Friday, July 26, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-வியாழன்- ...

இன்றைய ராசி பலன்கள்-வியாழன்- ஆகஸ்ட்-18-2022

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.

மிதுனம்

தந்தைவழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு பாராட்டும்படி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

சிம்மம்

வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்த படியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம்போல் இருக்கும்.

கன்னி

எந்த ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம்

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும்.

விருச்சிகம்

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங் கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார் கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

தனுசு

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

சோர்வு களைப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாதசெலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சகஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular