Thursday, December 7, 2023
Homeராசிபலன்புத்தாண்டு பலன்கள்-2022ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-சிம்மம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-சிம்மம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-சிம்மம்

(மகம்,பூரம் உத்திரம் -1ம் பாதம்)

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே , அஞ்சா நெஞ்சமும் தாராள மனப் பான்மையும் , பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • 2022 – ஆம் ஆண்டு ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 6 – ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் , வரும் 12-4-2022 முதல் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 – ல் கேது சஞ்சரிக்க இருப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
  • நீங்கள் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு முன்னேற்றங் களைப் பெறுவீர்கள்.
  • எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும்.
  • பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப்பாகக் கையாண்டு முன்னேற்றங்களை அடைவீர்கள்.
  • தொழில் , வியாபாரம் செய்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல வாய்ப்புகள் பெறமுடியும்.
  • உங்களின் முயற்சிகள் நற்பலனைத் தரும்.
  • கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சினைகள் மறைந்து அபிவிருத்தி பெருகும்.
  • நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களால் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த உயர்வுகளைத் தடையின்றி அடைய முடியும்.
  • உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
  • தேவையற்ற பயணங் களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்து கொள்ளமுடியும்.
 புத்தாண்டு பலன்கள்-2022-சிம்மம்
புத்தாண்டு பலன்கள்-2022-சிம்மம்
  • புதியவேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும் .
  • 13-4-2022 வரை ஜென்ம ராசிக்கு 7 – ல் குரு சஞ்சாரம் செய்வதால் இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்கள் உங்களின் பொருளாதாரநிலைமிக சிறப்பாக இருக்கும்
  • திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடி வரும்.
  • குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும்.
  • சிறப்பான பண வரவால் அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் , குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.
  • உங்கள் ராசிக்கு 7 – ல் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13-4-2022 முதல் அஷ்டம ஸ்தான மான 8 – ல் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்கமுடியும் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது , ஆடம்பரச் செலவுகககளக் , குறைந்து கொள்வது நல்லது.
  • உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு வீன் செலவுகள் ஏற்படும்.
  • கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் உற்றார்- உறவினர்கரிடம் விட்டும் கொடுத்து நடந்துகொண்டால் அவர்கள்மூலம் அனுகூலப்பலனைப் பெறமுடியும்.
  • ஆண்டின் தொடக்கத்தில் 4 , 10 – ல் சஞ்சரிக்கும் கேது , ராகு 12-4-2022 – ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின்மூலம் ராகு 9 – லும் , கேது 3 – லும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் சற்று குறையும்.வெளியூர் , வெளிநாடு மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular