Thursday, December 7, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-வியாழன் ...

இன்றைய ராசி பலன்கள்-வியாழன் -ஜூலை-28-2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுபொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நல்லன நடக்கும் நாள்.

துலாம்

குடும்பத்தில் வந்த கூச்சல் குழப்பங்கள் விலகி சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் லாபம்வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

தனுசு

சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும்.

மகரம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கும்பம்

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளைவிரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular