Thursday, March 30, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்முக்கிய ஜோதிட விதிகள்

முக்கிய ஜோதிட விதிகள்

ASTRO SIVA

google news astrosiva

ஜோதிட விதிகள்

ஐப்பசி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்களுக்கு சூரியன் நீச்சம் ஒன்றும் பண்ணாது.

ராசி கட்டத்தில் சந்திரன் வளர்பிறையா இருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும் சந்திராஷ்டமம் ஒன்றும் செய்யாது.

செவ்வாய் மேஷம், விருச்சகம், மகரத்தில் இருந்தாலும் ஜாதகர் செவ்வாய்க்கிழமை பிறந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் ஒன்றும் செய்யாது.

புதன்கிழமை பிறந்தவரை நீச்ச புதன் ஒன்றும் செய்யாது.

பூரம் 1-ல் குரு சஞ்சரிக்கும் போது குரு வர்கோத்தமம் ஆவதால் மாமாங்கத் தடை ஒன்றும் செய்யாது.

வியாழக்கிழமை பிறந்தவருக்கு குருவின் நீச்சம் ஒன்றும் செய்யாது.

வெள்ளிக்கிழமை பிறந்தவரை நீச்ச சுக்கிரன் ஒன்றும் செய்யாது.

சனி மகரம், கும்பம், துலாத்தில் இருக்க பிறந்தவரையும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரரையும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஒன்றும் செய்யாது.

திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்களையும், ராகு திசை நடப்பவரையும் ராகு காலம் ஒன்றும் செய்யாது.

கும்பத்தில் கேது இருந்தால் அந்த திசை யோக பலன் தரும். ராகு இருந்தால் பரிசு விழும்.

ஜோதிட விதிகள்

மீனம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய மூலை வீடுகள் கேந்திரஸ்தானமாகும். அங்கு மீனத்தில் குரு, மிதுனம், கன்னியில் புதன், தனுசில் குரு தனித்து இருந்தால் பாதகம் இல்லை.

லக்கினத்திற்கு 1,5, 9-ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள். அங்கு செவ்வாய், சனி இருப்பது நல்லது

லக்கினத்திற்கு 6,8,12-ம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள். அந்த வீடுகளில் கிரகங்கள் இருந்தால் வலுவிழக்கும். சுக்கிரனுக்கு 12-ம் வீட்டுக்கு பதில் 3-ம் வீடு மறைவு ஸ்தானம். சுக்கிரன் மூன்றில் இருக்க அத திசை நடந்தால் ஜாதகர் ஊர் ஊராக சுற்றுவார்.

ராகு -கேது: செவ்வாய்க்கு நல்லது செய்யும்; சனி-சூரியன், சந்திரனுக்கு நல்லது செய்யும்.

நீர் கட்டங்களான மீனம், கடகம், விருச்சகத்தில் கிரகங்கள் (ராசியிலோ அல்லது அம்சத்திலோ) இருந்தால் வெளிநாட்டு யோகம் உண்டு.

சந்திரன் 7ல் உச்சமுற்றால் வசுமதி யோகம் நல்ல மனைவி/ கணவர் அமைவார்.

மேஷ ராசிக்கு அஷ்டம சனி ஒன்றும் செய்யாது.

மிதுன ராசிக்கு அர்த்தாட்டம குரு ஒன்றும் செய்யாது.

ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அஷ்டம சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி வந்தால் தீமை நிகழாது

அஷ்டமி ,நவமி திதிகளில் மருந்து உண்டால் உடல் நோய் உடனே மறையும்.

சந்திரன்-கேது; சூரியன்-கேது; சந்திரன்-ராகு; சூரியன்-ராகு; இணைந்த ஜாதகத்தினரை கிரகணம் ஒன்றும் செய்யாது

ராகுவைப் போல கொடுப்பரும் இல்லை கெடுப்பரும் இல்லை என்ற வசனம் கிடையாது.

செவ்வாவை போல் கேது,சனியைப் போல் ராகு என்பது கேதுவுக்கும் செவ்வாய்க்கும் திசை ஆட்சி காலம் 7 ஆண்டுகள் என்பதாகும். சனிக்கும் ராகுவுக்கும் திசை ஆட்சி காலம் 18, 19 ஆண்டுகள் என்பதாலும் கூறப்பட்டது.

அசுவினி, மகம், மூலம், ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு என்ற வரிசையில் கிரக வாழ்வு அமைவதால் திசைகள் பின் யோக ஜாதகம் ஆகும்

ராகு-கேது வர்கோத்தமமானால் நல்ல பலன்கள் உண்டாகும்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு மகான்கள் அருள் அதிக முயற்சியினாலேயே கிடைக்கும்.

திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்கள் ராகு, குரு, சனி, புதன், கேது என்னும் வரிசையில் திசைகள் அமைவதால் வெளிநாட்டு யோகம் உண்டு. முன்யோக ஜாதகம்முள்ளவர்கள். பலன்கள் அமோக நலன் தரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular