Friday, September 29, 2023
Homeராசிபலன்புத்தாண்டு பலன்கள்-2022ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-மிதுனம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-மிதுனம்

ASTRO SIVA

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-மிதுனம்

(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள் ,திருவாதிரை,புனர்பூசம்1,2,3-ஆம் பாதங்கள்)

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே!!! சிறப்பான அறிவாற்றலால் பலரை வழிநடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  • 2022 – ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி 8 – ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுகிறது . இதனால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
  • குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
  • பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொள்வது உத்தமம்.
  • கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.
  • உற்றார் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் அவர்கள் மூலம் நற்பலன்களை அடையமுடியும்.
  • சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6 – ல் 12-4-2022 முடிய சஞ்சரிப்பதாலும் , அதன் பின்பு ஏற்படும் சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 11 – ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதாலும் எதையும் ஓரளவுக்கு சமாளிக்ககூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.
  • எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
  • ஆண்டுக் கோளான குரு பக ன் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9 – ல் 13-4-2022 முடிய சஞ்சரிப்பதால் முதல் மூன்று மாதங்கள் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும்.
  • திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்டால் அனுகூலப்பலனைப் பெறமுடியும்.
  • தொழில் , வியாபாரரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்குஅனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
 புத்தாண்டு பலன்கள்-2022-மிதுனம்
புத்தாண்டு பலன்கள்-2022-மிதுனம்
  • லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10 – ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது , முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது உத்தமம்.
  • எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் , வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும்.
  • கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தி பெருகும்.
  • எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
  • பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை.
  • உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் காலம் என்பதால் உங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular