ராகுவும்-திருமணமும்
லக்கினத்திற்கு 7ல் ராகு
- லக்கினத்திற்கு 7 – ல் ராகு இருப்பின் அரசாங்க எதிர்ப்பு என்றும் இருக்கும்.
- இடம் மாறிக் கொண்டே இருப்பார்.
- பூர்வீக சொத்துக்கள் விரயமாகும்.
- வேலை ஆட்களால் தொந்திரவும் அவர்களால் கஷ்டமும் , ஆத்ம நண்பர்கள் விலகலும் நேரும்.
- குடும்பத்தில் பல தொல்லைகள் நேரும்.
- செலவுகள் கட்டுக் கடங்காது.
- கடும் உழைப்பிற்கு பின்னும் மனம் அமைதி அடையாது.
- வறுமை நீங்காது .
- பெண்களால் பண விரையம் , தாய்க்கு கண்டம் , அல்லது மாரகம் , கணவன் மனைவி மன வேற்றுமை , குழந்தை பிறப்பு சிரமத்தின் பேரில் ஏற்படலாம்.
- தம்பதிகளில் யாராவது ஒருவர் நோய் வாய்ப்பட்டுக் கொண்டே இருப்பார்.
- குடும்ப அமைதி குறைவு , பெண் களால் அவமானமடைதல் , பொருளை இழந்து தரித்திரனாவான்.
- சுபக்கிரக சேர்க்கை பார்வை இருந்தால் மேலே சொன்ன பலன்கள் மாறி நல்லதாக நடக்கும்.
- அற்ப புத்தி உடையவன்.
- விதவைப் பெண் மூலம் தனம் சேர்ப்பான்.
- அடிக்கடி மனைவிக்குக் கண்டம் ஏற்படலாம்.
- செய்யும் காரியம் அநேகமாக தோல்வி அடையாது.
- மனைவி க்கு கருத்தடை ஆபரேசன் ( அ ) குடல் சம்பந்தப்பட்ட கருப்பை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். பாவக்கிரகங்கள் – சேர்க்கை – பார்வை இருந்தால் நிச்சயம்.
- சுபக்கிரசு சேர்க்கை – பார்வை இருந்தால் பாதிப்புகள் வராது.
- இரு மனைவிகள் ஏற்படலாம்.
- இவர் தசா புத்தியில் புத்திர நாசம் மனைவி நாசம் – ககம் , தனம் இவற்றையும் தருவார்.
- தேக ஆரோக்கியமற்று – தாய்ப்பால் அற்ற மனைவி அமைவாள்.
- மனைவிக்கு உதர ரோகம் ஏற்பட்டு தொல்லை தரும்.
- பொதுவாக இந்த ஜாதகன் மனைவிக்கு அடங்கியவன்.வீடு , நிலம் உள்ளவள்.
- மனைவி வரும் திக்கு– கிழக்கு அல்லது மேற்கு
- மனைவியின் குணம்– கெட்ட குணம்
- மனைவியின் நிறம் – ஸ்தானாதி பதியின் நிறம் மனைவி வரும் தூரம் – சுமார் 70 மைலுக்குள் , கணவன் அல்லது மனைவி நீச்சத் தொழில் புரிவோர் .
- Advertisement -