Thursday, March 30, 2023

Rasi Palan Today-22.11.2021

ASTRO SIVA

google news astrosiva

Rasi Palan Today-22.11.2021

image 8 Rasi Palan Today-22.11.2021
Rasi Palan Today-22.11.2021

மேஷம்-Mesham 

நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த லாபத்தை இறுதியில் போராடிப் பெறுவீர்கள்.. பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவால் பாராட்டு, பரிசு கூட கிடைக்கும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர். சிலர் ஆடை, ஆபரணம் கூட வாங்க இடம் உண்டு.

ரிஷபம்-Rishabam 

இன்று சிலருக்கு திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். நினைத்த காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும் நல்ல நாள்… இந்த நாள். வெற்றிகள் பல வகையில் உங்களுக்கு குவியும். முயற்சியால் முன்னேறி செல்வீர்கள்.

மிதுனம்-Mithunam 

இன்று கிரக சஞ்சாரத்தை வைத்துப் பார்க்கும் போது, நீங்கள் சீக்கிரம் களைப்பு அடைய இடம் உண்டு. எனினும் உங்கள் தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தி ஆகும். முடிந்தவரையில் சரும பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் தந்தையின் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய தினம் இன்று. வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானம் தேவை. தொழில் துறையினர் தவறான முடிவுகளை எடுக்காமல் கலந்து ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. செலவை சமாளிக்க கனகதாரா ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.

கடகம்-Kadagam 

இன்றைய தினத்தில் முற்பகுதி நன்மையை செய்யும் பிற்பகுதியில் பண விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள். எனினும் கூட்டிக் கழித்து எப்படிப் பார்த்தாலும் இந்த தினம் உங்களுக்கு நன்மைகளை அதிகம் தரும் தினமாகவே இருக்கும். அலைச்சல் அதிகம் இருந்தாலும் கூட அதனால் உங்கள் முயற்சி வீண் போகாது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அதற்கான நல்ல பலன் உண்டு. அனைத்து வகையிலும் ஏற்றம் தரும் நன்னாள் இந்நாள்.

சிம்மம்-Simmam 

இன்றைய நாளில் நாளின் முற்பகுதியை விட பிற்பகுதி சில நன்மைகளை கொண்டு இருக்கும். சிலர் செலவு செய்து ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். அதிலும் பிள்ளைகள் வழியில் சில தேவையான செலவுகளை செய்ய நேரிடலாம். மற்றபடி எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். நாளின் பிற்பகுதியில் நன்மைகள் மேலோங்க இடம் உண்டு.

கன்னி -Kanni

இன்றைய தினத்தை பொறுத்தவரையில் முற்பகுதியில் காரிய ஜெயமும், பிற்பகுதியில் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கும் பண வரவும் ஏற்பட இடம் உண்டு. தாயாரின் உடல் நிலையில் மட்டும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுதல் நலம். எனினும் எப்படிப் பார்த்தாலும் இந்த நாள் உங்களுக்கு அதிக நன்மைகளை செய்யும் நன்னாள் ஆகவே இருக்கும்.

துலாம்-Thulam 

உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம் பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள்.

விருச்சிகம்-Viruchigam 

முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்டவேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். பொறுமை தேவைப் படும் நாள்.

தனுசு-Thanusu 

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மகரம்-Magaram 

இன்றைய தினத்தில் புதிய செலவுகள் உங்களைத் தேடி வரலாம். பணத்தை பார்த்து செலவு செய்ய வேண்டி இருக்கும் நாள். சிலருக்கு வேண்டாத இடமாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு. சூரியனின் சஞ்சாரத்தால் அரசு விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். ராஜ கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனினும் முயற்சிக்கு தக்க பலன் இன்று உங்களுக்கு உண்டு. நாளின் முற்பகுதி நன்மையையும், பிற்பகுதி அலைச்சலையும் தரும்.

கும்பம்-Kumabm 

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.

மீனம்-Meenam 

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular