- Advertisement -
புத்தாண்டு பலன்கள்-2022-ரிஷபம்
(கிருத்திகை 2,3,4-ம் பாதம்,ரோகினி, மிருகசீரிடம்1,2-ம் பாதம்)
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே , தன்னம்பிக்கையும் , தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
- உங்கள் ராசிக்கு 9 , 10 – க்கு அதிபதியும் தர்ம கர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடத்தில் 9 – ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள்.
- ஆண்டில் தொடக்கத்தில் குரு பகவான் 10 – ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் , ஜென்ம ராசியில் ராகு , 7 – ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் முதல் மூன்று மாதம் மட்டும் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது . குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது .
- பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11 – ல் சஞ்சரிப்பதும் , 12-4-2022 – ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் கேது உங்கள் ராசிக்கு 6 – லும் ராகு 12 – லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும் .
- பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும் .
- எடுக்கும் காரியங்கள் அனைத் திலும் வெற்றியினைப் பெறமுடியும்.
- தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுப முயற்சிகளில் தடை விலகி நல்லது நடக்கும்.
- சிறப்பான வரன்கள் தேடி வருவதால் நல்ல வாழ்க்கை அமையும் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும் .
- கணவன்- மனைவியிடையே நீண்ட நாட்களாக இருந்தத கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் .
- பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் .
- நவீன பொருட்களையும் , அசையும் , அசையா சொத்துகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும் .
- சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்
- பணம் கொடுக்கல்- வாங்க . போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாட் காணமுடியும் கடன் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாக குறையும் தொழில் , வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபம் பெருகும் .
- கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பதுமூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.
- பெரிய மனிதர்களின் நட்புகள் நற்பலன்களைத் தரும் என்றாலும் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது உத்தமம் .
- உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பி இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர்பதவிகளும் கிட்டும்
- வெளியூர் , வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும்
- புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.
- Advertisement -