- Advertisement -
ஆங்கில புத்தாண்டு பலன்கள் -2022-கடகம்
(புனர்பூசம்4-ஆம்பாதம்,பூசம்,ஆயில்யம்)
அன்புள்ள கடக ராசி நேயர்களே , விடா முயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றிகளை குவிக்க கூடிய திறமைசாலிகளான உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
- 2022 – ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆண்டுக்கோளான குரு உங்கள் ராசிக்கு8- ல் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேற்றங்களை அடையமுடியும்.
- முதல் மூன்று மாதங்கள் பொருளாதார ரீதியாக சிறிது நெருக்கடி தேவையற்ற அலைச்சல் , இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும்.
- தொழில் , வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலனை அடைய இடையூறு ஏற்படும்.
- வேலைபளு காரணமாக உடல் அசதி உண்டாகும்.
- உங்கள் ராசிக்கு 8 – ல் சஞ்சரிக்கும் குரு பகவான் 13-4-2022 முதல் பாக்கிய ஸ்தானமான 9 – ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குரு மாற்றத் திற்குப் பிறகு உங்களின் பெயர் , புகழ் , செல்வம் , செல்வாக்கு மேலோங்கும்.பொருளாதார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு ஏற்படும்.
- கடன் பிரச்சினைகள் எல்லாம் விலகி சுபிட்சம் ஏற்படும்.
- மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும்.
- எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
- எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும்.
- மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.
- கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
- சொந்த பூமி , மனை வாங்கும் வாய்ப்பு அமையும்.
- பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
- பணம் கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.
- பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும்.ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
- தொழில் , வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும்.
- வெளியூர்வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
- கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
- உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும் , உயர் பதவிகளையும் பெறுவார்கள்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும்.
- ராகு உங்கள் ராசிக்கு ஆண்டுத் தொடக்கத்தில் 11 – ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றா லும் 12-4-2022 – ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 10 – ல் , கேது 4 – ல் சஞ்சரிக்க உள்ளதால் சில நேரங்களில் தேவையற்ற அலைச்சல் , இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம்.
- என்றாலும் குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வளமான பலனை அடைவீர்கள்.
- ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 7 – ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
- குடும்பத்தில் விட்டுகொடுத்துச் செல்வது கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனத் துடன் செயல்படுவதுமூலம் நற்பலனை அடையமுடியும்.
- உங்கள் ராசிக்கு 7 – ல் சஞ்சரிக்கும் சனிபகவான் வரும் 29-4-2022 முதல் 12-7-2022 வரை அஷ்டம ஸ்தானமான 8 – ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
- Advertisement -