Friday, December 8, 2023

Rasi Palan Today-29.01.2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-29.01.2022

மேஷம்-Mesham 

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

ரிஷபம்-Rishabam 

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்-Mithunam 

தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

கடகம்-Kadagam 

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தொட்டது துலங்கும்.

சிம்மம்-Simmam 

நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளைத் தாண்டி வெல்லும் நாள்.

கன்னி -Kanni

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

Rasi Palan Today
Rasi Palan Today-29.01.2022

துலாம்-Thulam 

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். புத்துணர்ச்சி ஏற்படும் நாள்.

விருச்சிகம்-Viruchigam 

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

தனுசு-Thanusu 

வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்-Magaram 

ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பு மிகுந்த நாள்.

கும்பம்-Kumabm 

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வாகன வசதி பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

மீனம்-Meenam 

மன உளைச்சல் நீங்கித் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular