Tuesday, May 21, 2024
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 விருச்சிகம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 விருச்சிகம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள்-விருச்சிகம்

இதுவரையில் விருச்சிக ராசியின் 3-ஆமிடத்தில் இருந்துவந்த சனி இப்போது 4-மிடமான சுகஸ்தானத்தில் நகர்ந்துள்ளார். இவர் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள்மூலம் பலனைப் பிரித்தளிப்பார். 4-ஆமிடத்தில் அமரும் சனி விருச்சிக ராசியின் 6-ஆமிடம், 10-ஆமிடம், ராசி ஆகியவற்றைப் பார்வையிடுவார்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி இருப்பிட பலன்

சனி வந்தமர்ந்தவுடன் விருச்சிகத்தார் ஒரு பழைய வீட்டை வாங்கிவிடுவர். நீங்கள் பெரிய பணக்காரராக இருந்தாலும், பழமையான மாடல் வீடுதான் வேண்டும் என அடம் பிடித்து, பழைய வீட்டை வாங்கிவிடுவீர்கள். கார், இரு சக்கர வாகனம், சைக்கிள் போன்றவை,கண்டுபிடித்தவுடன் எந்த மாடலில் இருந்ததோ, அதே தினுசில் இருக்கும் வாகனம் வாங்குவீர்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்

அசையா சொத்துகள் வாங்க இயலும். வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பள்ளிக்கு சில குழந்தைகள் மாறும் வீடு கட்டும் கான்ட்ராக்ட் கிடைக்கும் வேலையாட்கள் அனுசரணை உண்டு வீட்டில் தோட்டமுள்ள இடம் சும்மாதானே இருக்கு என இரண்டு மாடு, நான்கு ஆடு, பத்துக் கோழி வாங்கி வளர்ப்பீர்கள். சரி; இதனால் வேலை அதிகமாகிவிட்டது என ஒரு வேலையாளை நியமிப்பீர்கள் பால் வியாபாரம் நடக்கும். பக்கத்துவீட்டுக் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பீர்கள் வீர, தீர. பராக்கிரமமாக துள்ளித் திரிவீர்கள். உங்களில் சிலர், இளைய சகோதர னோடு சேர்ந்து, உணவைப் பகிர்ந்தளிக்கும் கேட்டரிங் தொழில் ஆரம்பிக்கக்கூடும். சிலர் நிலம் வாங்கி, மிகப்பழமையான பயிர்களை பழமையான முறையில் பயிர்செய்ய ஆரம்பித்து விடுவீர்கள் இதற்கு நண்பர்களும் உதவிசெய்வர்.

சனி பார்வை பலன்கள்

சனி 3ம் பார்வை பலன்கள்

சனி தனது மூன்றாம் பார்வையால் விருச்சிக ராசியின் 6-ஆமிடத்தை முறைத் துப் பார்க்கிறார். 6-ஆமிடம் என்பது ருண, ரோக, எதிரி ஸ்தானம். சனி பார்வைபட்ட இடம் பாழ் என்பது ஜோதிட விதி. அதன்படி 6-ஆமிடத்தை, சனி பார்ப்பதால், உங்களுக்கு இதுவரையில் இருந்துவந்த கடன் தொல்லை தீர்ந்துவிடும். உங்கள் எதிரிகள் மறைவர். முக்கியமாக உங்கள் தொழில், வியாபாரத்தில் தொல்லை கொடுத்த சிலபல எதிரிகள் இடம் மாறிவிடுவர். உங்களில் சிலரது தலைவலி, தலை பாரமாக இருப்பது, சதா தும்மல் என இவைபோன்ற நோய்கள். நல்ல மருந்தின்மூலம் குணமாகிவிடும். உங்களில் பலர் அடிக்கடி வேலையை மாற்றவேண்டியிருக்கும் அதற்குக் காரணம் சக பணியாளர்களின் இம்சையாக இருக்கலாம். அல்லது வாழ்க்கைத் துணையின் வேண்டுகோளாக இருக்கலாம்.

உங்கள் திருமணம் முடிவதால், வேறிட மாற்றம் வேறிட வேலைக்குச் செல்ல செய்யும். அரசாங்கத்தில் வேலை பார்த்தால், அரசு உத்தரவுப்படி வேலை இடமாற்றம் இருக்கும் சிலர், வேலை செய்யுமிடத்தில் கோபித்துக்கொண்டு வேலையை விட்டுவிட்டு வரலாம்.

இவ்விதம் உணர்ச்சிவசப்பட்டு வேலையைத் தொலைத்துவிட்டால், அப்புறம் வேலை கிடைப்பது பெருங்கஷ்டமாகிவிடும். எனவே கவனமாக கோபத்தைக் கட்டுப்படுத்தி, அங்கேயே குப்பை கொட்டுங்கள். ஏனோ தாய்மாமனுக்கும் உங்களுக்குமிடையே ஆகாமல் போய்விடும். இதற்கு சிலசமயம் உங்கள் மாமனார், மாமியார் காரணமாகக் கூடும்.

உங்களில் சிலருக்கு தாயார் அல்லது இளைய சகோதரனைப் பற்றிய மனக்கவலை இருந்துகொண்டே இருக்கும் சிவருக்கு உரிய நேரத்தில் சாப்பிடமுடியாத சூழ்நிலை தோன்றும் சிலரது வீட்டில் திருட்டு நடக்கும். சிலருக்கு அரசு அதிகாரிகளால் ரெய்டு நடத்தப்படும். யாரிடமும் இரவல் நகை பொருட்கள் வாங்கவேண்டாம் அது தொலையும் நிலையுண்டு. வெகுசிலருக்கு வாழ்க்கைத்துணை வேறிடம் செல்வார். வியாபார பங்குதாரரும் மாறும் நிலை ஏற்படும். வாடகை வீட்டில் இருப்பவர்களும், வீடு வாடகைக்குக் கொடுத்திருப்பவர்களும் ,ஏதோ ஒருவகையில் இம்சையை அனுபவிப்பர்.

சனி 7ம் பார்வை பலன்

சனி தனது ஏழாம் பார்வையால் விருச்சிகத்தின் 10-ஆம் வீட்டை பார்க்கிறார் உங்களின் 10-ஆம் வீடு சிம்மம், அதிபர் சூரியன் எப்போதும் சனிக்கு சூரியனைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது அதுவும் நேரெதிரே நின்று பார்க்கும்போது சனி கோபத்தின் உச்சிக்கே செல்வார். முதலில் சனி அரசு பதவிகளை குறிவைத்துத் தாக்குவார் ஒன்று அந்த பதவியிலிருந்து கால் காசுக்குப்பெறாத பதவிக்கு இடமாற்றம் கொடுப்பார். அல்லது அந்த பதவியிலிருந்து கீழிறக்கம் செய்வார். அல்லது வேலையே இல்லாமல் சஸ்பெண்ட் செய்ய வைத்துவிடுவார் தொழில் அடிப்படையில் சில தம்பதிகளுக்குள் ‘ஈகோ’ யுத்தம் வரச்செய்து, அவர்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிடுவார் சனிபகவான்.

சனி பெயர்ச்சி பலன்கள்

நல்ல குழுவில் அருமையான யூனிட்டில் வேலை செய்து, அக்கடா என நிம்மதியாகஇருக்கும் கலைஞர்கள் சிலரை அதிலிருந்து நீங்குமாறு செய்துவிடுவார் கலைஞர்கள் மிக வருந்துவர். இதனால் பணவரவு மட்டுமன்றி, கெளரவமும் பாழாகும். வேலை செய்யும், தொழில் புரியும் பெண்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டிருக்கும் சூழலைவிட்டு விலகுமாறு சனி செய்துவிடுவார். இதனால் உங்கள் புகழ், அதிகாரம், கௌரவம் என அனைத்தும் ஒரு படி இறங்கிவிடும்.

மருத்துவத் தொழில் செய்வோர் சற்று கவனமாக வேலை செய்யவேண்டும். இடது காலுக்கு பதில் வலது காலுக்கு ஆபரேஷன் செய்ய வைத்துவிடுவார் சனி. இந்தக் காலகட்டத்தில் நீதிபதிகளும் கண்டனத் துக்கு ஆளாகலாம். அர்ச்சகர்கள், விபூதி கொடுக்கும்போது கவனமாக இருக்கவும். வீண் அபவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் வாழ்வின் குறிக்கோள்களை நிறை வேற்ற இயலாமல் திண்டாடுவீர்கள் உங்கள் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற இயலாமல் போகும். அரசியல்வாதிகளும் பின்னடைவு காண்பர். அவர்கள் ஒரு பதவியும் கிடைக்காமல் அம்போவென அமர்ந்துவிட நேரிடும். சனியின் நேர்பார்வை ஜாதகருக்கு ஒரு துளியளவு புகழ், கௌரவம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும்.

சனி 10ம் பார்வை பலன்

சனி தனது பத்தாம் பார்வையால் விருச்சிக ராசியை விறைப்பாக முறைக்கிறார். சனிப்பெயர்ச்சியில் மிக பாதிக்கப்படுவதில் விருச்சிக ராசியும் ஒன்று ராசியைப் பார்க்கும் சனி, விருச்சிகத்தாரை கப்சிப் என்று ஒரு பக்கம் உட்கார் வைத்துவிடுவார் இது சரிவர யோசிக்காததால் ஏற்படும் பண இழப்பால் இருக்கும். கர்ப்பப்பை சம்பந்த நோயால் இருக்கலாம்.

சிலர் காதல் விவகாரத்தில் அவமானப்பட்டு வீட்டிற்குள் முடங்கலாம். மருமகன் அல்லது மருமகள் உங்கள்மீது பிராது கொடுப்பதால் வீட்டிலேயே இருக்கலாம் மற்ற ரகசிய உறவுகள் உலகிற்குத் தெரிய வருவதாலும், வீட்டிலேயே அமரலாம்.

கலைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் கெட்ட பெயர், அவமானம் காரணமாக வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். சீருடைப் பணியாளர்கள் லஞ்ச வழக்கில் மாட்டி, வீட்டிலிருக்க நேரிடும். மனை, வீடு விற்கும்போது, பத்திரக் குளறுபடிகள், பதிவாளர் வகையறாவைச் சேர்த்து உள்ளே தள்ளிவிடும். இதுவரையில் ஆர்ப்பாட்டமாக இருந்த விருச்சிக ராசியினர் வாய்முடி இருக்க நேரிடும்.

சுரங்கத்தொழில், அகழ்வராய்ச்சி எனும் பணி சம்பந்தப்பட்டவர்கள் ஏதேனும் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்வர்.ஒரு ராசியை சனி பார்வையிடும்போது அதன் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கிவிடுவார். மின்சாரத் துறையில் சாக்குபோக்குக் காட்டி தப்பிக்க இயலாது. ராசியைப் பாக்கும் சனி, தனது பார்வையால் ராசியினரை கட்டிப்போட்டு விடுவார். விருச்சிக ராசிநாதன் செவ்வாய் என்பதால் பகை பார்வையும் சேர்ந்து தாக்கும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

ஆந்திர மாநில பானக நரசிம்மரை வணங்கவும், அருகிலுள்ள நரசிம்மர் கோவிலுக்கு பானக விநியோகம் செய்து வணங்கவும். வேலை செய்யும் பணியாளர்களுக்கு எவ்வளவு உதவ முடியுமோ, அவ்வளவும் செய்யுங்கள். சுந்தர காண்டம் 53-ஆவது சர்க்கம், அனுமனின் வால் கொளுத்தப்படல் பாராயணம் நன்று.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular