Thursday, May 23, 2024
Homeஆன்மிக தகவல்கோளறு திருப்பதிகம்

கோளறு திருப்பதிகம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கோளறு திருப்பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,

சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை யிவைமார்பிலங்க

எருதேறி யேழையுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடிவந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொடாறும்

உடனாய நாள்களவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

கோளறு திருப்பதிகம்

உருவளர் பவளமேனி யொளிநீறணிந்து வுமையோடும் வெள்ளைவிடைமேல்

முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசைதெய்வமான பலவும்

அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடுதூதர்

கொடுநோய்களான பலவும்

அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டனெந்தை மடவாள்தனோடும் விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு முருமிடியுமின்னு

மிகையான பூதமவையும்

அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

கோளறு திருப்பதிகம்

வாள்வரி யதளதாடை வரிகோவணத்தர்

மடவாள்தனோடு முடனாய்

நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடிவந்தென்

உளமே புகுந்த வதனால் கோளரியுழுவையோடு கொலையானை கேழல்

கொடுநாகமோடு கரடி

ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வனடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத மிகையானபித்தும் வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேலிருந்து மடவாள்தனோடு முடனாய்

வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடிவந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை யரையன்றனோடும்

இடரான வந்துநலியா

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரிபாகன் பசுவேறும் எங்கள்பரமன்

சலமக ளோடெருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோனு மாலுமறையோடு தேவர்

வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்லஅடியாரவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசயற்குநல்கு குணமாய வேடவிகிர்தன்

மத்தமு மதியுநாக முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்

புத்தரோ டமணைவாதில் அழிவிக்குமண்ணல்

திருநீறு செம்மைதிடமே

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல்துன்னி

வளர் செம்பொ னெங்கும்நிகழ

நான்முகனாதியாய பிராமாபுரத்து மறைஞான ஞானமுனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரைவந்து நலியாதவண்ண முரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வராணை நமதே.

****திருச்சிற்றம்பலம்***

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular