Sunday, October 1, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-கடகம்-பலன்கள்-பரிகரங்கள்

குரு பெயர்ச்சி பலன்கள்-கடகம்-பலன்கள்-பரிகரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள்-கடகம் 

சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!!

உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவான் 13.04.2022 அன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான மீன ராசியில் பிரவேசிக்கிறார்.

குரு பகவான் அமரும் இடத்திற்கு பாதகமான பலன்களை வழங்குவார் என்று பொதுவான விதி இருந்தாலும் , இரண்டு , ஐந்து , ஏழு , ஒன்பது , பதினொன்றாம் இடங்களில் அமரும் போது அந்த இடத்திற்குரிய பலன்களை நற்பலன்களாகவே வழங்குவார். இதனால் ஒன்பதாம் இடத்திற்கு வரும் குரு பகவானால் இருண்டிருந்த உங்கள் வாழ்க்கை ஒளிபெறப் போகிறது .

ஒன்பதாம் இடத்திற்கு வரும் குரு பகவான் முதலில் உங்கள் உடல் நலனை சீர்செய்வார் , மருந்து , மாத்திரை , மருத்துவர் என்று அலைந்தும் உடல்நிலை சீராகவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்த வர்களின் உடல்நிலை சீராகும்.

மனதில் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். உங்கள் செயல்திறன் கண்டு உங்கள் பகைவர்களும் உங்களை சரணடைவார்கள். பிரச்னை என்று நீங்கள் பயந்து கொண்டு மனதை வருத்திக் கொண்டிருந்ததெல்லாம் சூரியனைக் கண்டபனிபோல் அகன்று விடும்.

image 38 குரு பெயர்ச்சி பலன்கள்-கடகம்-பலன்கள்-பரிகரங்கள்

திருமணம் கூடி வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவர்களுக்கும் வீட்டில் வயது வந்த பிள்ளைகள் இருந்தும் திருமணம் நடக்க வில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவர்களின் கவலை தீரும். வீட்டில் திருமணயோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அடைந்து வந்தவர்களின் வேதனை தீரும் , வீட்டில் குவா குவா சப்தம் கேட்கும். வாழ்க்கைத் துணையால் உங்கள் அந்தஸ்து உயரும்.

பொருள் சேர்க்கை உண்டாகும் இருப்பிடத்தை ஒரு சிலர் மாற்றம் செய்வீர்கள். அது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஊர் விட்டு ஊர் , மாவட்டம் விட்டு மாவட்டம் , என்று ஒரு சிலருக்கு வெளியூர் வாசம் அமையும்.அதனால் வாழ்க்கை சிறக்கும். சொந்தமாக வீடு , நிலம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். வாகனம் வாங்குவீர்கள் .

கல்வி கற்பவர்கள் சிறப்படைவர் , ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் . புதிய பொறுப்பு வரும் . கடல் கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வரும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.

பொதுவில் இக்காலம் தொட்டதெல்லாம் துலங்கும் காலமாகும் நினைத்ததெல்லாம் நடக்கும் காலம் ஆகும் என்பதால் இது யோக காலமே.

குருவின் 5ம் பார்வை பலன் 

தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். குருவின் பார்வை உங்களுக்கு உண்டாவதால் மனதிலும் செயலிலும் வேகம் உண்டாகும். உங்களைத் தூற்றியவர்களும் போற்றிடக் கூடியநிலை உண்டாகும். ஆயுள் பற்றி அச்சம் கொண்டிருந்த நிலை மாறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றத்தில் மிடுக்கு கூடும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கையாகும். ஐம்புலன்களும் சந்தோஷமடைந்து இன்பமான நிலை உண்டாகும். புதிய புகழும் , செல்வாக்கும் உண்டாகும். உங்கள் சிந்தனை செழிப்படையும் , எதையும் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ ஆரம்பிப்பீர்கள் நிறம் மெருகேறும். குணம் சிறப்பாகும்.

குருவின் 7ம் பார்வை பலன் 

தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமாகிய சகோதர தைரியஸ்தானத்தின் மீதுபார்வையை பதிக்கும் குரு பகவான் உங்களின் துணிச்சலை அதிகரிப்பார் , குடும்பத்தில் நிலவிய குழப்பங்களுக்கு முடிவு கட்டுவீர்கள். உலகைப் பற்றிய அறிவு உங்களுக்கு உண்டாகும் என்பதால் மற்றவர்களின் பேச்சுக்களையும் ஏச்சுக்களையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் உழைப்பும் , வருவாயும் தான் உங்களைக் காப்பாற்றுகிறது என்பதால் உலகத்தார் பேசுவதைப் பற்றி சிந்திக்க மாட்டீர்கள் , உங்கள் செயலில் வெற்றியைக் காண்பீர்கள் , செல்லும் இடமெல்லாம் சிறப்பைக் காண்பீர்கள் , தொழில் விருத்தியாகும். கடன் அடைபடும்.காது நோய் குணமாகும். அரசியல் , எழுத்து , பேச்சு எல்லாம் லாபமாகவே இருக்கும். உங்கள் வீரியம் அதிகரிக்கும் யோகமும் போகமும் வாழ்க்கையில் நிறையும்.

image 37 குரு பெயர்ச்சி பலன்கள்-கடகம்-பலன்கள்-பரிகரங்கள்
குருவின் 9ம் பார்வை பலன் 

ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் , புத்திர ஸ்தானம் என்று கூறப்படும் ஐந்தாம் இடத்தின் மீது தனது பார்வையை பதிக்கும் குரு பகவான் , குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கித் தவித்தவர்களின் குறையை தீர்க்கப் போகிறார்.பிள்ளைகள் சொல்பேச்சைக் கேட்ப தில்லையே , அவமானத்தை உண்டாக்குகிறார்களே. பிரச்னைகளை கொண்டு வருகிறார்களே என்று வருத்தப்பட்டவர்களின் வருத்தம் மாறும் , பிள்ளைகள் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவார்கள். இறை வழிபாட்டில் உங்கள் மனம் செல்லும் , ஆலய வளர்ச்சிக்கு பணம் கொடுத்து புகழ்பெறுவீர்கள் ஜோதிடம் , ஆன்மீகம் , நீதிபோதனை பிரசங்கம் என்று செயல்பட்டு உலகோரால் பாராட்டப்படுவீர்கள்.

இவை யாவும் பகவானின் பார்வையால் உங்களுக்கு உண்டாகப் போகும் நற்பலன்கள்.

பரிகாரம்:

உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் ஆலங்குடிக்கு சென்று ஆபத்சகாயேசுவரரை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட்டு வாருங்கள்.

சனிக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் சனீஸ்வர உள்ள பகவானுக்கு தூய நல்லெண்ணெயில் தீபமேற்றி வாழ்வின் சங்கடங்களை விலக்கிக் உங்கள் கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular