Rasi Palan Today-08.01.2022
மேஷம்-Mesham
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
ரிஷபம்-Rishabam
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்-Mithunam
எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்-Kadagam
உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நல்லன நடக்கும் நாள்.
சிம்மம்-Simmam
செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கன்னி -Kanni
கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
துலாம்-Thulam
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுபொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
தனுசு-Thanusu
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம்-Magaram
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்-Kumabm
கணவன் – மனைவி மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். கடனாக கொடுத்தபணத்தை வசூலிப்பீர்கள். அழகு இளமை கூடும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
மீனம்-Meenam
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உடல்நலத்தில் கவனம் தேவை . பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினரிடம் பகைவந்து செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.