Saturday, December 2, 2023

Rasi Palan Today-30.12.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-30.12.2021

Rasi Palan Today
Rasi Palan Today-30.12.2021

மேஷம்-Mesham 

கணவன் மனைவி ஒற்றுமையில் சிறிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு தடைகள் ஏற்பட்ட பிறகே நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். திருமணம் பற்றிய முயற்சிகள் அலைச்சலுக்குப் பிறகே வெற்றி தரும்.

ரிஷபம்-Rishabam 

பெண்களுக்கு குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் தாய் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உண்டு.

மிதுனம்-Mithunam 

எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, நகைகளின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறுவதற்கான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்-Kadagam 

உடல் ஆரோக்கியம் சிலருக்கு மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் சிலருக்கு உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி சிலருக்குக் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். லாபமும் அதிகரிக்கும்.

சிம்மம்-Simmam 

இந்த நாளில் உங்கள் முயற்சிகளுக்கு தக்க காரிய சாதனை உண்டு. சிலர் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தைரியம் – தன்னபிக்கை வளரும். அதனால், செலவுகளை திறம்பட சமாளிப்பீர்கள். மொத்தத்தில் இந்த நாள் உங்களுக்கு அதிக நன்மை தரும் நாளாகவே இருக்கும். போராட்டங்களை கடந்து வெற்றி பெறுவீர்கள். அதனால் கவலை வேண்டாம்.

கன்னி -Kanni

இன்றைய தினத்தை பொறுத்தவரையில் செலவுகள் அதிகரிக்கும் தினம். எனினும் அனைத்தும் பெரும்பாலும் தேவையான செலவுகளாகத் தான் இருக்கும். சிலர் ஆபரணங்களை கூட வாங்கி மகிழ்வார்கள். இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். அலைச்சல் இருந்தாலுமே கூட முயற்சிக்கு தக்க பலன் உண்டு.

துலாம்-Thulam 

இன்று உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். பெரும்பாலும் தீமைகள் அகலும் நாள். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.

விருச்சிகம்-Viruchigam 

இன்று காலையில் சற்று மந்தமாக இருந்தாலும் பிற்பகுதியில் திடீர் பணவரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப் பெறும். மதியத்திற்கு மேல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை உண்டு. மதியத்திற்கு மேல் அலைச்சல் இருந்தாலும் கூட சென்ற காரியம் வீண் ஆகாது. எனினும் காலை பொழுதில் நிதானம் தேவை.

தனுசு-Thanusu 

புதிய முயற்சி அலைச்சல் கொடுத்தாலுமே, இறுதியில் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உறவினர்களின் பேச்சு உற்சாகம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்-Magaram 

எதிர்பார்த்தவை சிலருக்கு இன்றைய தினத்தில் தாமதமாகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்த நேரிடலாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கும்பம்-Kumabm 

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்-Meenam 

அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கவனக் குறைவினால் ஏமாற்றத்துக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular