Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்

அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்

ஜோதிடத்தில் பலன் காண்பதற்கு பலவிதமான கணக்குகளை ஆய்வு செய்து பலன் கூறினால் சரியாக இருக்கும். அப்படி பலவிதமான கணக்குகளில் இந்த அஷ்டவர்க்கமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அஷ்டவர்க்கத்தில் சர்வஷ்டவர்க்கமும், திரிகோண சோதனையும், ஏகாதிபத்திய சோதனையும் செய்கிறோம். இதில் சர்வாஷ்டவர்க்கம், ஏகாதிபத்திய சோதனைக்கு பின் வர பரல்களையும் தான் பலன் சொல்வதற்கு ஏதுவாக அமைகின்றது. அஷ்டவர்க்கத்தில் எவ்வளவு பரல் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்..

அஷ்டவர்க்கம் என்றால் என்ன ?

அஷ்டவர்க்கம் என்பது எட்டு வர்க்கங்கள் பற்றிய ஆய்வு.7 கிரகங்கள் மற்றும் லக்னம் பாவம் பற்றி ஆய்வு ஆகும். இதுவே அஷ்டவர்க்கம் ஆகும். இந்த அஷ்டவர்க்கத்தில் ராகு கேதுகளுக்கு இடமில்லை.

ஒவ்வொரு கிரகத்திற்கும் சூரியன் முதல் ஏழு கிரகங்களும் பரல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தப் பரல்கள் அனைத்தையும் ராசி கட்டத்திற்குள் அடைத்து மொத்த தொகையை எண்ணிக் காண்பதற்கு பெயர் சர்வாங்க அஷ்டவர்க்கம் என்பர். அதன் பின்னர் திரிகோணம், ஏகாதிபத்திய சோதனை, ராசி குணாகாரம், சோத்திய பிண்டம் முதலியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த அஷ்டவர்க்கம் பற்றி மூல நூல்களில் அஷ்டவர்கள் எப்படி எழுதுவது மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக எந்த பாவம் பரல்கள் அதிகமாக உள்ளதோ அந்த பாவம் வலிமை அதிகம். பரல் குறைந்த பாவம் வலிமை குறைவு என்று பொதுவாக கணிக்கப்படுகிறது.

அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்

இந்த அஷ்டவர்க்க பலன்களில் பலவிதமான பலன்கள் இருக்கின்றன நாம் அதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்

1.கேந்திரம்- 1-4-7-10 இவற்றின் பரல்கள் மட்டும் கூட்டி எடுத்துக் கொள்வது – தற்கால உத்தமம்.

2.பணபரம் – 3-5-8-11 இவற்றின் பரல்கள் மட்டும் கூட்டி எடுத்துக் கொள்வது – பூர்வ உத்தமம்.

3.அபோக்கிலீயம் – 3-6-9-12 இவற்றின் பரல்கள் கூட்டி எடுத்துக் கொள்வது – எதிர்கால உத்தமம்.

4.உப ஜெயம் – 3-6-10-11 இவற்றின் பரல்கள் – சகாய உத்தமம்

5.திரிகோணம் – 1-5-9 இவற்றின் பரல்கள் – அஸ்திவாரம் உத்தமம்

கேந்திரம் நான்கும் கூட்டி வந்த தொகை 80க்கு மேல் 100 வரை மத்திமம் ,அதற்க்கு மேல் வந்தால் உத்தமம்.80க்கு கீழ் வந்தால் அதமம்.

இதே போல் பணபரத்திற்கும், அபோக்கிலீயம் பலனை எடுத்துக் கொள்ளவும்

திரிகோணம் 60க்கு மேல் வந்தால் மத்திமம், 75க்கு மேல் வந்தால் உத்தமம். 60க்கு கீழ் அகமம்

 வரவினம் – 2-9-11

 செலவினம் – 6-8-12

2-9-11ல் உள்ள மொத்த பரல்களின் கூட்டுத் தொகையை விட 6-8-12 ல் உள்ள பரல்கள் கூட்டுத்தொகை குறைவாக இருந்தால் வரவை விட செலவு குறைவு.

அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்

 சர்வ அஷ்டவர்க்கத்தின் பரல்களும் அதன் பலன்களும்

1.சர்வ அஷ்டவர்கத்தில் மொத்த பரல்கள் 337 இதை 12-ஆம் வகுத்தால் ஒரு ராசிக்கு சராசரியாக 28 பரல்கள் வரும். எனவே ஒரு ராசியில் 28 பரல்களுக்கு மேல் இருப்பது நல்லது.

2.ஒரு ராசியில் 30 க்கு மேல் பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலன்களை கொடுக்கும்.

3.ஒரு ராசியில் 25 முதல் 30 பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலனையே கொடுக்கும்.

4.ஒரு ராசியில் 25 க்கு குறைவாக பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் தீய பலனையே கொடுக்கும்.

5.ஒரு ராசியில் மிகக் குறைவான பரல்களும் அதற்கு அடுத்த ராசியில் மிக அதிக அளவில் பரல்களும் இருந்தால் வாழ்க்கையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்.

6.12 ராசிகளில் உள்ள பரல்கள் அதிக வித்தியாசம் இல்லாமல் சராசரியாக இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வாழ்க்கை சீராக நகர்ந்து செல்லும்.

7.சந்திரன் என்ற ராசிக்கு 12-1-2 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் 30 க்கு மேல் பரல்கள் இருந்தால் ஏழரை சனி காலத்தில் ஜாதகருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் நிகழாது. நன்மைகளே நடக்கும்.

8.லக்னத்திற்கு 8-ம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள்.

 9.லக்னத்திற்கு 8-ம் வீட்டில் உள்ள பரல்களும் லக்னத்தில் உள்ள பரல்களும் சரிசமமாக இருந்தால் ஜாதகருக்கு மத்திமா ஆயுள்.

10.லக்னத்திற்கு 8-ம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு அற்ப ஆயுள்.

11.லக்னத்திற்கு 1-4-7-10,5-9ம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும் அதற்கு அகம் என்று பெயர்

12.லக்னத்திற்கு2-6-8-12,3-11ம் ஆகிய இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும் இதற்கு புறம் என்று பெயர்

புறப்பரல்களை விட அகப்பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் மனதிருப்தி உண்டாகும்.

புறப்பரல்களை விட அகப்பொருள்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் எதிலும் திருப்தி உண்டாகாது.

அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்
  • லக்னத்திற்கு 1-2-4-9-10-11 இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு ஸ்ரீசுரம் என்ற பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 164 மேலிருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.
  • 164 குறைவாக இருந்தால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும்

லக்னத்திற்கு 6-8-12-ம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு அ அ அஸ்ரீசுரம் என்று பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 76க்கு மேல் இருந்தால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். 76க்கு குறைவாக இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

எந்த ராசியில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ, அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எந்த ராசியில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும்

எந்த ராசியில் குறைந்தபட்ச பரல்கள் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்களுடன் கூட்டு சேரக்கூடாது

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகங்களை ஒப்பிடும்போது யாருடைய ஜாதகத்தில் லக்னத்தில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ அவரே அந்த குடும்பத்தை வழிநடத்தி செல்வார்.

தொழில்முறை கூட்டாளிகளின் ஜாதகங்களை ஒப்பிடும்போது யாருடைய ஜாதகத்தில் லக்னத்தில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ அவரே தலைமையேற்று அந்த தொழிலை நடத்தி செல்வார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து தொழில் செய்யும்போது அவர்களுடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் அதிகபட்ச பரல்கள் இருக்கிறதோ அவர் பெயரில் தொழில் நடத்துவது நன்மை பயக்கும்.

லக்னத்திற்கு 1-5-9ம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும் இதற்கு பந்துகள் என்று பெயர்

லக்னத்திற்கு 2-6-10-ம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும் இதற்கு சேவகம் என்று பெயர்.

லக்னத்திற்கு3-7-11ம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும் இதற்கு போஷகம் என்று பெயர்.

லக்னத்திற்கு1-4-8-12 ம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும் இதற்கு காதகம் என்று பெயர்.

பந்துகம் என்பது உறவுகளைக் குறிக்கும் சேவகம் என்பது சேவை அல்லது தொழில் நிலையை குறிக்கும்.

போஷகம் என்பது பிறரை ஆதரிப்பதைக் குறிக்கும். காதகம் என்றால் பீடை என்று பொருள்படும்.

காதக பரல்களை விட போஷக பரல்கள் அதிகமாக இருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

காதக பரல்களைவிட போஷக பரல்கள் குறைவாக இருந்தால் தரித்திரம் உண்டாகும்.

சேவக பரல்களை விட பந்துகப் பரல்கள் அதிகமாக இருந்தால் சுற்றத்தாரால் நன்மை உண்டாகும்.

சேவக பரல்களை விட பந்துகப் பரல்கள் குறைவாக இருந்தால் அரசாங்க வேலை கிடைக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular