Friday, July 26, 2024
Home108 திவ்ய தேசம்தேர்வு பயத்தை நீக்கி போட்டி தேர்வில் வெற்றி பெற வைக்கும் அற்புத திவ்ய தேசம்-திருகுடந்தை சாரங்கபாணி...

தேர்வு பயத்தை நீக்கி போட்டி தேர்வில் வெற்றி பெற வைக்கும் அற்புத திவ்ய தேசம்-திருகுடந்தை சாரங்கபாணி பெருமாள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

திருகுடந்தை சாரங்கபாணி பெருமாள்

திவ்ய தேசம்-12

மங்களமாக இருக்க வேண்டும் என்றால் பெருமாளின் அனுக்கிரகம் வேண்டும். தேவாதி தேவர்களுக்கும் எக்காலத்திலும் இறவா நிலை வேண்டும் என்பதற்காக – மோகினி அவதாரம் எடுத்து பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தத்தை வழங்கிய ஸ்ரீமந்நாராயணன் நல்லவர்களுக்காக அவர்கள் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதாரம் எடுத்துக் காப்பாற்றுவார்.

இதற்கு அடையாளமாக இன்றைக்கும் அமிர்த குடத்தைத் தாங்கி நின்று சேவை சாதிக்கிறார் திருக்குடந்தையில் . திருக்குடந்தை என்று அழைக்கப்பட்டு வரும் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலை அறியாதவர்கள் எவருமே இல்லை.

தஞ்சாவூரிலிருந்து வடகிழக்கில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் காவிரியாற்றின் தென்பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி 147 அடி உயரம் கொண்ட 11 நிலை இராஜ கோபுரமும் , மூன்று பிரகாரங்களையும் கொண்டுள்ளது.

திவ்ய தேசம்-12-திருகுடந்தை
திவ்ய தேசம்-12-திருகுடந்தை
  • மூலவர் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் பாம்பணையின் மீது பள்ளி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.சாரங்கபாணி.இராமர் கோயில் , ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்களும் உண்டு.
  • தாயார் கோமளவல்லி.
  • ஹேம புஷ்கரிணி என்னும் பொற்றாமரைக் குளம் உண்டு.
  • விமானம் வைதீக விமானம்.
  • வசந்த மண்டபம் 100 கால் மண்டபம் உண்டு.’ சாரங்கம் ‘ என்னும் வில்லை ஏந்தி நின்றதால் சாரங்கபாணி என்று பெயர் வந்ததாக ஒரு செய்தி உண்டு.

ஹேம் முனிவர்க்கு ஒரு சன்னதி உண்டு. இவரது மகளாத் தோன்றியத் திருமகளை இறைவன் மணந்து கொண்டதாக ஐதீகம். சுவாமியின் கருவறை தேர் வடிவில் பிரம்மாண்டமான சக்கரங்கள் கொண்ட திருத்தேர் போன்று காணப்படுகிறது. உத்ராயண , தட்சிணாயன வாசல் என்று இருவாசல்கள் வழியே சென்று முறைப்படி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது . பன்னிராண்டுகளுக்கு ஒருமுறை சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் ‘ குரு ‘ வரும்பொழுது ‘ மகாமகம் ‘ என்னும் ஒரு பெரிய விழா கொண்டாடப்படுகிறது.

IMG 1970 தேர்வு பயத்தை நீக்கி போட்டி தேர்வில் வெற்றி பெற வைக்கும் அற்புத திவ்ய தேசம்-திருகுடந்தை சாரங்கபாணி பெருமாள்

ஸ்ரீமந் நாத முனிகள் – இந்த தலத்தில் பாடப்பட்ட நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ‘ இது பத்து ‘ என்னும் பொருள்பட ஒரு வரி இருப்பதைக் கண்டு இந்த பாடல்களைப் பாடியவர் யார் ? என்று அறியாமல் வருத்தப்பட்டார். அப்பொழுது பகவான் ஸ்ரீமந்நாத முனிகளின் கனவில் தோன்றி ஆழ்வார் திருநகரிக்குச் சென்று நம்மாழ்வாரைச் சந்தித்தால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார்.

இறைவனது கட்டளையை ஏற்று ஸ்ரீமந் நாத முனிகள் நம்மாழ்வாரை தரிசனம் செய்ய , நம்மாழ்வார் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களை சொல்லிக் கொடுத்து அவரது சந்தேகத்தையும் போக்கினார். நாலாயிரப் பாசுரங்களை எந்தவிதக் குறையும் இல்லாமல் நிலைநிறுத்த ஸ்ரீமந் நாத முனிகளுக்கு இந்த சாரங்கபாணிப் பெருமாள் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆராவமுதன் என்ற பெயரும் உண்டு.

திவ்ய தேசம்-12-திருகுடந்தை
திவ்ய தேசம்-12-திருகுடந்தை

ஆண்டாள்,திருமழிசையாழ்வார் , திருமங்கையாழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் . நம்மாழ்வார் ஆகியோர் இக்கோயிலைப் பற்றி நிறைய பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள்.கோமளவல்லித் தாயார் இதுவரை கோயிலை விட்டு வெளியே வந்ததே இல்லை என்பதால் ‘ படிதாண்டாப் பத்தினி ‘ என்ற பெயரும் உண்டு.

பரிகாரம்

எத்தகைய இடையூறு வாழ்க்கையில் வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த சாரங்கபாணியை சரண் அடைந்து விட்டால் போதும். பகவானே கனவில் வந்து , திக்குத் தெரியாமல் திண்டாடு பவர்க்கெல்லாம் திக்கைக் காட்டி தைரியத்தையும் கொடுப்பார். படிக்கின்ற மாணவர்கள் தேர்வு நேரத்தில் பரிட்சை பயம் வராமல் இருக்கவும் தேர்வு எழுதும் பொழுது திடீரென்று படித்தது நினைவுக்கு வராமல் தவிப்பதைத் தடுக்கவும் வெளியூர்ப் பயணத்தின் பொழுது இக்கட்டான நிலையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவும் , பயம் விலகவும் மரண பயத்திலிருந்து கோயிலுக்கு முடிந்த வெளியே வரவும் , இந்த சாரங்கபாணி பொழுதெல்லாம் வந்து பெருமாளை தரிசனம் செய்து பிரசாதத்தை வைத்துக் கொண்டால் போதும்.சக்கரம் போல் இவர் உங்களைக் காப்பார்.

கோவில் இருப்பிடம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular