Friday, December 8, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கடகம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022-கடகம்

சந்திரனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே !!!

இது வரைக்கும் உங்கள் ராசிக்கு 7-ம் இடமான மகரத்தில் இருந்து வந்த குரு பகவான், தற்போதைய பெயர்ச்சியில் எட்டாம் இடமான கும்பத்துக்கு செல்கிறார்..

குருவின் விசேஷ பார்வைகளான 5, 7, 9-ம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 12 ,2,4 இடங்களில் பதியும். இந்த அமைப்பின்படி உங்களுக்கு ஏற்றமும் மாற்றமும் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதேசமயம் எதிலும் முழு முயற்சியும், திட்டமிடலும் முக்கியம்.

குரு பெயர்ச்சி பலன்கள்

கடக ராசியினரின் பொதுவான குணங்கள்:

 • கடக ராசிக்காரர்கள் மிக அமைதியானவர்கள்.
 • பயந்த சுபாவம் கொண்டவர்களும் கூட. இதற்கு காரணம் கோபக்கார கிரகம் செவ்வாய் இங்கு நீசமாகி இருப்பதும், அன்புக்குரிய கிரகம் குரு உச்சம் ஆவதும்தான்.
 • இவர்கள் குடும்பம் மிக கவுரவம் காட்டும் குடும்பமாக இருக்கும்.
 • இளைய சகோதரர் மிக மென்மையாக இருப்பார்.
 • தாய் அழகு மிகுந்தவராக இருப்பார்.
 • இவர்களுடைய பரம்பரையில் நிறைய சீருடைப்பணியாளர் இருப்பர். இவர்களுக்கு கொழுப்பு சார்ந்த பாதிப்பு உண்டு.
 • தாய்மாமன் புத்திசாலியாக இருப்பார்.
 • வணிகத்தில் பழையன சார்ந்த பொருள்கள் இடம் பெற்றிருக்கும்.
 • இவர்கள் சந்திக்கும் நபர்களால் தொல்லை உண்டாகும்.
 • தந்தை நல்ல ஆன்மீகவாதியாக இருப்பார்.
 • இவர்கள் தொழில் சிவப்பு நிறமும், உஷ்ணமும், மலை சார்ந்த வஸ்துக்களும், அந்த வெப்பமும் அடங்கியிருக்கும்.
 • இவர்களது மூத்த சகோதரி கலையுணர்வும் மிக்கவராகவும், ருசித்து சாப்பிட கூடியவராகவும் இருப்பார்.

கும்ப குருவின் பொதுப்பலன்கள்:

கடக ராசியின் எட்டாம் வீட்டில் இருப்பினும், குரு பகவான் தனது பார்வையால் சுப விரையத்தை தரும் போது, அதனை சரிகட்ட தன ஸ்தானத்தை பார்த்து பண பெருக்கத்தையும் தருகிறார்.விரயம் என்றால் நல்ல அழகான வீடு,கொழிக்கும் வயல் என இவற்றில் முதலீடு செய்ய செய்து அதனை சுபச் செலவாக மாற்றிவிடுகிறார். குரு ஒன்பதின் அதிபதியாக எட்டில் மறைந்து, தந்தைக்கு அலைச்சலை கொடுப்பார். இதைத் தவிர கடக ராசிக்கு குரு பெயர்ச்சி நன்மையே தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குருவின் பார்வை பலன்கள்:

குருவின் ஐந்தாம் பார்வை பலன்

குரு தனது ஐந்தாம் பார்வையால் கடக ராசியின் 12ஆம் வீட்டை பார்க்கிறார். 12-ஆம் வீடு என்பது விரய ஸ்தானம். இதனை குரு பார்ப்பதால் செலவு அதிகமாகுமா? எனில் பதில் ‘ஆம்’ என்பதாகும்.எனினும் பார்க்கும் கிரகம் குரு என்பதால் அனைத்தும் செலவும் சுப செலவாக மாறும்.

பூர்வீக இடத்தில் முதலீடு அமையும். வாரிசுகளின் திருமணச் செலவாக அமையும். வேலை கிடைப்பதற்கு கட்ட வேண்டிய டெபாசிட் தொகை அல்லது கொடுக்க வேண்டிய லஞ்சப் பணமாக இருக்கும். சிலர் நல்ல படுக்கை, கட்டில் வாங்குவர். படுக்கை அறையை நவீனப்படுத்தும் செலவாக அமையும். சிலர் நிறைய நன்கொடைகள் வழங்குவதால் ஏற்பட்ட செலவாக அமையும். தொழில் முதலீடுகளில் செலவு உண்டு. அல்லது தொழிலில் கிளைகள்,பிரிவுகள், கடை விஸ்திரிப்பு என இவற்றாலும் செலவுகள் ஏற்படும்

குருவின் ஏழாம் பார்வை பலன்

கடக ராசியின் இரண்டாம் வீட்டை குரு தனது ஏழாம் பார்வையால் பார்வையிடுகிறார்.2மிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.

தனஸ்தானம் எனும் போது வளத்தை, செல்வச்செழிப்பை குறிக்கும் இடம்.அதுவும் குரு பார்க்கும் போது கேட்கவேண்டுமா? சும்மா கொட்டோ கொட்டென்று பணம் கொட்டும். முக்கியமாக அரசு பண நடமாட்டம் இருக்கும். உங்கள் வாக்கு ,பணப் பெருக்கம் கொடுக்கும்.

உங்களில் பலருக்கு அரசு பதவி கிடைத்து கவர்மெண்ட் சம்பளம் வாங்குவீர்கள். கடக ராசி குழந்தைகளின் தாய் அரசு வேலை கிடைக்க பெறுவார்.

அசையும் சொத்துக்கள் வாங்குவீர்கள். அணிகலன்கள் கிடைக்கும். குடும்பம் நேர் சீராகும். சிலருக்கு குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும், நிம்மதியற்ற நிலை இருக்கும். இந்த குரு பார்வை அதனை தீர்த்து வைக்கும்.

உங்கள் பேச்சு பாராட்டு வெகுமதிகளை கொண்டு வரும். கடக ராசி குழந்தைகள் நல்ல கல்வி அறிவும், சிறந்த ஞாபக சக்தியும், ஒருமித்த சிந்தனையும் கொண்டு கல்வித்துறையில் நல்ல பெயர் பெறுவர்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குருவின் 9ம் பார்வை பலன்

குரு தனது 9ம் பார்வையின் மூலம் கடக ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்க்கிறார். துலாம் ராசி உங்களின் நான்காம் இடம் ஆகும்.

குரு உங்களுக்கு ஒரு வீட்டை கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். குரு கொடுக்கும் வீடு சொள்ளை, சொட்டையாக இருக்குமா என்ன ?இருப்பதிலேயே அழகான மோஸ்தர் வீட்டை கொடுப்பார். பிறர் கண்படும் அளவுக்கு இருக்கும்.

அதன்படியே நல்ல வாகனங்கள் வாங்கித் தருவார். வண்டி பார்க்கவே நன்றாக இருக்கும்.

இதுவரையில் சொந்த நிலம் இல்லாத விவசாயிகளுக்கு சொந்த நிலம் வாங்கி தருவார். ஏற்கனவே வயல் வரப்பு உள்ளவர்களுக்கு அவை பெருக்க உதவி செய்வார். உழவு வாகனம் கிடைக்கும்.

கடக ராசியினரின் தாயார் மேன்மை பெறுவார். அவர் வெகு நாளாக ஆசை பட்ட விஷயம் நடக்கும். உங்களின் மூத்த சகோதரி சுகம் பெறுவாள். கடகராசி மாணவர்களின் கல்வி மிக மென்மை பெறும். தொழில் சார்ந்த கல்வி, மருத்துவக்கல்வி, வெளிநாடு தொடர்புடைய படிப்பு, ரசாயனத் துறை, கட்டடக்கலை, ஆன்மீகக் கல்வி, போன்றவை சார்ந்த துறைகளில் பங்கேற்பார். மேலும் இவர்களுக்கு கல்வி பயிற்சி மிக சிறப்பானதாக அமையும். இதை குரு தனது 9ம் பார்வையால் செவ்வனே செய்வார்.

பரிகாரம்:

 • ஒருமுறை திருச்செந்தூர் சென்று செந்தில்நாதனை மனமுருகி வணங்குங்கள்.
 • வியாழக்கிழமைகளில் இஷ்ட மகானை கும்பிடுங்கள்.
 • ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சியால் கோடி நன்மை கிட்டும்”.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular