதிர்ஷ்டத்தை அழைத்துவரும்.

குருவின் 9-ம் பார்வை பலன்:

குரு தனது 9ம் பார்வையால் கும்ப ராசியின் 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் என்பது அதிர்ஷ்ட யோக ஸ்தானம். இதனை பெருக்கும் தன்மை உள்ள குரு பார்க்கும் போது பலனின் வீச்சு அதிகமாக இருக்கும்.

கும்ப ராசியினர் தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். நல்ல தலைமைப் பதவிகள் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு இலவச விளம்பரம் கிடைக்கும். இதனால் உங்கள் வியாபாரம்,தொழில் மக்களின் பேசு பொருளாகி வணிகம் வீறுநடை போடும். வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூரில் உள்ள வீட்டை விட்டு நீங்கள் இருக்கும் ஒரு வீடு வாங்குவீர்கள்.

உங்களிடம் இருக்கும் பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வீர்கள். நகைக் கடைக்காரர்கள் முன்னேற்றம் காண்பர்.நிறைய மனைகள் வாங்கும் நிலை ஏற்படும். பொறியியல் கல்வி, கெமிஸ்ட்ரி, ஆன்மீகம் சார்ந்த கல்வி, கலை சார்ந்த கல்வி, மின்சாரம் சார்ந்த கல்வி என உயர் கல்வி கிடைக்கும்.

பிற மொழிக் கல்வி சிறக்கும். பிறமொழி கதை, இலக்கியங்களை தாய் மொழியில் மொழி பெயர்ப்பர். குருவின் பார்வை பெற்ற 9-ஆம் இடம் நிறைய நிறைய அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொண்டு வரும்.

பரிகாரம்:

 • இந்த காலகட்டத்தில் ஒரு முறை மந்திராலயம் சென்று ராகவேந்திர மகானை வணங்குங்கள்.
 • வியாழக்கிழமைகளில் பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
 • ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
 • உங்கள் வாழ்க்கை மணக்கும்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular