Tuesday, June 25, 2024
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 தனுசு

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள்-தனுசு

தனுசு ராசிக்கு இதுவரையில் 2-ஆமிடத்தில் பாதச்சனியாக இருந்தவர். இப்போது 3-ஆமிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் தனுசு ராசியினரின் ஏழரைச்சனி முடிவுக்கு வருகிறது. அவர் அங்கே அவிட்டம், சதயம், பூரட்டாதி எனும் நட்சத்திரங்களின் வழியே பலன் தருவார் அங்கிருந்து, தனுசு ராசியின் 5ஆமிடம், 9-ஆமிடம், 12-ஆமிடத்தைப் பார்வையிடுவார்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் இருப்பிட பலன்

தனுசு ராசியின் 3-ஆமிடத்தில் அமரும் சனி, இருந்த இடப்பலனை பலமாக்குவார். உங்கள் முயற்சிகளை மற்றவர்களின் உதவியின்றி தனித்து செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நடை, உடை, பாவனைகளில் ஒருவேகம் உண்டாகும். உங்கள் கருத்துகளை அடுத்தவர்கள் கவனத்துடன் பரிசீலிப்பார்கள். வருமானம் பெருமளவுக்கு வந்து கொண்டிருக்கும். பெற்றோருக்கு சிறிது மருத்துவச் செலவு உண்டாகும்.

பழைய கடன்களையும் நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மறைமுக விமர்சனங்களும் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.

புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள்.அனைவருடனும் நல் லுறவு வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி கள் ஜெயமுண்டாகும். உங்கள் செயல்களில் சில சமயங்களில் தொடர்ந்து கடும் போட்டிகள் நிலவும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி 3-ஆம் பார்வை பலன்

தனுசு ராசியின் 3-ல் அமர்ந்த சனி தனது மூன்றாம் பார்வைமூலம் தனுசு ராசியின் 5-ஆமிடத்தை அடுத்து நோக்குகிறார். சனி பார்க்குமிடத்தைப் பாழாக்குவார். 5-ஆமிடம் என்பது ஆரோக்கிய ஸ்தானம். சனி பார்வையால் உடல்நலம் கெடும் வாய்ப்புண்டு. கழுத்து நரம்பு இழுத்துக்கொள்வது தொப்புள் அருகே வலி, அடிவயிற்றில் நீர் கோர்த்தாற்போல் இருப்பது கணுக்கால் வலி என ஏதாவதொரு வலி உங்களை இம்சைப்படுத்தும். காதல் விவகாரங்களில் கவனம் தேவை. குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மது போதைக்கு ஆட்படக்கூடும்.

சனி 7ம் பார்வை பலன்

தனுசு ராசிக்கு 3-ல் அமர்ந்துள்ள சனி தனது ஏழாம் பார்வையால் ஒன்பதாம் இடத்தை பார்க்கிறார். ஒன்பதாம் இடம் என்பது அதிர்ஷ்டஸ்தானம்,தந்தைக்குரிய இடம், இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டம், யோகம், லக் என இந்த சமாச்சாரங்கள் எல்லாம் உங்களை விட்டு சற்று தள்ளியே இருக்கும். உங்கள் தந்தைக்கு உங்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட வாய்ப்பு உண்டு.

சனி 10ம் பார்வை பலன்

தனுசு ராசியின் 3-ம் இடத்தில் உள்ள சனி பத்தாம் பார்வையில் 12-ம் இடத்தை பார்க்கிறார். 12-ம் என்பது அயன, சயன ஸ்தானம். சனி பார்க்கும் இடத்தை சுருக்குவார். இதன்படி தனுசு ராசியினரின் தூக்கம் குறையும். அல்லது நித்திரை வராமல் நிம்மதி இன்றி இருப்பார். சில தம்பதிகள் சண்டையிட்டு பிரிந்து வேறு இடம் செல்வர். ஆரோக்கிய விஷயமாக சில நாட்கள் தங்கி ஆயுர்வேத சித்தா சிகிச்சை எடுக்கும் பொருட்டு இடம்பெயர்வீர்கள். மாற்றம் நிச்சயம் இருக்கும் அது எது விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம் எனவே மாறும் நிலையை உங்களுக்கு நன்மை தர தக்க விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

sani peyarchi 2023 dhanusu சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 தனுசு

பலன் தரும் பரிகாரம்

குச்சனூர் சனிபகவானை வணங்கவும். சனீஸ்வர பகவான் சன்னதிக்கு சமையல் செய்ய மஞ்சள் பொடி, அபிஷேகம் செய்ய மஞ்சள் பொடி வாங்கி கொடுங்கள். உங்களுக்கு அதிக பலம் வருவதால் அதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். தினமும் ஆஞ்சநேயரை மஞ்சள் நிற வாழைப்பழம். எலும்பிச்சை என இவை போன்ற பொருள்களுடன் வணங்குங்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்523அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular