Friday, March 29, 2024
Homeஜோதிட தொடர்உங்களுக்கு ஏற்ற தொழில் எது ?

உங்களுக்கு ஏற்ற தொழில் எது ?

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

உங்களுக்கு ஏற்ற தொழில் எது ?

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒருவரின் தொழில் நிலையை எடுத்துக் கூற பல முறைகள் சொல்லப்பட்டு உள்ளது. இன்னவர் இன்ன தொழில் செய்வார், இன்ன தொழில் தான் ஜாதகருக்கு கை கொடுக்கும்.இக் காலத்தில் இவருக்கு தொழில் கிட்டும். ( அ ) சுய தொழில்செய்வார் , அத்தொழி லானது இவ்வகையை சார்ந்ததாக இருக்கும் என யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையை கண்டு வெறுப் படைந்து இக்கலையை தூற்றும் அனேகரை நாம் பார்க்கிறோம்.

பல ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் தம் கருத்துக்களை நூல் வடிவிலும் கட்டுரை வடிவிலும் எழுதி வந்து உள்ளனர் . இதன் மூலம் ஒரு தெளிவு ஏற்படாத நிலையே உள்ளது.காரணம் ஜோதிட கலையானது உருவான காலந்தொட்டே 3,5,10 ஆம் பாவத்தில் தெரியக்கூடிய உடன் பிறப்பு நிலை , போக சுகம் , புத்திர பாக்கியதன்மை செய்யும் தொழில் நிலை போன்றவைகளை மறைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.இவ்விஷயமாக அன்னை உமையவளுக்கு ஒரு சமயத்தில் கோபம் ஏற்பட்டு அச்சாபத்தால் மறைக்கப்பட்டதாக புராண கதைகள் மூலம் அறிகிறோம்.

இலை மறைகாயாக மறைக்கப்பட்டு உள்ள 3 , 5 , 10 ஆம் பாவத்தன்மைகளை அன்னை உமையவளின் அருள் கொண்டு தெளிவான ஆய்வு செய்து பார்க்கும் போது ஓரளவு பலன் சரியாக வந்தமையால் தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

பொதுவாக ஒருவரின் தொழில் நிலையை காண அவர் பிறந்த லக்கினத்திற்கு தொழில் பாவ ஸ்தானாதிபதியான 10 ஆம் இடத்தின் அதிபதியானவர் நவாம்ச சக்கரத்தில் எந்த ராசியில் உள்ளாரோ அந்தராசி அதிபதியின் காரகத் தன்மையில் வரும் தொழில்கள்தான் ஜாதகருக்கு ஏற்படும் என சொல்லப்பட்டு உள்ளது .

இதே போல சந்திரனுக்கு ( சந்திரன் நின்ற வீட்டிற்கு ) 10 – ம் இடத்தின் அதிபதி நவாம்ச சக்கரத்தில் எந்த ராசியில் உள்ளாரோ அந்த ராசியின் அதிபதியின் தொழில் நிலைகளை அவர் செய்வார் என்றும் உள்ளது . இதில் லக்கினம் ( அ ) சந்திரன் அமைந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்து 3 , 6 , 8 , 12 ல் அமராமல் சூன்ய தன்மை பாதகதன்மை பெறாமல் யார் உள்ளார்களோ அதன்படி மேல் சொல்லிய முறையில் பார்த்து தொழிலை அறிந்து கொள்ளலாம் என சொல்லப்பட்டு உள்ளது .

 உங்களுக்கு ஏற்ற தொழில் எது

லக்கினம் அமைந்த இடம் அதன் அதிபதி , சந்திரன் அமர்ந்த இடம் அதன் அதிபதி இருவரும் பலம் இழந்து விட் டால் , கதியான சூரியனுக்கு அதாவது சூரியன் அமர்ந்த இடத் திற்கு 10 – ம் இடத்தின் அதிபதியானவர் நவாம்ச சக்கரத்தில் எந்த ராசியில் உள்ளாரோ அந்த ராசியின் அதிபதிக்குட்பட்ட தொழில்களை சொல்லலாம் எனவும் .லக்கினம் சந்திரன் , சூரியன் போன்ற மூன்றின் தன்மையும் மேலே சொல்லப்பட்டது போல் 3 , 6 , 8 , 12 -ல் சென்று இருப்பினும் சூன்ய பாதக தன்மை பெற்று இருப்பின் நிலையற்ற தொழில் , பல விதமான தொழில் , எத்தொழிலும் பிடிப்பு இல்லா நிலையோடு எப்படியோ வயிற்றை கழுவும் நிலை உடையவர் ஆவார் என சொல்ல வேண்டி யுள்ளது.

ஒரு கிரகத்திற்கு கிட்டத்தட்ட 125 வகை தொழில்கள் சொல்லப்பட்டு உள்ளது . இதில் எதை குறிப்பாக எடுத்துக் கொண்டு சொல்வது . இது ஒரு பெரும் கேள்விக் குறியான விசயம் . இதற்கு ஒருவாறு முடிவு காணவே இவ்வாராய்ச்சியில் ஏறக்குறைய 70 நூல்களை பார்வையிட்டு எல்லாவற்றையும் கோர்வை படுத்தி அனுபவத்தோடு யுக்தியும் இணைந்து கருதிகளையும் கையாண்டு கொடுக்க பட்டுள்ளது.

முதலில் ஒவ்வொரு ராசிகளிளும் குறிப்பிடும் தொழில் விவரங்களைப் பார்ப்போம்

மேஷ ராசி தொழில் 
  • ராணுவம் ,
  • காவல்துறை ,
  • தொழிற்சாலை ,
  • நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் ,
  • டெக்ஸ்டைல்ஸ் ,
  • ஆக்கிணை ,
  • அதிகாரவர்க தொழில்கள்,
  • விவசாயத் துறையினர் ,
  • பொறியியல் துறை ,
  • மருத்துவத் துறை ,
ரிஷப ராசி தொழில் 
  • கோர்ட் ,
  • ரயில்வே ,
  • கார் ,
  • வாசனை பொருள்கள் ,
  • பிளாஸ்டிக் ,
  • கண்ணாடி சம்பந்தப்பட்டது ,
  • பால் ,
  • புகைப்படம் ,
  • பெட்ரோல் ,
  • சங்கீதம் ,
  • சர்க்கரை ,
  • விவசாயம் ,
  • புஷ்பம் ,
  • ஆபரணம் ,
  • பட்டு ,
  • ஜோதிடம் ,
  • கலைத்துறை ,
  • கால்நடை பண்ணை ,
  • ஸ்திரீ சம்பந்தப்பட்டது .
  • குளிர்ச்சியான வஸ்துகள் தயாரிப்பு மயக்க வஸ்துக்கள் தயாரிப்பு .
மிதுன  ராசி தொழில் 
  • தபால்துறை ,
  • கம்பி இல்லைா தந்தி ,
  • ரேடியோ ,
  • ஏஜெண்ட் ,
  • கான்ட்ராக்டர் ,
  • போக்குவரத்து தொழில் விமானம் , எழுத்தாளர் ,
  • பேச்சாளர் ,
  • விற்பனையாளர் ,
  • கடினமான வேலை ,
  • அச்சுக்கூடம் ,
  • விளம்பர இலாக்கா
  • கல்வித்துறை ,
  • சர்க்கஸ்
  • வித்தை ,
  • கணக்கர் ,
  • ஏமாற்றும் தொழில் ,
  • விஷ சம்பந்தப்பட்ட வகை தொழில்கள் . அரவையந்திரம் ,
  • அரிசி ,
  • சணல் ,
  • தவிடு ,
  • தினசரி வருமானம்
கடக  ராசி தொழில் 
  • நீர் சம்பந்தப்பட்டது ,
  • ஏற்றுமதி , இறக்குமதி , கப்பல்துறை , மீன்வளம் ,
  • குளம் , கிணறு வெட்டுதல் ,
  • நகரசபை வேலைகள் ,
  • கால்நடைத் தொடர்பு ,
  • முத்து எடுத்தல் ,
  • விஷப் பொருள்கள் ,
  • அரவையந்திரம் ,
  • அரிசி , சணல் , தவிடு ,
  • தினசரி வருமான வகைத் தொழில்கள் .
சிம்ம  ராசி தொழில் 
  • சுகாதாரத்துறை ,
  • மருத்துவத்துறை ,
  • அரசாங்க வகை தொடர்பு உருக்கு சம்பந்தப்பட்டது .
  • ஆபரணம் தயாரித்தல் ,
  • காடு , மேடுகளில் விளையும் பொருட்களின் தொழில் வகை ,
  • தந்தை வர்காதி , தொழில்வகை
