Sunday, May 26, 2024
Homeஆன்மிக தகவல்கருட புராணம்கருடபுராணம்-மரித்தவனின் உயிர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது

கருடபுராணம்-மரித்தவனின் உயிர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கருடபுராணம்-எமதர்மனைப் பற்றியும் , மரித்தவனின் உயிர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைப் பற்றியும் உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

உலக உயிர்களின் உயிரைப் பறித்துச் செல்லும் அதிகாரம் பெற்ற எமதர்மன் நெடிய உருவம் கொண்டவன்,அஞ்சனம் போன்ற கரிய நிறத்தைக் கொண்டவன்.நான்கு கரங்களில் அம்பு , சங்கு , கதை , பாசம் முதலிய ஆயுதங்களைத் தரித்தபடி மிகவும் ஒளிபொருந்திய தேகத்துடன் காட்சியளிக்கும் எமதர்மன் , எருமை வாகனத்தில் ஏறி பவனி வருவான்.எமதர்மன் நற்குணம் கொண்ட உயிரைக்கண்டு எளிதில் சாந்தப்படுகிறான்.அதேவேளையில் தீய கர்மங்கள் செய்த உயிரைக் கண்டு , கனலைப் போலக் கடுமையான கோபமும் கொள்கிறான்.

அத்தகைய எமதர்மனின் மாளிகை , பூவுலகிலிருந்து எண்பதாயிரம் காத தூரம் கொண்டது.ஒரு மனிதனின் மரண வேளை வந்தவுடன் , எமதர்மன் தன் தூதுவர்களிடம் அந்த மனிதனின் உயிரைப் பிடித்து வரும்படி கட்டளையிடுகிறான்.

மிகவும் கொடூரமான உருவத்துடனும் , சிவந்த கண்களுடனும் , கார்மேகம் போன்ற கரிய நிற ஆடையை உடுத்திய எமனின் தூதுவர்கள் , தங்கள் கைகளில் பாசம் , முசலம் போன்ற ஆயுதங்களைத் தாங்கியிருப்பார்கள்.அவ்வகையான மூவகைத் தூதுவர்கள் எமதர்மனின் உத்தரவின்படி மரிப்பவனின் உயிரைப் பறித்துச் செல்ல வருவார்கள்.

அம்மூவரும் வாழ்நாள் முடிவுற்ற மனிதனின் உயிரை பாசத்தால் கட்டி , வாயு ரூபமான ஒரு தேகத்தினுள் அடைத்து எமலோகத்திற்குக் கூட்டிச் செல்வார்கள். எமனின் மாளிகையை அடைந்ததும் , ” தர்மராஜனே ! தாங்கள் உத்தரவிட்டவாறே வாழ்நாள் முடிவுற்ற இந்த மனிதனின் உயிரைக் கொண்டு வந்துவிட்டோம் . அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தங்கள் உத்தரவிற்காகக் காத்திருக்கிறோம் ! ‘ என்று பணிவோடு கூறுவார்கள்.

மகிஷ வாகனனாகிய எமதர்மராஜன் தனது தூதுவர்களை நோக்கி , ” கிங்கரர்களே ! நல்லது ! நல்லது ! இந்த ஜீவனை மீண்டும் அவன் பூலோகத்தில் வாழ்ந்த இடத்திலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு , இன்றிலிருந்து பன்னிரெண்டு நாட்கள் கழிந்த பிறகு மீண்டும் நம் ராஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து நிறுத்துங்கள் ! ” என்று உத்தரவிடுவான்.

எம தூதர்களும் எமதர்மராஜனின் ஆணைப்படி மறுகணமே அந்த ஜீவனைப் பிடித்து , சில நொடிகளிலேயே எண்பத்தாறாயிரம் காத தூரத்தையும் கடந்து , அந்த ஜீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள் . ஒருவன் மரித்தவுடன் , அவனது ஜீவன் எமதூதர்களால் எமலோகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு , சில நிமிடங்களிலேயே மீண்டும் பூலோகத்திற்குத் திரும்பி வருவதால் , ஒருவன் மரித்து சில நாழிகைப் பொழுது கழிந்த பிறகே அவனைப் புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ வேண்டும்.

கருடபுராணம்

இவ்வேளையில் ஜீவனுக்கு வாயுரூபம் மட்டுமே உண்டு . எம தூதர்களால் பூலோகத்தில் கொண்டுவிடப்பட்ட அந்த ஜீவன் , தன் சிதை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று , தன் உடலுக்குள் மீண்டும் புகமுடியாது வருந்துவான் . தான் இதுநாள்வரை தங்கியிருந்த உடலானது தன் கண்முன்னாலேயே எரிந்து சாம்பலாவதைப் பார்த்து , ” ஐயோ ! ஐயோ ! என் உடல் நெருப்பில் அழிகிறதே ! என்று வாய்விட்டு கதறி அழுவான் . அதேவேளையில் அந்த ஜீவன் , தான் பூலோகத்தில் வாழும் காலத்தில் புண்ணியச் செயல்களைச் செய்து . நற்கதி பெற்ற ஜீவனாக இருந்தால் , ” பாவத்தின் ஆதாரமாக இருக்கும் இந்த உடல் நெருப்பில் எரிந்து அழிந்தது நல்லதே ! ” என்று மகிழ்ச்சி கொள்வான்.

கருடா !உடலானது சிதையில் வைக்கப்படும் நெருப்பில் , உச்சி முதல் பாதம் வரையிலான அனைத்து அங்கங் களும் எரிந்து சாம்பலான பிறகும் , அந்த ஜீவனுக்கு தன் உடலின் மீதுள்ள ஆசையும் , தான் சேர்த்து வைத்த உடைமைகளின் மீதான விருப்பமும் , தன் மனைவி , மக்கள் , உற்றார் , உறவினர் மீதான எண்ணமும் ஒழியாது.

சிதை நெருப்பில் உடலானது எரிந்து சாம்பலான பிறகு , ஒரு ஜீவனுக்கு வாயு சரீரம் மட்டுமே இருக்கும். அதன் பிறகு , அவனுடைய புத்திரன் பத்துநாட்கள் தொடர்ந்து இடுகின்ற பிண்டங்களாலேயே , அந்த ஜீவனுக்கு பிண்ட சரீரம் ஏற்படும்.

கருடபுராணம்
  • புத்திரன் இடும் முதல்நாள் பிண்டத்தால் , அந்த ஜீவனுக்கு சிரசு உண்டாகும் ;
  • இரண்டாம் நாள் இடும் பிண்டத்தால் கழுத்தும் , தோள்களும் உண்டாகின்றன ;
  • மூன்றாம் நாள் இடும் பிண்டத்தால் மார்பு உண்டாகும் ;
  • நான்காம் நாள் இடு பிண்டத்தால் வயிறு உண்டாகும் ;
  • ஐந்தாம் நாள் இடும் பிண்டத்தால் உந்தி உண்டாகும் ;
  • ஆறாம் நாள் இடும் பிண்டத்தால் பிருஷ்டம் உண்டாகும் ;
  • ஏழாம் நாள் இடும் பிண்டத்தால் இடுப்பு உண்டாகும் ;
  • எட்டாம் நாள் இடும் பிண்டத்தால் மர்மஉறுப்பு மற்றும் ஆசனவாய் உண்டா கின்றன ;
  • ஒன்பதாம் நாள் இடும் பிண்டத்தால் கால்கள்உண்டாகின்றன ;
  • பத்தாம் நாள் இடும் பிண்டத்தால் பிண்ட சரீரமானது பூரணம் பெறுகிறது .

பூரணமாய் பிண்ட சரீரம் பெற்ற ஜீவனுக்குக் கடுமையால பசியும் தாகமும் தோன்றும்.எனவே அந்த ஜீவன் , தான் தன் வாழ்நாளில் மனைவி , மக்களோடு வாழ்ந்த வீட்டைத் தே வரும். வீட்டினுள் செல்லாமல் , வாசலிலேயே நின்று , அந் வீட்டினுள் செல்வோரையும் வருவோரையும் பார்த்து , “ ஐயோ!எனக்குக் கடுமையாகப் பசிக்கிறதே ! தாகம் என்னை வாட்டுகிறதே ! ” என்று அலறி அழுது கொண்டிருப்பான்.

பதினொன்றாம் நாளிலும் பன்னிரெண்டாம் நாளிலும் பிராமணர் மூலம் புத்திரன் அந்த ஜீவனின் பொருட்டு கொடுக்கும் உணவை உண்டு , அந்த ஜீவன் ஓரளவு தன் பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்வான்.பதிமூன்றாம் நாள் எமதர்மராஜனின் உத்தரவுப்படி , எமதூதர்கள் , பிண்ட சரீரம் பெற்ற அந்த ஜீவனைக் கட்டி இழுத்துச் செல்ல வருவார்கள். எமதூதர்களின் கையில் அகப்பட்ட அந்த ஜீவன் , தன் வீட்டை ஏக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி செல்வான்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular