ஆயுள் நிர்ணயம்
♦️ஆண் ஜாதகத்தில் சூரியனும் பெண் ஜாதகத்தில் சந்திரனும் வலுத்தால் தீர்க்க ஆயுள்.
♦️கேந்திரங்களில் சுப கிரகங்களும் செவ்வாய், சனி, ராகு இவர்கள் 3, 6 ,12-ல் இருந்தால் தீர்க்க ஆயுள்.
♦️லக்னாதிபதியும் எல்லா சுப கோள்களும் கேந்திரங்களில் இருந்தால் தீர்க்க ஆயுள்.
♦️லக்னாதிபதியும் எல்லா சுப கிரகங்களும் கேந்திரம் மற்றும் 2,5,8, 11 ஆகிய பணபரஸ்தானங்களில் இருந்தால் மத்திம ஆயுள்.
♦️லக்னாதிபதியும் மற்ற சுப கிரகங்களும் 3,6, 9, 12 ஆகிய ஆபோகிலிமம் ஸ்தானங்களில் இருந்தால் அற்ப ஆயுள்.
♦️8-க்கு உடையவன் மற்றும் எல்லா சுப கிரகங்களும் கேந்திரங்களில் இருந்தால் அற்ப ஆயுள். இவையே மேலே சொன்ன பணபரஸ்தானங்களில் இருந்தால் மத்திமா ஆயுள். இவையே முன்னர் கூறிய ஆபோகிலிமம் ஸ்தானங்களில் இருந்தால் தீர்க்க ஆயுள்.
♦️லக்னாதிபதி 8க்கு உடையவனைவிட வலுத்தால் தீர்க்காயுள்.
♦️லக்னாதிபதி பலவானாகி இவனும், குருவும் கேந்திரங்களில் இருந்து, 8-ம் இடம் மற்றும் கேந்திரங்களில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்தால் தீர்க்க ஆயுள்.
♦️லக்னாதிபதி மிகவும் வலுத்து அசுபர்கள் எவராலும் பார்க்கப்படாவிட்டால் தீர்க்க ஆயுள்.
♦️பஞ்ச மகா புருஷ யோகங்கள் என்கிற ருசக யோகம், பத்திர யோகம், அம்ச யோகம், மாளவ்ய யோகம் மற்றும் ஸஸயோகம் இவற்றில் ஒன்று அமைந்தாலும் ஜாதகன் தீர்க்காயுள்ளவன். இந்த யோகங்கள் முறையே செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கோள்கள் கேந்திரங்களில் இருந்து ஆட்சி உச்சமானால் ஏற்படுகின்றன
♦️அட்டமாதிபதி 12,9, 2, 3-ல்இருந்தால் 100 வயது.
♦️அட்டமாதிபதி 6-ல் இருந்தால் 50 வயது
♦️அட்டமாதிபதி 8, 11, 5-ம் இடங்களில் இருந்தால் 75 வயது.
♦️அட்டமாதிபதி 4,7,10-ம் இடங்களில் இருந்தால் அற்ப ஆயுள்.
♦️பஞ்ச மகா புருஷ யோகத்தில் ஒன்று இருந்தால் தீர்க்க ஆயுள்.
♦️முதல் நான்கு வீடுகளுக்குள் 4க்கு மேல் கோள்கள் இருந்தால் தீர்க்க ஆயுள்.
♦️4 முதல் 8 வீடுகள் வரை கிரகங்கள் இருந்தால் மத்திம ஆயுள்.
♦️8முதல் 12 வீடுகள் வரை கிரகங்கள் இருந்தால் அற்ப ஆயுள்.