Monday, June 24, 2024
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 மீனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 மீனம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள் – மீனம்

எந்த ராசிக்கும் 12, 1, 2-ஆமிடங்களில் கோட்சார சனி சஞ்சரிக்கும்போது, அது ஏழரைச்சனி என்றழைக்கப்படும். இப்போது மீன ராசியின் 12-ஆமிடத்தில் சனி வந்திருப்பதால், உங்களுக்கு விரயச்சனி ஆரம்பிக்கிறது. இதன்மூலம் மீன ராசியினர் ஏழரைச்சனியின் பிடிக்குள் வந்துள்ளீர்கள். இங்கிருந்து 12-ஆம் வீட்டில் சனி அவிட்டம், சதயம், பூரட்டாதி எனும் நட்சத்திரங்களில் பயணித்துப் பலன் தருவார். சனி உங்களின் 12-ஆமிடத்தில் அமர்ந்து, 2, 6, 9-ஆமிடங்களைப் பார்வையிடுவார்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள்

விரய சனி

இந்த சனிப்பெயர்ச்சியில் எந்த செயலும் எடுத்தோம் முடித்தோம் என இருக்காது. ஒரு விஷயத்தை ஒருமுறை அலைச்சலில் முடிக்க முடியுமானால், இந்த காலகட்டத்தில் பத்துமுறை அலைந்தால்தான் முடிக்கமுடியும்.

உங்களுக்கும் ஒரு செயலைச் செய்தால் முழு திருப்தி கிடைக்காது.எந்த செயலையும் தெளிவாகச் செய்ய இயாது எல்லாவற்றையும் குளறுபடி ஆக்குவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் வந்தவுடன் பிறர் அலறுவர் நிறைய வேண்டாத பணச் செலவை இழுத்துவிட்டு விடுவீர்கள்.உங்களின் மாறும் மனோ வேசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வீட்டினர் கடுப்படைவார்கன். வீட்டில் இதனால் சண்டை ஏற்படும். ஏழரைச்சனியும், அப்பாடா, நம்ம வேலை ஒழுங்கா நடக்கிறது’ என மிக மகிழ்வார்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி 3-ம் பார்வைப் பலன்

சனி தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியின் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். இதுவரையில் சற்று மென்மையாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது கர்ண கடுரமாகப் பேசுவர், இவர்களின் சொற்கள் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். பேச்சுமூலம் சம்பாத்தியம் கொண்டிருந்தவர்கள், எதிர்மறையாகப் பேசுவதால் பணவரவு குறையும்.

வீட்டில் சிலபல பிரிவினை உண்டு. உங்கள் இளைய சகோதரி மற்றும் உங்கள் தந்தை உங்களைவிட்டு வேறிடம் செல்லக்கூடும். உங்களிடமிருந்து கடன் வாங்கியவர்கள். ‘கடன் வாங்கவில்லை’ என உங்கள்மீதே சத்தியம் செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பர் கைபேசித் தகவல்கள், உங்கள் வங்கிப் பணத்தைத் துடைத்தெறியும்.

ஆட்டோ ஓட்டுனர்; அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் குட்டியானை, மாட்டுவண்டி மூன்று சக்கர சைக்கிள் வண்டி. பாரவண்டி என இதுபோன்று சிறுரகவாகனங் களைக் கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். உயிருக்கு பாதிப்பில்லை எனினும், சிறு விபத்து, சிராய்ப்பு உண்டு உங்கள் பணம் திருட்டுப் போகும் வாய்ப்புண்டு கார்டின் பின் தம்பரை யாருக்கும் கூறவேண்டாம் பாங்கில் அக்கவுண்ட் பணம் இருக்காது கவனம் தேவை.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி 7-ஆம் பார்வைப் பலன்

மீன ராசியில் 12-ல் அமர்ந்த சனி தனது ஏழாம் பார்வையால் 6-ஆமிடத்தைப் பார்க்கிறார்.ஆமிடம் என்பது குண. ரோக எதிரி ஸ்தானம் சனி பார்க்கும் இடம் பலன்களை அழிப்பார் என்ற விதிப்படி. உங்களின் கடன்கள் தீர்ந்துவிடும். அரசு உத்தரவால் சில கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அரசியல்வாதிகளின் சில ஜப்தி செய்யப்பட்ட சொத்து திரும்பக் கிடைக்கும். அரசாங்க வேலையில் டிஸ்மிஸ் ஆகியிருந்தால், சிலபல செலவுகள் மூலம் பதவி திரும்பக் கிடைக்கும்.

வயிற்றுவலி, காதுவலி சரியாகும் வட்டித்தொல்லை நீங்கும். வாடகைப் பிரச்சினை சரியாகும் சமையல் கலைஞர்களுக்கு ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்படும். மூத்த சகோதரனுக்கும். உங்களுக்கும் ஏற்பட்டிருந்த பகை தீர்க்கப்படும்.உங்களில் ஒருசில பெண்களுக்கு, வேலை செய்யமிடத்தில் ஏற்பட்டிருந்த ஒரு அவமானம் முற்றிலும் நீங்கிவிடும் சிலரின் மாங்கல்ய பிரச்சினை சரியாகும்.ஆனால் அரசு வேலை கிடைக்குமென்று மட்டும் கண்டிப்பாக எதிர்பார்க்காதீர்கள். அரசு வேலை No தான்.

சனி 10-ஆம் பார்வைப் பலன்

சனி மீன ராசியின் 12-ஆமிடத்தில் அமர்ந்து தனது பத்தாம் பார்வையால் உங்களின் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். 9 ஆமிடம் என்பது தந்தையைக் குறிப்பது எனவே தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. தொழில் முறையில் அதிர்ஷ்ட நிகழ்வுகள் சற்றே சுருங்கினாற்போல் இருக்கும். உங்களின் கடவுள் நம்பிக்கை சற்றே குறையும். இதற்கு உங்கள் குடும்பத்தினர் காரணமாவர்.

உங்கள் திருமணம் முடிய. உங்கள் தந்தை இடையூறாக இருப்பார். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். சிலர் ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கொள்வர். பதவி உயர்வு போக்குக்காட்டும்.

கல்வி விஷயம் சற்று முன்பின்னாக அமையும் உயர்கல்வி விஷயம் நன்மை தராது. வாழ்வின் உயரிய குறிக்கோளை அடைய தடையும் சிரமும் ஏற்படும். ஆலய வழிபாடுகளில், தவிர்க்கமுடியாத இடையூறு ஏற்படுவதால், மனக்கஷ்டம் அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரர் சந்நிதி அர்ச்சகருக்கு சமையல் சம்பந்தமான உதவி, பாத்திரம் போன்றவற்றை கேட்டறிந்து உதவவும்.

சுந்தர காண்டம் 65-ஆவது சர்க்கம், சூடாமணியை அனுமன் கொடுத்தல் பாராயணம் நல்லது. வெற்றிலை, தென்னை மற்றும் காராம் பசு பராமரிப்பு நல்லது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்521அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular