Friday, March 29, 2024
Homeஆன்மிக தகவல்ஸ்ரீநவ துர்க்கையின் சிறப்புகள்

ஸ்ரீநவ துர்க்கையின் சிறப்புகள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஸ்ரீநவ துர்க்கையின் சிறப்புகள்

மகிஷாசுரனின் அக்கிரமங்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தவள் ஸ்ரீ துர்க்காதேவி.

அவளை நவதுர்க்கை என்று பக்தர்கள் போற்றி துதிக்கின்றனர்.

அந்த நவதுர்க்கைகள்:
1.சாந்தி துர்க்கை

2.சபரி துர்க்கை

3.ஜாதவேதா துர்க்கை

4.ஜ்வாலா துர்க்கை

5.சூலினி துர்க்கை

6.வனதுர்க்கை

7.லவண துர்க்கை

8.ஆசுரி துர்க்கை

9.தீப துர்க்கை

என்று அழைக்கப்படுகிறார்கள் அவர்களது இயல்பு பற்றிய விவரம் பின்வருமாறு:

1.சாந்தி துர்க்கை
தட்சன் தான் செய்த யாகத்தின் போது சர்வேஸ்வரனுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. இதனால் சிவன் சினம் கொண்டு எழுந்தார். அந்த சினத்தை சாந்தி செய்தவளும், நோய் நொடிகளை ஒழித்து அமைதி அளிப்பவள் சாந்தி துர்க்கை எனப்படுகிறாள்.

2.சபரி துர்க்கை
வில்லவன் அர்ஜுனனுக்கு பாசுபதம் வழங்க ஈஸ்வரமூர்த்தி வேடனாய் உருவெடுத்து சென்றார். அப்போது துர்க்கை வேட்டு வச்சியாக மாறி ஆசி வழங்கினாள். இதனால் அவள் சபரி துர்க்கை எனபடுகிறாள்.

ஸ்ரீநவ துர்க்கையின் சிறப்புகள்

3.ஜாதவேதோ துர்க்கை
முருகப் பெருமான் ஜனனத்தின் போது ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய அக்னி பொறிளாக விழுந்தார். அந்த தீப்பொறிகளை வாயுபகவானும்,அக்கினி தேவனும் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தனர். அப்படி அவர்கள் செயல்பட அவர்களுக்கு மகாசக்தியை அளித்தவள் என்பதால்தான்ஜாதவேதோ துர்க்கை என போற்றி துதிக்க படுகிறாள்.

4.ஜ்வாலா துர்க்கை
பண்டாசுரன் என்னும் அரக்கனை ஒழிக்க போரிடும்போது. தனது படைகளை காக்கவேண்டியமையால் தானே தீப்பிழம்பு வடிவமாக தோன்றியமையால் ஜ்வாலா துர்க்கை எனப்படுகிறாள்.

5.சூலினி துர்க்கை
திரிபுரத்தை எரிக்கச் சிவபெருமான் வெகுண்டெழுந்து சென்றார். அப்போது அவருடன் துர்க்கை சூலாயுதத்தை ஏந்தி சென்றமையால் சூலினி துர்க்கை என்று போற்றப்படுகிறார்.

6.வனதுர்க்கை
நாம் செய்யும் பாவங்களை அழித்து ரட்சிப்பவளை வனதுர்கை என்று கூறலாம். பவாரண்ய குடாரிகா என்ற லலிதாசகஸ்ரநாமம் இதனை உணர்த்துகிறது.

அஞ்சான வாசம் முடிந்தும் பாண்டவர்கள் வன்னி மரப் பொந்திலிருந்து தங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அந்த மரத்தடியில் வைத்து பூஜித்தார்கள்.

வன துர்க்கையாகவும் எல்லா சங்கடங்களையும் அடக்கி ஒடுக்க நன்மை தருபவளாகவும் விளங்கும் தேவியை ஒன்பது நாட்களும் வழிபட்டனர். தசமியில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.

விஜயம் தரும் தசமி என்பதாலும் அர்ஜுனனாகிய விஜயனால் மிகவும் பயபக்தியுடன் பூஜிக்க பெற்றது என்பதாலும் இது விஜயதசமி என்று பெயர் பெற்றது.

இதனை விஜய நவராத்திரி என்றும், வன்னிய நவராத்திரி என்றும், வனதுர்க்கை நவராத்திரி என்றும் சொல்கிறார்கள்.

7.லவண துர்க்கை
ராமபிரான் வாழ்ந்த காலத்தில் லவணாசுரனின் அக்கிரமத்தை அழிப்பதற்கு சத்துருக்கனுக்கு துர்க்கை அருள்புரிந்தாள். இந்த உதவியால் அவள் லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

8.ஆசூரி துர்க்கை
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த அசுரர்களை மயங்கச் செய்து அந்த அமிர்தத்தை தேவர்கள் பருகிட செய்யும் ஆற்றலை திருமாலுக்கு துர்க்கை வழங்கினாள். இதனால் அவள் ஆசூரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

9.தீப துர்க்கை
குண்டலினி யோகியின் தவத்தை மெச்சி ஞான ஒளியை காட்டியமையால் தீப துர்கை என்று போற்றி வழிபடுகின்றனர்.

இந்த ஒன்பது நாமங்களில் அன்னை துர்கா தேவி பிரதிபலித்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பேரருள் தந்து காத்து ரட்சிக்கின்றாள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular