Monday, July 15, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சிபலன்கள்- 2022- சிம்மம்-பலன்கள்-பரிகாரங்கள்

குரு பெயர்ச்சிபலன்கள்- 2022- சிம்மம்-பலன்கள்-பரிகாரங்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பெயர்ச்சிபலன்கள்-சிம்மம்

சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!!!

உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த குருபகவான் 13.04.2022 அன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.

ஜாதகத்தில் எட்டாம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம்,அஷ்டம ஸ்தானம் என்று கூறலாம். இந்த இடத்தை வைத்தே தொழில் நிலை, அதனால் அடையப்போகும் ஏற்ற இறக்கம்,தீராத வேதனை,மான அவமானங்கள், தீராத நோய், செலவினங்கள், கடன்தொல்லை, வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள், விபத்துகள், கணவன் மனைவியிடையே சச்சரவு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

கெடுதலான இந்த ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் அமரும் போது கெடுபலன் குறைந்து நன்மைகளாகவே நடக்கும்.

எட்டாம் இடத்தில் அமர்ந்து அந்த இடத்திற்கு உரிய பலனை துர் பலனாக வழங்கும் குருபகவான் அங்கிருந்து 5, 7, 9-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டையும், 2-ம் வீட்டையும், 4-ம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படைய போகிறது.

குரு பெயர்ச்சிபலன்கள்-சிம்மம்
குருவின் 5ம் பார்வை பலன்

தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ஆம் இடம் ஆகிய விரைய ஸ்தானத்தை பார்வையிடும் குரு பகவான் உங்கள் வீட்டில் சுப விரையத்தை உண்டாக்கலாம். புதியதாக இடம் வாங்குதல், வீடு வாங்குதல், இருக்கும் வீட்டை புதுப்பித்து உங்கள் ரசனைக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவது, பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பது, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் என்று செலவுகள் சுப செலவுகளாக மாற்றப் போகிறார். அதனால் வீட்டில் சந்தோஷமான நிலை உண்டாகபோகிறது.கணவன்-மனைவியிடையே அன்பு நீடித்து முன்னேற்ற செயலில் முழுமனதுடன் ஈடுபடப் போகிறீர்கள்.

குருவின் 7ம் பார்வை பலன்

தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு இரண்டாம் இடம் ஆகிய தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தை பார்வையிடும் குருபகவான் உங்கள் குடும்பத்திற்கு தேவையான பணத்தேவையை எப்படியாகிலும் சரி செய்வார். அவசர தேவைக்கு உங்கள் கையில் பணம் இல்லை என்றாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைத்துவிடும். உங்கள் பேச்சுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்கும். பயணத்தின் மூலம் நன்மை அடைவீர்கள்.

பட்டம், பதவி என்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முகம்,பற்கள், கண்கள் பாதிக்கப்பட்டாலும் அவற்றுக்கான சிகிச்சை மேற்கொண்டு சரி செய்து கொள்வீர்கள்.

குரு பெயர்ச்சிபலன்கள்-சிம்மம்
குருவின் 9ம் பார்வை பலன்

தனது ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு நான்காம் இடமாகிய மாதுரு, சுக, வாகன, கல்வி ஸ்தானத்தை பார்வையிடுகிறார். கல்வியில் உண்டான தடைகளை நீக்குவார். ஆசிரியர்கள் புகழ், விருது பெறக்கூடிய வாய்ப்பை உண்டாக்குவார். தாய்வழி உறவு பலப்படும். ஆதாயம் கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, நிலம் என்று சொத்து சேர்க்கை உண்டாகும். இதயநோய் சீராகும். ஆலயங்களுக்கு சென்று புனித நீராடி வருவீர்கள். உழைப்பு அதிகரித்தாலும் நீங்கள் காணும் சந்தோஷத்தால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்.

இவையாவும் குருபகவானின் பார்வையால் கிடைக்கும் நற்பலன்கள் ஆகும்.

பலன்தரும் பரிகாரம்

திருச்செந்தூர் சென்று கடலிலும், நாழிக் கிணற்றிலும் நீராடி மூலவருக்கும், பிரகாரத்திலுள்ள குருபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.

தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வணங்கி வாருங்கள். ஒரு முறை மஞ்சள் வஸ்திரமும் முல்லை மலரும் கொடுத்து அர்ச்சனை செய்யுங்கள் வாழ்க்கை வளம் பெறும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்531அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்99குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்17ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular