Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் !!!

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் !!!

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கன்னி லக்னம்

ராசி மண்டவத்தில் ஆறாவது ராசியான கன்னி கால புருஷனின் இடுப்புப்பாகத்தைக் குறிக்கும். இது நில தத்துவத்தைச் சேர்ந்தது. உபய ராசியாகும். இது இரட்டை ராசி. பெண்ராசியாகும். இது சிரசால் உதய “மாவதால் சிரோதய ராசியாகும். இதன் அதிபதி புதன் ஆவார். இதில் உத்திரம் 2,3,4-வது பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2-வது பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கி இருக்கும்.

கன்னி லக்ன பொதுபலன்

இதில் பிறந்தவன் ஸ்தூலமான சசீரம் உள்ளவன். சத்தியவான். சுய காரியப் புலி. தங்கள் வயதை விட குறைந்த வயதினரைப்போல் உடல் அமைப்பு கொண்டவர்கள். எதையும் நிதானமாகச் செய்வார்கள். நல்ல ஞாபகச் சக்தி உள்ளவர்கள். கடமை உணர்ச்சி உள்ளவர்கள்.நேர்மையானவர்கள்.எதிராளியின் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள். நல்ல கிரகிக்கும் சக்தி உளளவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள். கல்வியில் ஆர்வம் கொண்ட நல்ல படிப்பாளி. எதிலும் நிலைத்திருக்க மாட்டார்கள். வீடானாலும் சரி வேலையானலும் சரி. அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார்கள். விஞ்ஞானம், மருந்து. சுகாதாரம் பற்றிய கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள்.

கன்னி லக்ன

கிரகங்களின் ஆதிபத்திய பலன்கள்

சூரியன்

12-க்குடையவர். புதனுக்கு நண்பர். இவர் வலுத்தால் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளும் ஆதாயமும் கிடைக்கும். பெரிய பதவியில் உள்ள, செல்வாக்குள்ள மனிதர்களின் தொடர்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். தன வசதி ஏற்படும்.

சூரியன் கெட்டால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் தோன்றும்.வீண் விரயங்கள் அதிகமாகும். அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படும். இவர் சந்திரனுடன் சம்பந்தப்பட்டாலோ அல்லது சுக்கிரனுடன் சேர்ந்தாலோ யோகத்தைக் கொடுப்பார்.

சந்திரன்

லாபாதிபதி. உபய லக்னத்திற்கு மாரகாதிபதி ஆகிறார். இவர் சுபபலம் பெற்றால் லாபமும் பண வசதியும் நன்றாக இருக்கும். ஆனால் உடல் நலம் நன்றாக இருக்காது. இவர் கெட்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள்பலம் கூடும். ஆனால் தன வருமானம் கெடும். இவர் புதனைப்பார்த்தால் நல்ல பலன்கள் உண்டு. ஆனால் புதனுடன் எந்தப்பாவத்தில் கூடினாலும் அந்தப் பாவம் கெடும். இவர் சுக்ரனுடன் கூடினால் தன லாபம் ஏற்படும்.

செவ்வாய்

3,8 ஆகிய இரண்டு அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியாவதால் முழுப்பாபி ஆகிறார். இவர் வலுத்தால் ஆயுள்பலம் தீர்க்கம். ஆனால் பொருளாதாரம் நன்றாக இருக்காது. இவர் பலவீன மடைந்தால் கெட்டவர்கெட்டிடில் கிட்டியதுராஜயோகம் என்ற கூற்றுக்கிணங்கப் பொருளாதாரம் நன்றாக இருக்கும். ஆனால் தீர்க்காயுள் என்று சொல்ல முடியாது.

பொதுவாக 10-ல் செவ்வாய் நல்லவரென்றாலும் இந்த லக்னத்திற்கு இவர் 10-ல் இருந்தால் தனம், ஆயுள் இரண்டுமே நன்றாக இருக்காது. சகோதரர்கள் அனுபவிப்பதோடு சரி. திருப்பி உதவி செய்ய மாட்டார்கள்.

கன்னி லக்ன

புதன்

லக்னத்திற்கும் பத்துக்குமுடையவரானதால் சுபர். இவர் வலுக்கவேண்டும். கெட்டால் அபவாதம் ஏற்படும்.கேந்திராதிபத்திய தோஷம் பெற்றாலும் தனக்குண்டான ஆதிபத்திய பலன்களை அளிப்பார், ஆகையால் இவர் கெடாமல் வலுப்பது மேல்,

இவர் 4 அல்லது 10-ல் அல்லது 3-ல் இருந்தால் உத்தியோக மேன்மை கிட்டும். இன்ஜினீரிங், விமானம் அல்லது ரயில் ஓட்டி, வக்கீல். நீதிபதி, ஆசிரியர், ஓவியம், பத்திரிக்கை நிருபர், ஆடிட்டர், ஓவியர் ஜோதிடர் போன்ற தொழிலமையக்கூடும் மருந்து. அச்சாபீஸ் சாதனங்கள் கடலை, கலைப்பொருள், காகிதம் போன்றவற்றின் வியரபாரம் விருத்திபெறும்.

குரு

4,7-க்குடைய குரு கேந்திராதிபத்திய தோஷமும் மாரகாதி பத்தியமும் பெறுகிறார். இவர் 2-ல் இருந்தால் வலுத்த பாபியாகிறார். 7-ல் இருந்தாலும் கொடிய பலன்களை அளிப்பார். 6 அல்லது 8-ல் மறைவதும் நல்லதல்ல. வியாதிகள் படுத்தும். இவர் வலுப்பதால் தனயோகமும் கௌரவமும் நன்றாக இருக்கும். அரசாங்க ஆதரவுகளும் கிடைக்கும். வரும் மனைவி தர்ம பத்தினியாக இருப்பாள். இவர் திரிகோணம் பெறுவதும் 10ல் இருப்பதும் யோகம் தரும்.

சுக்ரன்

2,9க்குடையவர் 9ஆம் ஆதிபத்தியம் பெற்றாலும் 2-ல் இருந்தால் நல்லதல்ல. இவர் வலுப்பதால் சந்தோஷம், சுகம், அரசாங்கம் மூலம் அனுகூலம், தனவசதி ஆகிய நல்ல பலன்களை அளிப்பார். இவர் கெட்டால் மேலே கூறிய பலன்கள் நேர் எதிராகமாறும். இவர் புதனுடன் சேர்ந்தால் நல்ல பலன்களை அளிப்பார்.

சனி

5,6-ம் இடங்களுக்குடையவர். 6ம் இடம் மூலத்திரிகோண ஸ்தானமானதால் கெட்ட ஆதி பத்தியம் வலுக்கிறது. ஆனாலும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியானதால் முன் வயதில் கடன், வியாதி, விரோதங்கள் ஆகிய கெடுபலன்களையும் பின் வயதில் தனம், புத்திர சுகம் ஆகியவற்றையும் அளிப்பார். 5-ல் ஆட்சியானால் மிகவும் நல்லது. எதிர்பாரா திடீர் தனவரவை அளிப்பார்.6-ல் ஆட்சி பெற்றால் தொழில் கூடம் கட்டுவார்.

சுபர் அசுபர் விளக்கம்

சுபர்கள்

1, 10- க்கு அதிபதியானதால், லக்னாதிபதி என்ற காரணத்தால் புதன் சுபனாகிறார். 9ஆம் ஆதிபத்தியத்தால் சுக்கிரன் சுபனாகிறார். 5ம் ஆதிபத்தியத்தால் சனி சுபனாகிறார். ஆக புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள்.

யோகாதிபதி

புதன், சுக்கிரன், சனி மூவரும் யோகாதிபதிகளாவர். சுக்கிரன் புதனுடன் சேர்ந்தால் தர்மகர்மாதியோகமாகும். இவர்களுடன் சனியும் சேர்த்தால் தர்மகர்மாதி யோகம் வலுக்கும். தனித்து நின்ற சுக்கிரன் ராஜயோகத்தை அளிக்க முடியாது என்பதுஅனுபவத்தில் தெரிகிறது.

கன்னி லக்ன

பாபிகள்

செவ்வாய், குரு. சந்திரன் மூவரும் பாபிகள். 7-ம் ஆதிபத்தியத்தில் குரு மாரகாதிபதி ஆவதால் பாபி ஆகிறார் உபய லக்கினத்திற்கு 11-ம் இடம் மரரகஸ்தானமாவதால் 11 -க்குடைய சந்திரன் பாபியாகிறார்,3,8 ஆகிய இரண்டு அசுப ஸ்தானங்களுக்கு அதிபதி ஆவதால் செவ்வாயும் பாவியாகிறார்.

மாரகர்

செவ்வாய், குரு சந்திரன், சுக்கிரன் ஆகிய 4 பேரும் மாரகம் செய்யக்கூடியவர்கள்.

செவ்வாய்: 3.8 ஆகிய ஆதிபத்தியத்தாலும் புதனுக்குச் சத்துரு இனதாலும் முதல்தர மாரகாதிபதியாகிறார்.

குரு: கேந்திராபத்தியத்துடன் 7 ஆம் இடத்தால் விசேஷமாரகாதிபதியாகிறார்.

சந்திரன்: மாரகஸ்தானமான 11ஆம் இடத்து. அதிபதியாவதால் மாரகாதிபதியாகிறார்.

சுக்கிரன் : 2-க்குடையவராதலால் மாரகம் செய்ய அதிகாரம் உண்டு.

சுக்கிரனுக்கு 9ஆம் ஆதிபத்தியம் சேர்ந்தாலும் புதனுக்கு நட்பானதாலும் சுக்கிரன் கொல்லமாட்டான். என்று எல்லோரும் கூறியுள்ளனர். ஜாதக அலங்கார நூலின் ஆசிரியர் சுக்கிரன் கொல்லார் என்று கூறி உள்ளார். பெரும்பான்மை கருத்துக்களையும் ஆதிபத்தியத்தையும் கவனிக்கும் பொழுது சந்திரன், செவ்வாய், குரு ஆகிய மூவரே கொல்லக்கூடியவர்கள்.

மூவரில் எவர் தசை முதலில் வருகிறதோ அந்தத் தசையில் மாரகம் ஏற்படும். இம்மூவரில் எவர் வலுத்துள்ளார் என்றும் பார்க்க வேண்டும். வலுத்தவர் தசை முதலில் வந்தால் மாரகம் நிச்சயமாக அந்தத் தசையில் ஏற்படும்.

முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும் காலங்கள்

தாய்க்கு கண்டம் (மாதுர் தோஷம்)

சந்திர திசை – ராகு ,சனி ,சுக்கிர புத்திகள்

ராகு தசை – ராகு, சனி, சந்திர புத்திகள்

குரு தசை – சுக்கிரன் ,சந்திரன் ராகு புத்திகள்

புதன் தசை – ராகு, சனி புத்திகள்

கேது தசை – சுக்கிரன், சந்திரன் ,சனி புத்திகள்

சுக்கிர தசை – சுக்கிரன், சனி புத்திகள்

மேற்படி தசா புத்திகளில் தாயாருக்கு பீடை, கண்டாதி பிணிகள் அல்லது மரணம் ஏற்படலாம். அல்லது மாதாவுடன் விரோதமும் பிரிவினையும் ஏற்படலாம்.

தந்தைக்கு கண்டம் ( பிதுர் தோஷம்)

சூரிய தசை – ராகு, சனி ,கேது, சுக்கிர புத்திகள்

சந்திர திசை – ராகு, சனி, சுக்கிர புத்திகள்

செவ்வாய் திசை – ராகு, சனி புத்திகள்

குரு தசை – சனி, புதன் ,கேது புத்திகள்

புதன் தசை – சூரியன், சனி புத்திகள்

சுக்கிர தசை – ராகு சனி கேது புத்திகள்

மேற்படி தசா புத்திகளில் தந்தைக்கு பீடை, கண்டாதி பிணிகள் அல்லது மரணம் ஏற்படலாம். அல்லது தந்தையுடன் விரோதமும் பிரிவினையும் ஏற்படலாம்.

கன்னி லக்ன

திருமணம் நடைபெறும் காலம்

சந்திர திசை – குரு, புதன், சுக்கிரன் புத்திகள்

ராகு தசை – புதன், சுக்கிரன்,சந்திர புத்திகள்

குரு தசை – புதன் , சந்திர புத்திகள்

சனி திசை – புதன் ,சந்திரன், குரு புத்திகள்

புதன் தசை – சுக்கிரன் , சனி புத்திகள்

கேது தசை – சுக்கிரன், குரு ,புதன் புத்திகள்

சுக்கிர தசை – சந்திரன் ,ராகு ,குரு, சனி புத்திகள்

மேற்படி தசா புத்திகளில் திருமணமும் மனைவிக்கு சுப பலன்களும் நடக்கும்.

மனைவிக்கு கண்டம் (களத்திர தோஷம்)

சந்திர திசை – செவ்வாய், ராகு, சனி ,கேது புத்திகள்

ராகு தசை – ராகு, சனி ,கேது, செவ்வாய் புத்திகள்

குரு தசை – சனி ,கேது, செவ்வாய், ராகு புத்திகள்

சனி திசை – சனி ,கேது, செவ்வாய்,ராகு புத்திகள்

புதன் தசை – கேது, செவ்வாய், ராகு, சனி புத்திகள்

கேது தசை – கேது,செவ்வாய், ராகு, சனி புத்திகள்

சுக்கிர தசை – செவ்வாய், ராகு, சனி,கேது புத்திகள்.

மேற்படி தசாபுத்தி காலங்களில் மனைவிக்கு பீடையோ கண்டாதி பிணிகளோ மரணமோ சம்பவிக்கலாம். அல்லது மனைவியுடன் விரோதமும் பிரிவினையும் ஏற்படலாம்.

குழந்தை பிறக்கும் காலம்

சுக்கிர தசை – சுக்கிரன், சந்திரன் புத்திகள்

சூரிய தசை – சந்திரன், குரு ,சுக்கிரன், புத்திகள்

சந்திர திசை – குரு, புதன், சுக்கிரன் புத்திகள்

ராகு தசை – குரு, புதன், சுக்கிரன், சந்திரன் புத்திகள்.

கேது தசை – சுக்கிரன், சந்திரன், குரு,புதன் புத்திகள்

மேற்படி தசா புத்தி காலங்களில் குழந்தை பிறப்பதோ குழந்தைகளுக்கு சுப பலன்கள் நடப்பது நிகழலாம்.

குழந்தைகளுக்கு கண்டம் ( புத்திர தோஷம்)

சுக்கிர தசை – சுக்கிரன்,சூரியன்,ராகு,சனி, கேது புத்திகள்

சூரிய தசை – சூரியன், ராகு, சனி, கேது, சுக்கிரன் புத்திகள்.

சந்திர திசை – ராகு, சனி,கேது, சுக்கிரன் புத்திகள்.

ராகு தசை – ராகு ,சனி,கேது,சுக்கிரன் சூரிய புத்திகள்.

மேற்படி தசா புத்திகள் புத்திரர்களுக்கு தோஷத்தை உண்டாக்கக்கூடிய காலங்கள்.

உடன் பிறப்புகளுக்கு கண்டம் (சகோதர தோஷம்)

சூரிய தசை – செவ்வாய், சனி, ராகு,சுக்கிர புக்திகள்.

செவ்வாய் தசை-ராகு, சனி, புதன் புக்திகள்.

ராகு தசை-சுக்கிரன், செவ்வாய் புக்திகள்.

குரு தசை – சுக்கிரன், செவ்வாய், ராகு
புக்திகள்.

கேது தசை-செவ்வாய், ராகு புக்திகள்.

சுக்கிர தசை – சந்திரன், ராகு, சனி, புதன் புக்திகள்.

மேற்படி தசா புக்திகளில் சகோதரர்களுக்குத் தோஷமோ அல்லது அவர்களுடன விரோதமோ ஏற்படலரம்.

மாரக தசை

சந்திர தசை-செவ்வாய், ராகு, சனி புக்திகள்.

செவ்வாய் தசை-ராகு, குரு, சுக்கிர புக்திகள்.

குரு தசை – சுக்ரன், சந்திரன், புக்திகள். சூரியன், ராகு

மேற்படி காலங்களில் மரணமோ கஷ்ட நஷ்டமோ ஏற்படலாம்.

யோக காலங்கள்

சூரிய தசை – குரு, புதன், சனி, சுக்கிர புக்திகள்.

குரு தசை-சனி, புதன், சுக்ரன்,சூரியன் புக்திகள்.

சனி தசை-சனி, புதன், சுக்ரன், சூரிய புக்திகள்.

புத தசை – புதன், சுக்ரன், சூரிய புக்திகள்

சுக்ர தசை – சூரியன், குரு, சனி, புதன் புக்திகள்.

மேற்படி தசா புக்திக் காலங்களில் சுபயோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

கன்னி லக்ன

யோக கிரக அமைப்புகள்

  • சூரியன் சந்திரனால் பார்க்கப்பட்டால் சூரிய தசை யோகத்தை அளிக்கும்.
  • சூரியன் சுக்கிரனின் சேர்க்யைப் பெற்றால் சூரிய தசை யோகததை அளிக்கும்.
  • குருவும் சுக்ரனும் சேர்த்து 4-ல் இருந்தால் இருவர் தசையும் யோகம் தரும். 9-லும் யோகம்.
  • சனி 11 ல் இருந்தால் யோகம்.
  • 2-க்குடைய சுக்கிரனும் 7-க்குடைய குருவும் பரிவர்த்தனை ஆனால் ராஜயோகம்.
  • சுக்கிரன் 2, 4, 7, 9 அல்லது 10-ல் இருந்தால் யோகம்.
  • 9, 10, 11-க்குடைய சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய மூவரும் சேர்த்து 4 அல்லது, 10 அல்லது 11-ல் இருக்க யோகம்.
  • 4, 10-க்குடையவர்கள் பரிவர்த்தனை ஆனால் சிறந்த ராஜ யோகம்.
  • 7-ம் அதிபதி குருவும், 2ம் ஆதிபதி சுக்கிரனும் சேர்த்து 2ல் இருந்தால் யோகம், இழந்த பொருளை மீண்டும் சம்பாதிப்பான்.
  • 7,9-ம் அதிபதிகள் பரிவர்த்தனை. ஆனால் யோகம். (மீனத்தில் சுக்ரன், ரிஷபத்தில் குரு)
  • குரு,சுக்கிரன், சந்திரன் மூவரும் 9ல் இருக்க, புதன், 10ல் ஆட்சியானால் யோகம். பல விதத்தில் பொருள் சேரும். அரச பதவி கிடைக்கும்.
  • ரிஷபத்தில் சுக்கிரனும் கடகத்தில் சந்திரனும் ஆட்சி பெற்றால் தன யோகம்.
  • புதனும் சுக்ரனும் கூடி 12ல் இருந்தாலும் யோகம்.
  • சனி, புதன், சுக்கிரன் மூவரும் சேர்ந்து எங்கே இருந்தாலும் யோகம்.
  • புதனுக்கு 2,3,4 ஆகிய இடங்களில் சுபர் இருக்க யோகம்.
  • சந்திரனுக்கு 2,3,4 ஆகிய இடங்களில் சுபர்கள் இருக்க யோகம்.
  • லக்னத்தில் புதன், 2ல் சனி, சுக்கிரன் கூட சந்திரன் ஆட்சி அல்லது உச்சமானால் யோகம்.
  • குருவும், சுக்கிரனும் உச்சமானால் யோகம்.
  • புதன் சுக்கிரன் சேர்ந்து 4-லும் ,10-ல் குரு இருக்க யோகம்.
  • சந்திரன், குரு, சுக்கிரன் மூவரும் உச்சமானால் யோகம்.

உதாரண ஜாதகம்

image 2 கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் !!!

புதன் சுக்கிரன் சேர்க்கை லக்னத்தில், குரு 7,9, 11ஆம் இடத்தை பார்க்கிறார்.11 இல் சனி அமர்ந்து குருவால் பார்க்கப்படுகிறார்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular