Tuesday, May 21, 2024
Homeஜோதிட தொடர்செவ்வாய்-சுக்ரன்-சனி பரிவர்த்தனை

செவ்வாய்-சுக்ரன்-சனி பரிவர்த்தனை

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

செவ்வாய் - சுக்கிரன் பரிவர்த்தனை 

செவ்வாய் இல்லங்களில் சுக்கிரனும் , சுக்கிரன் இல்லங்களில் செவ்வாய் இருக்கும் நிலையானது , இந்த
பரிவர்த்தனையானது நெருப்பும் பஞ்சும் இருப்பதை போலாகும்.

இவர்களுக்கு பெண்களை பார்த்த மாத்திரத்திலேயே மெழுகுவர்த்தி போல உருகி விடும் நிலையை தோற்றுவித்து ஏக்கமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

ஆகவே இவர்கள் இவ்விஷயத்தில் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீன் போல் இருப்பது மிக்க நலம். காமத்திற்கு அச்சாணியான சுக்கிரன் இரத்தத்தின் அதிபதியான செவ்வாயுடன் பரிவர்த்தனை அடையும் போது உள்ள கிளர்ச்சிகளை எவ்விதமெல்லாமோ தூண்டி விட்டு எவ்விதத்திலாவது அந்த சுகங்களை அடைய வேண்டும் என்னும் நிலையை தோற்றுவித்து விளையாடும் கோலாட்டம் வினோதமானது.

இவ்வினோதத்தில் சனி , ராகு , புதன் இணைவு ஏற்பட்டு விட்டால் இவர்கள் நிலையை என்னவென்று சொல்வது. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் , என்னும் கண்ணதாசனின் பாடலுக்கு , சான்றாக விளங்கிடுவர்.

இவர்கள் கலை , ஆடம்பரம் மக்களை ஈர்க்கும் கவர்ச்சியான தொடர்புகள் , மதி மயக்கும் பானங்கள் , கீழ் தரமான தொழில் தொடர்புகள் போன்றவற்றில் ஈடுபடுத்துகிறது.

இப்பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் தன்மையை பொறுத்து தொழிலின் உயர்வு தாழ்வுகளை உண்டாக்குகிறது. இவர்கள் கிருமி ரோகங்களால் இரத்த அணுக்கள் கெடுதலான தவறான வழிக்கு செல்லும் காரணங்களால் உண்டா கும் நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இவர்கள் இல்லற வாழ்வு சிறப்பு பெறுவதில்லை. இவர்களை எந்த வகையிலும் சரிகட்ட முடியாத நிலையே காணும் எந்த லக்கினத்தார்க்கும் இந்த பரிவர்த்தனை வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியை வைத்து விடுகிறது.

செவ்வாய்-சுக்ரன்-சனி பரிவர்த்தனை
செவ்வாய்-சனி பரிவர்த்தனை 

செவ்வாய் இல்லங்களில் சனியும் சனியின் இல்லங்களில் செவ்வாய் இருக்கும் இந்த பரிவர்த்தனை நிலையானது. அடாவடி செயல்களுக்கு ஊன்று கோலாகும்.

அதர்மமும் தர்மமும் போட்டியிட்டு செயல்படும்.இவர்களின் குடும்ப நிலை உடன் பிறப்பு நிலை , சிறப்பு பெறுவதில்லை. ஆனால் சுயரராஜ்தித பூர்வீக நில புலன்கள் சிலருக்கு ஏராளமாக இருப்பதை பார்க்கலாம். இருப்பினும் அவர்களும் ஏதோ ஒரு குறைபாடுகளுடனே இருப்பதை காணலாம் , விஷ சம்பந்தப் பட்ட ஆயுதம் இரும்பு உருக்கு சம்பந்தப்பட்ட தொழிற் சாலைகள் கழிவு சம்பந்தப்பட்ட தொழில் தொடர்புகள் பிறரை அடக்கி பயமுறுத்தி வேதனை களுக்கு உள்ளாக்கி சொத்து சேர்க்கும் , பணம் தேடும் நிலைகளை தோற்றுவிக்கிறது.

இவர் களில் குஸ்தி போடும் பயில்வான்களாகவும் கராத்தே குங்பூ களறி போன்ற சண்டை பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றவராகவும் முரட்டு சம்பந்தப்பட்ட வேலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

இவர்களுக்கு போலீஸ் துறை , ராணுவ துறை , ஆகாய மார்க்கமாக செயல்படும் விமானத்துறை நூதன கருவிகளை இயக்கும் நுட்பமான துறைகள் சிறப்பை தருகிறது. இவர்களுக்கு விபத்து அடிக்கடி , கலவரம் மறைமுக ஏதிரிகளால் ஆபத்து அணு ஆயுதங்களால் பயம் போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை பெறும்போது இவர்களோடு ராகு , சூரியன் , கேது , சுக்கிரன் இணைவு பெற்று விட்டால் இவர்களுக்கு எந்த வகையிலும் ஆபத்து வர வாய்ப்பு உள்ளது. அரசியல் பிரவேசம் மிக ஆபத்தானது.

மிதுன லக்கினத்திற்கு 9,11 பரிவர்த்தனையும், கடக லக்கினத்திற்கு 10 , 7 பரிவர்த்தனையும் ,விருச்சிக , லக்கினத்திற்கு 1 , 3 பரிவர்த்தனையும்,தனுசு லக்கினத்திற்கு 5,3 பரிவர்த்தனையும் சிறப்பை தருகிறது.உயர்ந்த பதவிகளை தருகிறது.மறைமுக எதிரிகளால் வீழ்ச்சியை தருகிறது.மற்ற லக்னங்களுக்கு சிறப்பு இல்லை..

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular