Friday, December 8, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-செவ்வாய் -ஜூலை-05-2022

இன்றைய ராசி பலன்கள்-செவ்வாய் -ஜூலை-05-2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷபம்

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியா பாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மிதுனம்

எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள் .

சிம்மம்

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப்பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். நல்லன நடக்கும் நாள்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர் நண்பர்களால் ஆதாய முண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

தனுசு

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது .தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

மன உளைச்சல் நீங்கித் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

மீனம்

உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular