Tuesday, June 18, 2024
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2023

சனி பெயர்ச்சி 2023

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பெயர்ச்சி 2023 -Sani Peyarchi

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பகவான்

பெற்றோர் சூரிய பகவான் ,சாயா தேவி
புஷ்பம்கருங்குவளை
தானியம்எள்ளு
ரத்தினம்நீலம்
உலோகம்இரும்பு
அதிதேவதைஎமன்
வஸ்திரம்கருப்பு
சமித்துவன்னி
திசைமேற்கு

சனி பகவானும், குரு பகவானும் சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது சம சப்தமாகப் பார்த்துக் கொண்டாலோ, சனி, குரு பகவான்கள் இணைந்திருப்பதாகப் பொருள்படும். இத்தகைய கிரக சேர்க்கையைப் பெற்ற ஜாதகன் முற்பிறவிகளில் கீழ்கண்ட புண்ணியங்களில் ஒன்றையோ பலவற்றையோ செய்திருப்பான்.

ஆலயங்கள் கட்டுதல், ஆலயங்களைப் பராமரித்தல், குரு சேவை செய்தல் யாகங்கள் செய்தல். தான தாமங்கள் செய்தல், சாது சன்னியாசிகளை உபசரித்தல், அநாதை ஆஸ்ரமங்களைக் கட்டுதல். அநாதைக் குழந்தைகளைப் பராமரித்தல்,சிவாச் சாரியார்களை உபசரித்தல் போன்ற புண்ணியங்களைச் செய்ததால் உண்டாகும் பிரதிபலன்கள் என்னவென்று பார்ப்போம்.

சனி பெயர்ச்சி 2023

ஜாதகன் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவான். எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெறுவான். தொழில் மற்றும் உத்தியோகங்களில் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பான் ஜாதகனுக்கு இல்லையென்று எத்தக் குறையும் இருக்காது ஜாதகன் கேட்காமலேயே பலவித உதவிகள் தேடி வரும். ஜாதகனுக்கு உதவ பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள் ஜாதகனுக்கும் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஜாதகனின் வார்த்தைக்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். ஜாதகனுக்கு வாழ்க்கையில் முழு திருப்தி உண்டாகும்.

பஞ்ச பூதத் தத்துவத்தில் சனி பகவான் வாயு தத்துவத்தைப் பிரபலிக்கிறார். வாயு தத்துவம்- உடல், கை, கால்கள், விரல்களின் இயக்கம்.

சனி பகவானின் பலம் குறைந்தவர்கள் கை, கால்கள் செயலிழக்கப் பெறுவார்கள். சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் வாயு தத்துவத்தின் அனுபவங்களைப் பெறுவார்கள் பெருக்கவும் இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள்.

12 ராசிகளுக்குமான சனி பெயர்ச்சி பலனை தெரிந்து கொள்ள இங்கே தொடவும்

சாதாரண விஷயத்துக்கும் கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள் நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள்.

வாயு தத்துவம் – ஸ்ரீகாளஹஸ்தி-வாயு லிங்கம்.

சனி பகவான்- ஆயுள்காரகர்.

பருவக் காலங்களில்- சனிபகவான்- பின்பனிக்காலம்.

எவருக்கும் ராஜ யோகம் என்று ஒரு யோகம் உண்டானால் அவருக்கு வாழ்வில் உன்னத ஸ்தானம் அமையும். செல்வம் திரளும். வெற்றி உண்டாகும்.

உபஜய ஸ்தானம் (வெற்றிக்கு உதவும் ராசி கள்) 3,6,10,11-ஆம் வீடுகளாகும். உபஜய ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களுக்கு பலம் அதிகம். அதே சமயம் அசுபக்கிரகங்களால் அந்தக் கிரகங்கள் பார்க்கப்படாமல் இருக்க வேண்டும் என் பதும் இந்த உபஜயஸ்தான வீடுகளின் அதிபர்களுக்கு யார் பகைவரோ அவரால் பார்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

லக்னப்படி ஒரு பாவம் பலம் குறைந்திருந்தால், சந்திர லக்னப்படி பலம் கூடினால் அது சிறப்பு- சத்தியாச்சாரியார் வாக்கு.

சனி பெயர்ச்சி 2023

பஞ்ச (ஐந்து) வகை மஹா புருஷ யோகங்களில் சனி பகவானுக்குரியது சசமஹாயோக மாகும். இது சனி பகவான் லக்னத்துக்கோ அல்லது ராசிக்கோ (சந்திர பகவான் இருக்குமிடம்) 1,4,7,10 ஆகிய இடங்களில் ஆட்சி, உச்சம். மூலத்திரிகோணம் பெற்றிருந்தாலோ உண்டாவது இந்த யோகத்தால் சனி பகவானால் கிடைக்கக் கூடிய நற்பலன்கள் உறுதியாகக் கிடைக்கும்.

இந்தக் காலங்களில் வாங்கும் சொத்துகளை சுலபமாக விற்க முடியாது இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் கும்பம். விருச்சிகம், சிம்மம், ரிஷபம் ஆகிய 4 ராசிகளுக்கு முறையே 1,4,7,10-ஆம் வீடுகளில் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருப்பதால், சச மஹாயோகம் உண்டாகிறது. இப்படி இருப்பதால் ஏழரை சனி (கும்பம்), அர்த்தாஷ்டம சனி (விருச் சிகம்). கண்டக சனி (சிம்மம்) ஆகிய சஞ்சாரத்தின் பலன்கள் பெருமளவுக்குக் குறையும்.

சனி பகவானுக்கு ஏழாம் வீடு திக் பலமாகும். இதனால் ஏழாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரித்தால் திக் பலம் உண்டாகி, ஏழாம் வீட்டின் பலத்தை பலனை விருத்தி செய்வார். இந்தச் சனிப் பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசிக்கு திக் பலத்துடன் சச மஹா யோகமும் உண்டாகிறது.

சனி பெயர்ச்சி 2023

ஜோதிடத்தில் சனி பகவான்

விவசாயத் துறை, இயந்திர, சமுதாயம் பொதுமக்கள் எண்ணெய், ஆடுகள், எருமை மாடுகள்,இரும்பு, ஈயம்.

எண் கணிதத்தில் சனி பகவான்

எஃப்.பி.-8-ஆம் எண்

சனி பகவான் ஜீவன காரகர் மற்றும் தத்துவப் பேராசிரியர் – வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பவர்.

உடலில் முழங்கால், கணுக்கால், பாதம் – இவைகளைக் குறிப்பவர்

சனி பகவான் 11-ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் சனி பகவான் 11-இல் தான் அமர வேண்டும். இதுதான் மஹோன்னதம் வாழ்க்கையில் அத்தனை சுக போகங்களையும் தைரியமாக அனுபவிப்பார்.

பொதுவாக, ஜாதகத்தில் சனி பகவான் நின்ற இடம் விருத்தியாகும் என்பது ஜோதிட விதி இதை ‘ஸ்தான விருத்தி கரோதி மந்தக;

சனி பகவானுக்கு மட்டும் தொடர்ந்து இரண்டு ராசிகள் சொந்த வீடுகளாக அமைகிறது. அதாவது 60 பாகை விஸ்தீரணத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். இது வேறு எந்தக் கிரகத்துக்கும் அமையவில்லை.

வலிமையை இழக்காத சனி பகவான்:

ராகு,கேது பகவான்கள் நின்ற பாதையில் சூரிய சந்திரப் பகவான்கள் கூடுவதை தான் நாம் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம்.ஆனால், வேறு கிரகங்கள் கூடுவதும் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சுக்கிர, சந்திர பகவான்கள் கூடுவது, சுக்கிர செவ்வாய் பகவான்கள் கூடுவது. செவ்வாய் சந்திர பகவான்கள் கூடுவது. சனி, செவ்வாய் பகவான்கள் கூடுவது போன்ற சேர்க்கைகள் ஏற்படலாம்.

வான மண்டலத்தில் ஒரு கிரகம் வேறு ஒரு கிரகத்தின் ஒளிப் பாதையில் வரும்போது அக்கிரகத்தின் பின் நிற்கும் ஒளியை நாம் பார்க்க முடியாது. இதையே நாம் கிரகணம் பிடிக்கிறது என்று சொல்கிறோம். நமக்கு சமீபத்தில் உள்ள கிரகம் அதற்கு பின்புறத்தில் உள்ள கிர கத்தின் ஒளியை மங்கச் செய்து விடுகிறது. இத னால் அக்கிரகத்தின் தோற்றமும் பிரகாசமும் அழகும் மறைகின்றன. இது கிரகணத் தோஷத்தால் ஏற்படுகிறது என்பது பொருந்துகிறது.

கிரகணம் பிடித்த கிரகம் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் உண்டு பண்ணும் என்று மகாதேவர் ஜாதக தத்துவம் என்ற நூலில் கூறியிருக்கிறார். ராசி மண் டலத்தில் சில கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தாலும் அக்கிரகங்கள் கிரகணமடையும் போது அவைகள் பலமிழந்து தங்கள் தசாபுத்தி காலங்களில் நற்பலன்களைத் தருவதில்லை என்று ஹோராச்சாரம் என்ற நூல் எடுத்துச் சொல்கிறது.

சுக்கிரப் பகவானையும். சனி பகவானையும் தவிர மற்ற கிரகங்கள் யாவும் கிரகணம் பிடிக்கும்போது, அக்கிரகங்கள் அரை பங்கு வலிமையை இழந்து விடுகின்றனர் என்றும் சந்திர பகவான் கிரகன பிடிப்பில் இருந்தால் அந்த ஜாதகருக்கு பதவி வீழ்ச்சி மூளைக் கோளாறு போன்ற பிணி பாதிப்புகள் உண்டாகும்.என்றும் சில சமயம் நீரால் கண்டத்துக்கு ஆளாக கூடும். என்றும் சொல்லப்படுகிறது.

செவ்வாய் கிரகம் கிரகணம் அடைந்தால் கஷ்டங்களும் கவலைகளும் பெருகும் எதையும் அழிக்கும் மிருக வெறி உண்டாகும்.

பதன் கிரகம் கிரகணம் அடைந்தால் விளைச்சல் நிலங்களால் நஷ்டமும் தீராத மனக்கவலைகளும் உண்டாகும்.

குரு கிரகம் கிரகணம் அடைந்திருந்தால் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும். சனிகிரகம் கிரகணம் அடைந்திருந்தால் வருவாயும் செலவும். சரிசமமாக இருக்கும். சிந்தனை தோன்றும். திக் கெட்டிலும்புகழ்பரவும். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் சனி கிரகம் கிரகணம் அடைந் திருந்தாலும் தன்னுடைய வலிமையை இழக்காது என்பது நிரூபணமாகிறது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular