Friday, December 8, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்சூரியன் லக்கினாதிபதியாக இருந்து அவரின் எதிரிடை நட்சத்திரத்தில் மற்ற கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

சூரியன் லக்கினாதிபதியாக இருந்து அவரின் எதிரிடை நட்சத்திரத்தில் மற்ற கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
சந்திரன் நின்றால் :

தாய் , தந்தை வகை ஒற்றுமையில் குறைவு , பிரயாணத்தில் பாதிப்பு , இடது கண் கோளாறு , அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு , குடும்பமுன்னேற்றம் தடை படுதல் , செய்யும் காரியங்கள் வெற்றி பெறா நிலை , நிலம் , வீடு , வாகனங்களால் செலவீனம் பாதிப்பு , குழந்தைகளுக்கு எதிர் பாராத ஆபத்து , ஆயுள் பயம் , நாஸ்தீக தன்மை , எதிரிகள் வீழ்ச்சி , கணவன் – மனைவி விரோத நிலை.

செவ்வாய் நின்றால் :

உடன் பிறப்புகளால் வரும் தீங்கு , ரத்த சம் பந்தமான பாதிப்புகள் , வீண் சண்டை , நிலம் , வீடு வாகன விஷயமின்மை திடீர் வீழ்ச்சி , தாய்-தந்தைவகை சொத்துக்கள் இழப்பு , பூர்வீக சொத்து விரையம், எதிரிகள் பலம் பெறுதல்.

சூரியன் லக்கினாதிபதியாக இருந்து அவரின் எதிரிடை நட்சத்திரத்தில் மற்ற கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்
புதன் நின்றால் :

பொருளாதார வீழ்ச்சி , எத்தொழிலிலும் விருத்தியாகாமை , லாபம் பெற முடியாமை , மூத்த சகோதரவகை பாதிப்புகள் , மாமன் வகை குற்றங்கள் , உடன்பிறப்பின் பாக்கியங்களுக்கு பங்கம் , விரையம் , தாய்க்கு ஆயுள் பயம் , புத்திர புத்திரிகளின் இல்லறம் தொழில் பாதிப்புகள் . எதிரிகளுக்கு ஏற்படும் பங்கம்- மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.

குரு நின்றால் :

குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள் , பூர்வீக சொத்தால் வரும்தொல்லைகள் . அச் சொத்து விருத்தியில்லாமை , தெய்வீக விசயங்களால் வரும் இடையூறுகள் , மனக்குழப்பம் , கௌரவ குறைவு , அதிர்ஷ்ட மில்லாத நிலை , விபத்துக்களால் ஏற்படும் செலவீனம் , பயம் தந்தையின் இழப்பு , அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் , தொழில் முடக்கம்.

சுக்கிரன் நின்றால் :

பெண்கள் வகையில் ஏற்படும் அவமானம் , காதல் தோல்வி , இல்லற வாழ்வு பாதிப்பு , வீரிய பலம் இல்லாத நிலை , தொழில் வகையில் ஏற்படும் தடைகள் , குடும்பத்தில் உள்ள பொருள்கள் உடமைகளுக்கு சேதம் , உடன்பிறப்பிற்கு ஏற்படும் கண்டாதி தோஷங்கள் , பிரயாணங்களில் வரும் பயம் , நிலம் – வீடு வாகன இழப்பு , குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு , மனைவி அல்லது கணவனின் பாக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு , ஜாதகனுக்கு எதிர்பாராமல் வரும் ஆயுள் பயம்.

சனி நின்றால் :

கணவன் மனைவி ஒற்றுமையில் பாதிப்பு , மனைவி வகையினரின் எதிர்ப்புகள் , வாத , வாயு ரோகங்கள் , உடல் ஹீனம் தேக பங்கம் , தந்தையின் தொழில் , ஜீவனம் பாதிப்பு , உடன் பிறப்பிற்கு புத்திர தோஷம் , பூர்வீக சொத்தால் பாதிப்பு , நிலம் – வீடு வாகன விஷயங்களால் பொருள் இழப்பு குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுதல் , தொழிலில் தடை.

ராகு நின்றால் :

பொருளாதார பாதிப்பு , பிற மதத்தினரால் வரும் கெடுதல் , விஷ பயம் , மாந்த்ரீக தொல்லை , அருவருக்கத் தக்க நோய்கள் , மனபேதம் , செயற்கை மரணம்.

கேது நின்றால் :

நாஸ்த்திக தன்மை , பிற மதத்தினால் வரும் பயம் , தொல்லைகள் , விஷ ஜந்துகளால் வரும் ஆபத்து , துர்தே வதா சேஷ்டைகளால் வரும் பாதிப்பு , கெட்ட ஆவிகளின் தொல்லை.

சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தை காண இங்கே சொடுக்கவும்

- Advertisement -
Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular