Rasi Palan Today-29.10.2021

மேஷம்-Mesham
இன்று உணவுக் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். குடும்பத்தில் அந்நிய நபர்களால் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளவும். எனினும் சமூகத்தில் உங்களது மதிப்பு உயரும். முயற்சியாலும், எதிர் நீச்சல் போட்டும், இன்று போராடி பல விஷயங்களில் நீங்கள் வெற்றியை பெற்று விடுவீர்கள்.
ரிஷபம்-Rishabam
இன்றைய தினத்தை பொறுத்தவரையில் செலவுகள் அதிகரிக்கும் தினம். எனினும் அனைத்தும் பெரும்பாலும் தேவையான செலவுகளாகத் தான் இருக்கும். சிலர் ஆபரணங்களை கூட வாங்கி மகிழ்வார்கள். இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். அலைச்சல் இருந்தாலுமே கூட முயற்சிக்கு தக்க பலன் உண்டு.
மிதுனம்-Mithunam
இன்று உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். பெரும்பாலும் தீமைகள் அகலும் நாள். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.

கடகம்-Kadagam
இன்று காலையில் சற்று மந்தமாக இருந்தாலும் பிற்பகுதியில் திடீர் பணவரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப் பெறும். மதியத்திற்கு மேல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை உண்டு. மதியத்திற்கு மேல் அலைச்சல் இருந்தாலும் கூட சென்ற காரியம் வீண் ஆகாது. எனினும் காலை பொழுதில் நிதானம் தேவை.
சிம்மம்-Simmam
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கன்னி -Kanni
புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
துலாம்-Thulam
பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். எனினும் சாதுர்யமாக எதிர்கொண்டால் சமாளித்து விடலாம்.

விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
தனுசு-Thanusu
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சிலருக்கு சகோதர வகையில் பிணக்குகள் வரலாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவுகள் வந்தாலும் கூட சமாளித்து விடுவீர்கள். எனினும், அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மகரம்-Magaram
தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும்.
கும்பம்-Kumabm
உத்வேகத்துடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் லாப கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்

மீனம்-Meenam
உங்களின் நற்குணங்களை பலரும் அறிந்து கொள்வர். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். சிக்கலான விஷயங்கள் கூட இறுதியில் ஒரு நல்ல முடிவுக்கு வரும் தினம்.