Saturday, December 2, 2023
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி (ரோகஸ்தான சனி )

சனி பகவான் இருப்பிட பலன் -கும்ப சனி

இதுவரையில் கன்னி ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் தற்போது ஆறாமிடம் எனும் ருண, ரோக ஸ்தானத் தில் கும்பத்தில் வந்து அமர்கிறார். கும்ப ராசியின் அவிட்டம், சதயம், பூரட்டாதி எனும் நட்சத்திரங்களின் வழியே, தனது பலன்களைப் பிரித்தளிப்பார். அவர் அங்கிருந்து சுன்னி ராசியின் 8-ஆமிடம், 12-ஆமிடம் மற்றும் 3-ஆமிடத்தைப் பார்வையிட்டுப் பலன் தருவார்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி

கன்னி ராசியின் 6-ஆமிடத்தில் சனி அமர்ந்துள்ளார். கன்னி ராசிக்கு சனி 5மற்றும் 6-ன் அதிபதி. ஒரு ஆரோக்கிய ஸ்தானாதிபதி, நோய் ஸ்தானத்தில் அமர்ந்து பலன் கொடுக்கப்போகிறார் எனில் இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினர் வயிறு சம்பந்தமான இம்சையை உணர்வர். கர்ப்பப்பையில் சோதனை செய்யும்போது அது ரொம்ப சுருங்கி இருப்பதாக மருத்துவர் கூறுவார் உங்களில் சிலர் குழந்தைப் பேறு சம்பந்தமாக மருத்துவரை நாடுவீர்கள்

மருத்துவம் சம்பந்தமான வேலை நிறைய ஜாதகர்களுக்குக் கிடைக்கும். வாரிசுகள் வேலை விஷயமாக கடன்வாங்க நேரிடும். கன்னி ராசிக் கலைஞர்கள் ஒன்று வேலைப்பளுவால் சிரமப்படுவர் அல்லது கடன் வாங்கும் சூழல் வரும். மருத்துவமனையில் சேவை செய்வீர்கள். சில மந்திரிகள் மருத்துவர் துறையில் சேர்வர். காதலில் சண்டை வரும். கன்னி ராசிக் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள் ஆனால் பரீட்சையில் மறந்துவிடுவர். உங்களில் சிலர், உங்கள் பரம்பரைத் தொழிலான வட்டி வியாபாரம், பஞ்சாயத்து செய்தல், சித்த மருத்துவம், கை வைத்திய முறை, பேறுகாலம் சம்பந்த உதவி, மந்திர, வைதீக உச்சாடனம், வேதம் சம்பந்தமான சேவை என பாரம்பரியத் தொழில்களை ஆரம்பித்து படு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்

உங்களில் பலர் சிறைச்சாலை. வனத்துறை, மிருகக்காட்சிசாலை, இரும்புக் கடைகள், எண்ணெய்க் கடை அசைவைக் கடை, சலூன் போன்றவற்றில் வேலை கிடைக்கும். ஆயினும் சம்பளம் சற்று தடை தாமதமாகத்தான் கிடைக்கும். உங்களின் சிலரின் வாரிசு கோபகுணம் கொண்டவராக மாறி, எல்லாருடனும் சண்டையிட ஆரம்பிப்பார். விளையாட்டுப் போட்டியின்போது சண்டையிட்டு அடிதடியில் இறங்கிவிடுவார். நீங்களும் பொழுதுபோக்கு கொண்டாட்டங்களில் ஈடுபடும்போது அடிதடி சண்டை வந்துவிடும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி
சனி பார்வை பலன்கள்

சனி 3ம் பார்வை பலன்கள்

சனி தனது 3-ஆம் பார்வையால் ராசியில் எட்டாமிடத்தை பார்க்கிறார். 8-ஆமிடம் என்பது அவமானம் விபத்து, துன்பம், அழுகை ஸ்தானம் சவி பார்த்த இடத்தை பஸ்பமாக்குவார். (எனில் சனி பார்த்த 8-ஆமிடப்பலன் களும் தீர்த்துப் போகுமல்லவா! கன்னி ராசியினர் இதுவரையில் அனுபவித்து வந்த அவமா களை அழித்துவிடுவார். துன்பங்களைத் துடைத்தெறிவார்.

மாங்கல்யம் சம்பந்த பிரச்சினைகளை சரிசெய்து விடுவார் சிவருக்கு மாங்கல்யம் காணாமல் போயிருந்தால், அது இந்தக் காலகட்டத்தில் கிடைத்துவிடும். தம்பதிகள் பிரிந்திருந்தால் இப்போது சமாதானமாகி ஒன்றுசேர்வர். மேலும் உயிர் சேதாராத்தை விலக்கி ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்.

சிறைச்சாலை செல்வதைத் தடுப்பார். வீண் வம்பு வழக்குகளிலிருந்து தப்பிவிடுவீர்கள். உங்களில் சிலர் மிகக் கஷ்டத்துடன், வறுமையோடு போராடிப் கொண்டிருந்தால், அந்த துன்பம் படிப்படி யாகக் குறையும், சிலர் வெகு அவமானத்துடனும், அடிமைத்தனத்துடனும் வாழ்ந்து கொண்டிருந்தால், அதிலிருந்து நிவர்த்தி பெறுவர்.

கிரிமினல் வழக்கு நீங்கிவிடும். உங்கள் இளைய சகோதரர் யாராவது காணாமல் அல்லது ஓடிப்போயிருந்தால், அவர் திரும்பி வருவார் அல்லது அவர் இருக்குமிடம் தெரியவரும். மனை விஷய வில்லங்கம் ஒரு முடிவுக்கு வரும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி

சீருடைப் பணியாளர்கள் வஞ்சனையால் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தால், அவ்விஷயம் நல்ல திருப்பமாகி நன்மை தரும். சுரங்கத் தொழில் கொண்டோர் அது சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவர். தீவிபத்து தடுக்கப்படும். பூமி, மஸ் சம்பந்த தொழில் சார்ந்தவர்களின் துன்பம் நீங்கும்.

கன்னி ராசியின் 8-ஆமிடத்தை சனி பார்ப்பதால் ஆயுள் குற்றம் நீங்கும். இந்த சனிப்பெயர்ச்சிக் காலகட்டத்தில் உங்கள்மீதிருந்த வீண் பழிகளை, குற்றங்களை. அபாண்டமான குற்றச்சாட்டுகளை நீக்க முழு முயற்சியுடன் ஈடுபடுங்கள். அப்போது உங்களின் சொல்லொணாத் துன்பம் நீங்கி, சாதாரண வாழ்வு நிலையை அடையமுடியும்

சனி 7-ஆம் பார்வைப் பலன்

சளி தனது ஏழாம் பார்வையால் தன்னி ராசியின் 12-ஆம் வீட்டைப் பார்க்கிறார். 12-ஆம் வீடு என்பது விரய வீடு. அது சிம்ம ராசியின் சூரியனின் வீடு. இதுவரையில் அரசாங்கம் சம்பந்தமான அலைச்சல் இருந்தால், அது இந்த சனிப்பெயர்ச்சியில் தீர்ந்துவிடும். அரசு சார்பிலுள்ள செலவுகள் கட்டுக்குள் வரும் அரசு அதிகாரிகள் எதிர்பார்த்த இடமாற்றம் தள்ளிப் போகும். மேலும் அரசு விஷய லஞ்சம் கொடுக்கல்- வாங்கல் குறையும்.

கன்னி ராசியினரின் எல்லா அலைச்சல்களும் குறையும். அது உயர்கல்வி,வேலை, ஆன்மிகம் என எதுவானாலும் இருக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள் சுருங்கும் அல்லது தடை செய்யப்படும். அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்ய வெளிநாடு செல்வதெல்லாம் ஸ்டாப் ஆகிவிடும். அரசியல்வாதிகள் எங்கும் செல்லாமல், ஒரே இடத்தில் இருக்க நேரிடும். இது அவர்களின் தோல்வி, உடல் ஆரோக்கியம், சிறையில் இருப்பது, மறைவாக இருக்க நேரிடுவது. நெருக்கடி தூரதேசத்தில் வாழ்வது என காரணங்களில் ஏதோவென்று இருக்கலாம். ஆனால் மறைந்து ஒரு இடத்தில் அழுத்தமாக அமர்வது தவிர்க்கமுடியாதது ஆகும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி

இந்த சனியின் பார்வை உங்களை வெளியூர், வெளிநாட்டுக்கும் செல்லவிடாமல் தடுக்கும். மேலும் அரசுவகையிலும் தடை அங்கீகாரம் கிடைக்காமல் போவது என துன்பம் வரும் எனவே பயணம் முதலீடு போன்ற விஷயங்களில் அதிக கவனம் தேவை.

சனி 10-ஆம் பார்வைப் பலன்

சனி தனது 10-ஆம் பார்வையால் கன்னி ராசியாரின் 3-ஆம் வீட்டைப் பார்க்கிறார். 3ஆம் வீடு தைரிய வீரிய ஸ்தானம். இந்த சனிப்பெயர்ச்சி ஏனோ உங்களுக்கு ஒரு கோழைத்தனத்தைக் கொடுத்துவிடும். முன் முயற்சி செய்யக்கூட ரொம்ப யோசனை வரும். முன்னேற்றத்துக்கான வழிகளை சிந்திக்க சோம்பேறித்தனமாக இருக்கும். மனை, பூமி வயல் சம்பந்தமாக விற்க விலை பேசும்போது, அனேக தடை தாமதம் வரும். வீடு மாற்றலாம் என திட்டமிடும்போது, நிறைய குழப்பம் தோன்றும்.

மன உறுதி குலையும். ஞாபக சக்தி பலவீனமாகும். இந்த அழகில் எவளாவது சிட்டுக்குருவி லேகியம் விற்கிறானா எனத் தேடத் தோன்றும். விவசாயப் பொருட்களை சந்தைக்குக் கொண்டுபோக மிகப் பிரயாசைப்பட வேண்டியிருக்கும். உங்களின் பணியாளர்கள் முறுக்கிக்கொண்டு, உங்களை அழவைப்பர்.எல்லா தின தொழில் செய்பவர்களும் தகுதியான வேலையாட்கள் கிடைக்காமல் துன்புறுவர். வீட்டிலிருக்கும் பெண்களும், வேலைக்கு நல்ல ஆட்கள் கிடைக்காமல் அல்லல்படுவர்.

இந்த சனியின் பார்வை உங்களின் தைரியத்தை இழக்கச்செய்து மனத் தடுமாற்றம் கொள்ளச் செய்யும் அதனால் உங்களின் குடும்பத்தாரிடம் எந்த விஷயத்தையும் கலந்துபேசி பின் முடிவெடுங்கள். உங்களுக்கு சுமார் வேலையாட்கள் இருந்தாலும், அவர்களிடம் சுமூகமாகச் சென்று வேலை வாங்குங்கள். உங்கள் இளைய சகோதரர் விஷயத்தில் வாக்குவாதம் செய்யவேண்டாம்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி

பலன் தரும் பரிகாரம்

சனி கிழமைகளில் ஸ்ரீ ராமபிரான் வழிபாடு இன்னல்களை நீக்கி வெற்றி தரும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular