ராசி | பலன் |
மேஷம்  | மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். சுமாரான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். |
ரிஷபம்  | குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோ கத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். |
மிதுனம்  | உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள் |
கடகம்  | மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பயணங்கள் அலைச்சல் தரலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் இறுதியில் பலிதமாகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் சிலரைத் தேடி வரும். மனதளவில் தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். |
சிம்மம்  | செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோ கத்தில் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். |
கன்னி  | வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். |
துலாம்  | மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். தெளிவாகப் பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
|
விருச்சிகம்  | கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள். |
தனுசு | குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். |
மகரம் | தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். |
கும்பம் | கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். சுமைகளைக் கூட சுகமாகும் நல்ல நாள். |
மீனம் | மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். அதனால் தேவைகளை சமாளிப்பீர்கள். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். |