Saturday, December 2, 2023

Rasi Palan Today-27.01.2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-27.01.2022

மேஷம்-Mesham 

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்-Rishabam 

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்-Mithunam 

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளைவிரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்-Kadagam 

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும்.வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்-Simmam 

பெற்றோரின் ஒத்துழைப்பும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

கன்னி -Kanni

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியா பாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

image 30 Rasi Palan Today-27.01.2022
Rasi Palan Today-27.01.2022

துலாம்-Thulam 

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. அதனால் கவலை வேண்டாம்.

விருச்சிகம்-Viruchigam 

திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

தனுசு-Thanusu 

எதிர்ப்புகள் அடங்கும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள் புது வேலை கிடைக்கும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மகரம்-Magaram 

குடும்பத்தினருடன் கலந்தா லோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கும்பம்-Kumabm 

கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுகூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்-Meenam 

குடும்பத்திலிருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular