இன்றைய ராசி பலன்
பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் அறிவுரைகள் தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.
ஜாதக பலன் /திருமணபெருத்தம் /ஜோதிட ஆலோசனைகளை பெற கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப்புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசிசாதிப்பீர்கள். பிள்ளைகளால்உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம்வரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிஅடையும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கிடைக்கும் நாள்.

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதரவகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு ,வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். உறவினர்கள் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய தினம்.

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.