Friday, September 29, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-வெள்ளிக் கிழமை ,ஜூன் 10,2022

இன்றைய ராசி பலன்கள்-வெள்ளிக் கிழமை ,ஜூன் 10,2022

ASTRO SIVA

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள்
மேஷம்

உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக சிறு பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். விற்பனை கூடுதலாக இருக்கும்.

ரிஷபம் 

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

மிதுனம் 

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

கடகம் 

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள்.

சிம்மம் 

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.

கன்னி 

குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்ப்புகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம் 

எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம் 

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம் 

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியா பாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கும்பம் 

ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம் 

பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular