Homeஅடிப்படை ஜோதிடம்மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
Bride and groom with parents in background, portrait
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
- திருமண காலத்தில் எதையாவது விட்டுக் கொடுத்து திருமணம் புரிந்து கொள்வார்.
- முக்கியமாக மத சம்பிரதாயங்களையோ, அல்லது தங்கள் சொந்த கருத்துக்களையோ விட்டுக்கொடுத்த பின்னர் திருமணம் நடக்கும்.
- காதல் திருமணம்-மதம் மாறி திருமணம் இதை பெரியவர்களை செய்து வைக்கும் நிலை ஏற்படலாம்.
- ஆனால் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்.
- மனைவிக்கு அல்லது கணவனுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
- சட்டதிட்டங்களுக்கு இவர்கள் பணிந்தவர் போல் இருந்து மாறக்கூடிய மனநிலை உடையவர்.
- குருவை,சுக்கிரன்,புதன் சேர்ந்தால்-பார்த்தால் தான தர்மம் செய்தல்- திடீர் தனயோகம் வரும்.
- பாவர் பார்த்தால் சரியில்லை. யோகம் பங்கமாகலாம்.
- சிலருக்கு ஆண் வாரிசுகள் அதிகமாகலாம். பெண் வாரிசுகள் குறையலாம்.
- சந்திரன்-சுக்கிரன்-குரு-செவ்வாய் தசாபுக்தி அபகாரங்களில் வடக்கு-தெற்கு சம்பந்தப்பட்ட திசைகளிலிருந்து வரும் ஜாதகம் திருமணத்திற்கு ஏற்றதாக அமையும்.
- 2,5, 7, 11-ல் உள்ளவர். பார்த்தவர் தசாபுத்தி அபகார காலத்தில் திருமணம் நடக்கும்.
- சிலருக்கு வரும் மனைவி ஆண்தன்மை உள்ளவளாகவும், கடும் சொற்களை வீசுபவளாகவும் அமைவாள்.