  • நிர்வாக , பதவிவகிக்கும் தொழில்வகை .
கன்னி  ராசி தொழில் 
  • தேர்தல் இலாக்கா ,
  • போட்டி போடும் தொழில் ,
  • அச்சுக் கூடம் ,
  • கடிதத்துறை ,
  • பத்திரிக்கை ,
  • பொறியியல் நிபுணர் ,
  • குமாஸ்தா ,
  • ஆடிட்டர் ,
  • ஆசிரியர் , புரபஸர் ,
  • லாகிரி வஸ்துக்கள் ,
  • தரகு ,
  • குளிர்ச்சியான வஸ்துகளை தயாரிக்கும் தொழில் வகை.
 உங்களுக்கு ஏற்ற தொழில் எது
துலாம் ராசி தொழில் 
  • இனிப்பு வகை ,
  • மளிகை ,
  • சணல் , துணி , புஷ்பம் மைக்கா ,
  • தச்சு வேலை ,
  • கால்நடை சம்பந்தம் ,
  • சங்கீதம் , கலைத் துறை ,
  • வர்ணம் பூசும் தொழில் ,
  • நீதி வழங்கும் தொழில் துறை ,
  • கருவி இயக்கும் முறை .
விருச்சிக ராசி தொழில் 
  • ஆஸ்பத்திரி ,
  • காபி கிளப் ,
  • ஆடு , மாடு , ரசாயனம் ,
  • சுரங்கம் , அணைக்கட்டு தொழில் , ராணுவ அதிகாரி ,
  • காவல்துறை அதிகாரி .
  • மது , நீர் பானம் தயாரித்தல்,
  • இன்சூரன்ஸ்,
  • விஷ சம்பந்தப்பட்டது,
  • போக்குவரத்து துறை,
  • குத்தகை,ஆர்டர் சேகரிப்போர்,
தனுசு ராசி தொழில் 
  • தகரம் , மஞ்சள் ,
  • ஆராய்ச்சித்துறை ,
  • விஞ்ஞானி ,
  • தர்மகர்த்தா ,
  • புரோகிதர் ,
  • பூசாரி ,
  • நீதிபதி ,
  • பாரமரிப்பு தொழில் ,
  • வெளிநாட்டு தொடர்பு ,
  • பிரசங்கம் ,
  • சத்தான பொருள்கள் ,
  • உணவு வகை தயாரிப்பு குழந்தைகளுக்கான போஷாக்கு தயாரிக்கும் துறை , வேட்டையாடுதல் .
மகர ராசி தொழில் 
  • கண்காணிக்கும் தொழில் ,
  • காற்றின் அழுத்த வேலைகள் ,
  • பம்பு , கருமார் தொழில் ,
  • சத்திரம் , கல்யாண மண்ட பம் , சிறைச்சாலை ,
  • சுடுகாட்டில் வேலை ,
  • எரிபொருள்கள் ,
  • ஜலம் சம்பந்தப்பட்டது .
  • வதைக்கும் அறுக்கும் தொழில்கள் , தோல் வகை சுத்திகரிக்கும் தொழில் வகை .
கும்ப ராசி தொழில் 
  • சுரங்கம் ,
  • கூட்டுறவு ,
  • மின்சாரம் ,
  • விஞ்ஞானம் , போன்ற துறை ,
  • நாகரீக தொழில் பட்டு சணல் , பாத்திர வர்காதி தொழில் வகை ,
  • உபதேசிக்கும் தொழில் வகை
  • மறைமுக தொழில் வகை .
மீன ராசி தொழில் 
  • நேர்மையான தொழில் ,
  • கம்பளி வியாபாரம் ,
  • ஆசிரியர் ,
  • கல்வித் துறை ,
  • மின்சார இலாக்கா ,
  • திரவ தொழில் ,
  • படகு கப்பல் தொழில் ,
  • வெளி நாட்டு தொடர்பு வியாபாரம் , வக்கீல் ,
  • புரோகிதர் பிரசங்கம் ,
  • ஜலம் சம்பந்தப்பட்ட தொழில் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular