Sunday, October 1, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-13.04.2022-20.4.2023-ரிஷபம்-பலன்கள்-பரிகரங்கள்

குரு பெயர்ச்சி பலன்கள்-13.04.2022-20.4.2023-ரிஷபம்-பலன்கள்-பரிகரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள்-ரிஷபம்

கவர்ச்சியாலும் திறமையாலும் இனிமையாக பழகுவதாலும் எல்லோரிடமும் நெருக்கம் கொள்ளும் ஆற்றல் பெற்ற ரிஷப ராசி நண்பர்களே!!!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நிறையவே சங்கடத்திற்கு ஆளாக்கி வந்த குருபகவான் 13.04.2022 அன்று உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான மீன ராசியில் அமர்ந்து உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்க போகிறார்.

பதினோராம் இடம் என்பது லாபஸ்தானம். பணம், பொன், பொருளால் லாபம் காணும் இடம். மூத்த சகோதர சகோதரிகளால் பலன் கிடைக்கக் கூடிய இடம்.இளையதாரத்தால் மகிழ்வு காணக்கூடிய இடம். மேலை நாடு பயணத்தையும், வாகன யோகத்தையும் வழங்கும் இடம்.

கோச்சாரத்தில் பதினொன்றில் வரும் குரு பகவானால் உடல் நலம் பெறும். மனநிலை மகிழ்ச்சியில் திளைக்கும், நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடந்து அதனால் முன்னேற்றம் உண்டாகும். வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் சொல்வாக்கு மதிப்பு கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் சிலருக்கு உண்டாகும். மன வாழ்கையில் பிரிவு ஏற்பட்டவர்களுக்கு புதிய துணை அமையும். நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகி ஆலய தரிசனம் மேற்கொண்டு வரும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குருவின் 5ம் பார்வை பலன் 

குரு தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமாகிய சகோதர, தைரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதனால் உங்கள் துணிச்சல் அதிகரிக்கும். ஏதோ ஒன்றை நினைத்து அவமானத்துடன் நடமாடி வந்த நிலை மாறி தைரியத்துடன் நடைபோட ஆரம்பிப்பீர்கள். உங்கள் செயலுக்கு சகோதர சகோதரிகள் ஆதரவு கிட்டும். எடுக்கும் காரியங்களில் வெற்றி அடைவீர்கள். யோகமும் போகமும் ஆக வாழ்க்கை இன்பத்தில் மூழ்கும். உடன் பணியாற்றுபவர்கள் உடன் இருந்த பிணக்கு அகலும். உங்களைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொண்டு உங்களை வாழ்த்த கூடிய நிலை உருவாகும். காதில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளும்.

குருவின் 7ம் பார்வை பலன் 

குரு தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார் இதனால் திருமணம் நடந்தும் குழந்தை இல்லையே என்று ஏங்கி வந்தவர்களின் கவலை தீரும். வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். பிள்ளைகள் சொல்படி நடந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று கவலைப்பட்டு வந்தவர்கள் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.அவர்களுடைய எதிர்காலத்தில் உரிய வழி அமைத்து அதனால் நீங்கள் நிம்மதி அடையலாம். இறை வழிபாட்டில் மனம் செல்லும். எழுத்து பிரசங்கம் என்று ஈடுபாடு அதிகரிக்கும். புத்திகூர்மை பளிச்சிடும், சிந்தனை ஆற்றல் வெளிப்படும், ஜோதிடம், வாக்கு என்று உங்கள் அறிவு உங்களையும் உங்களிடம் வருபவர்களையும் உயர்த்தும்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குருவின் 9ம் பார்வை பலன் 

குரு தனது 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். இதனால் திருமண வயது வந்தும் மண மாலை சூடிக் கொள்ள முடியவில்லையே என்று வேதனைப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மணமாலை சூடும் யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கை நிம்மதியாக இல்லையே இல்லற சுகம் கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு துயர் தீரும். அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பும், சுற்றுலா சென்று வரும் சூழலும் உண்டாகும். கிடைக்காத சுகம் கிடைத்து எல்லாவகையிலும் இன்பத்தை காணும் நிலை உண்டாகும்.

இவையாவும் குருபகவானின் பார்வையால் உண்டாகும் பொது பலன்கள் ஆகும்.

பரிகாரம்

ஆலங்குடியில் குடிகொண்டுள்ள ஆபத்சகாயேசுவரரை உங்கள் நட்சத்திர நாளில் தரிசித்து வாருங்கள் நன்மைகள் அதிகரிக்கும்..

இதையும் கொஞ்சம் படிக்கலாமே :

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-ரிஷபம்-2022-2023

சுபகிருது தமிழ் வருட பலன்கள்-ரிஷபம்-2022

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular