Sunday, April 21, 2024
Home108 திவ்ய தேசம்மூன்று நாட்கள் தங்கி பிராத்தனை செய்தால் அத்தனை பாவங்களையும் நீக்கும் சப்தகுரு தலம்-உத்தமர் திருக்கோயில்

மூன்று நாட்கள் தங்கி பிராத்தனை செய்தால் அத்தனை பாவங்களையும் நீக்கும் சப்தகுரு தலம்-உத்தமர் திருக்கோயில்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அருள்மிகு உத்தமர் திருக்கோயில்

திவ்ய தேசம் 3

மூலவர்: புருஷோத்தமன்

உற்சவர்:-

அம்மன் / தாயார்: பூர்ணவல்லி , அம்பாள் சவுந்தர்ய பார்வதி

தல விருட்சம்:கதலி ( வாழை ) மரம்

தீர்த்தம்: கதம்ப தீர்த்தம்

ஆகமம் / பூஜை :வைகானஸம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: கதம்பவனம் . பிச்சாண்டவர் கோவில் திருக்கரம்பனூர்

ஊர்:உத்தமர் கோவில்

மாவட்டம்:திருச்சி

மாநிலம்:தமிழ்நாடு

மங்களாசாசனம்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார்
திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று
இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே

-திருமங்கையாழ்வார்.

அருள்மிகு உத்தமர் திருக்கோயில்
அருள்மிகு உத்தமர் திருக்கோயில்

திருவிழா

சித்திரையில் பெருமாளுக்கும் , வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா

தல சிறப்பு

பிரம்மா.விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.

பொது தகவல்

சிவன் பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர்“பிச்சாண்டார் கோயில்” என்றும் மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் “கதம்பனூர்” என்றும் கரம்பனூர் என்றும் அழைக்கபடுகிறது.

கணவனும் மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம்.இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர்.இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ” உத்தமர் கோயில் ‘ என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

சிவன் பெருமாள் வீதி உலா

பக்தர் ஒருவருக்காக பிரம்மா , சிவன் , திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம் , உத்தமர் கோயில் தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மா அருள்பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருநாளன்று சிறப்பு சிவனும் , பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிசிறப்பு.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் கிடைக்க , கிரக தோஷங்கள் நீங்க . வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்

சுவாமி , அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து நிவேதனம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

அருள்மிகு உத்தமர் திருக்கோயில்
அருள்மிகு உத்தமர் திருக்கோயில்

தலபெருமை

பிரம்மன் சன்னதி

படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது எனவே . மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார்.பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார்.அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார்.இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து வணங்கினார் . அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து , ” நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா . நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார் . பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது .

பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள் .இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி , ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு .

பிரம்மாவிற்கு தயிர்சாதம் , ஆத்தி இலை படைத்தும் , சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம் , தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும் , கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.

குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது மும்மூர்த்திகள் தலம் விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும் உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

‘பூரணவல்லி தாயார்’ தனிச்சன்னதியில் அருளுகிறாள் இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள் அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார் இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும் உற்சவராகவும் இருக்கிறார்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர் தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது . சிவகுரு தெட்சிணாமூர்த்தி , விஷ்ணு குரு வரதராஜர் , குரு பிரம்மா . சக்திகுரு சவுந்தர்ய பார்வதி ஞானகுரு சுப்பிரமணியர் தேவகுரு வியாழன் அசுரகுரு சுகராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர் .

குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது எனவே இத்தலம் “சப்தகுரு தலம்” எனப்படுகிறது.

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 12 மணி வரை , மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு உத்தமர் திருக்கோயில் , திருக்கரம்பனூர் பிச்சாண்டார் கோயில் – 621 216. மணச்சநல்லூர் வட்டம் திருச்சி மாவட்டம்

போன் : + 91- 431 – 2591 466 , 2591040.

கோவில் இருப்பிடம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular