Thursday, December 7, 2023
Homeஆன்மிக தகவல்உங்கள் இல்லம் செழிக்க சில ஜோதிட ஆலோசனைகள்

உங்கள் இல்லம் செழிக்க சில ஜோதிட ஆலோசனைகள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இல்லம் செழிக்க சில ஜோதிட ஆலோசனைகள்

1.நாம் முயற்சிக்காக வெளியே கிளம்பும்போது காரியம் வெற்றி பெற ஒரு ஸ்பூன் தயிரும், கொஞ்சம் சர்க்கரையும் சாப்பிட்டு விட்டு கிளம்பி பாருங்கள், செய்து தான் பாருங்களேன்.

2.கண்டிப்பாக வீட்டில் கல் உப்பு ஜாடி இருக்க வேண்டும். அது மகாலட்சுமி வாசத்தை உண்டாக்கும். கல் உப்பை வெள்ளிக்கிழமை மட்டுமே வாங்கிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற நாட்களில் வாங்க வேண்டாம்.

3.ஒரு கிண்ணத்து நீரில் கல்லுப்பை போட்டு வீட்டில் ஓரத்தில் நுழைவாயில், வராண்டா போன்ற நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்தால் வீட்டுக்கு வருபவர்கள் தீய கண்திருஷ்டிகளை அந்த உப்பு உறிஞ்சி விடுவதை அனுபவபூர்வமாக உணரலாம்.

4.எக்காரணம் கொண்டும் கீறல் விழுந்த அல்லது உடைந்த உப்பு ஜாடியை வைத்துக் கொள்ளாதீர்கள். உடனே வெளியே தூக்கி எறிந்து விடுங்கள்.

5.பந்தியில் உப்பை இலைகளில் பரிமாறும் போது இப்போதிலிருந்தாவது வெறும் கைகளில் போடாதீர்கள். ஒரு சிறு ஸ்பூனாவது பயன்படுத்துங்கள். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பது சாஸ்திர உண்மை.

6.வளர்பிறை பஞ்சமி திதி அன்று வீட்டு அருகே உள்ள ஒரு அம்மன் ஆலயம் சென்று ஒரு மாங்காய், புள்ளியில்லாத எலுமிச்சம்பழம், வெற்றிலை, பூ, பழம் வைத்து யாருக்காக அர்ச்சனை செய்கிறீர்களோ அவரின் பெயர், கோத்ரம், நட்சத்திரம், ராசி சொல்லி தொடர்ந்து பத்து பஞ்சமி திதி செய்து வாருங்கள். உங்கள் பிரார்த்தனை நூறு சதவீதம் வெற்றி பெறுவதை அனுபவபூர்வமாக உணரலாம். செல்வ செழிப்பும் ஏற்படும்.

இல்லம் செழிக்க சில ஜோதிட ஆலோசனைகள்

7.தீபம், வலம்புரிச் சங்கு, வலம்புரி விநாயகர், ருத்ராட்சம், பூஜைக்குரிய மணி, பகவான் உடைய நாமம் எழுதப்பட்ட வேத புத்தகம் இவைகளை வெறும் தரையில் வைக்க கூடாது. மரப்பலகை, மரத்தால் செய்யப்பட்ட புத்தகம் வைக்கும் மடக்கு,மரத்தாங்கி இவைகள் மீது தான் வைக்க வேண்டும்.

8.பிரம்ம முகூர்த்தத்தில் சுமங்கலிகள் ஸ்நானம் செய்து நெற்றி திலகம் இட்டு மகாலட்சுமி தாய்முன் தீபம் ஏற்றி லட்சுமி சஹஸ்ரநாமம் சொல்லி வந்தால் சகல சேமங்களும் உண்டாகும். அம்பாள் ஸ்தோத்திரப்பிரியை.

9.துளசி மாடம் கட்டி தினமும் பூஜை செய்வது மிக உத்தமம். மாலையில் துளசி மாடத்தில் மண் அகல்விளக்கேற்றி வந்தால் வற்றாத செல்வம் பெருகுவதை அனுபவத்தில் காணலாம்.

10.விக்னங்கள் விலகி முயற்சிகள் வெற்றி பெற ஸ்ரீ மகா கணபதி (விக்ன விநாயகர் மூல மந்திரம்}

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்

கணபதயே வர வரத

ஸர்வ ஜனம்மே வசமானய சுவாஹா ! சுவாஹா !

11.கணபதி ஹோம பஸ்பத்தை (அக்னி சூடு ஆறிய பின்) கொஞ்சம் மஞ்சள் வஸ்திரத்தில் முடிந்து வைத்து வீட்டு வாசலில் தொங்க விடவும். இது வீட்டுக்கு கவசம். தீய சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுக்கும்.

12.செவ்வாய் தோஷம் கல்யாணமான பெண்ணுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமாங்கல்யத்துடன் சேர்ந்த இரண்டு குண்டுகளுக்கும் வெளியே இரண்டு (1+1) நல்ல தரமுள்ள பவளத்தை சேர்த்து அணியுங்கள். திருமணமான பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாள். இதை மங்கலசரட்டில் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் செய்யலாம்.

13.பைரவர் சன்னதியில் வெள்ளை மிளகு போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாருங்கள். கடன் பிரச்சனை தீரும். (நாயிறு அன்றும் அஷ்டமி திதியிலும் சிறப்பு). மற்ற நாட்களிலும் செய்யலாம்.

இல்லம் செழிக்க சில ஜோதிட ஆலோசனைகள்

14.நிலம், வீடு சொந்தமாக வாங்க விரும்புவோர் செவ்வாய்க்(பூமிகாரகன் )கிழமைகளில் மாலை புது மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் விட்டு முதல் வாரம் ஒரு தீபம், இரண்டாம் வாரம் இரண்டு தீபம், இப்படி 16 வாரம் (16 வது வாரம் 16 தீபம் )ஏற்றி வழிபட காரிய சித்தி கட்டாயம் உண்டு.

15.வாரம் ஒரு முறையேனும் நடுவிரல் மட்டும் கொண்டு அதிகாலையில் பல் துலக்கி வாருங்கள். இது ஆதி காலத்தில் சாஸ்திரத்தில் ஸ்ரீ வக்ஷ வாஸ்து அக்னி என்று அழைக்கப்பட்டது. இது சுபிட்சங்களை கொடுக்கக்கூடியது.

16.முனைகள் வளைவுடன் கூடிய, இடையில் புள்ளி இல்லாத சிவப்பு நிறத்தில் ஸ்வஸ்திக் அடையாளம் சொந்த வீட்டின் முன் பொரிக்கவும். பாதுகாப்புடன் கூடிய அதிர்ஷ்டம் உண்டாவதை அனுபவத்தில் காணலாம்.

17.பணப்பெட்டியில் சிறிது வெள்ளைத் துணியில் சிறிது ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம், சிறிது சோம்பு சேர்த்து முடிஞ்சு கட்டி வைக்கவும். பண வசியம் ஏற்படும்.

18.தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது.

19.”ஓம் சாயி’ ,ஸ்ரீ சாயி எங்கள் வீட்டுக்கு வா சாயி வளமுடன் வாழ வரம் தரவே அற்புதம் செய் சாயி”

இந்த மந்திரத்தை தினமும் (சூரியன் உதயமாவதற்கு முன் )எழுதுவது நிச்சயம் அற்புதம் நிகழ்த்தும்.இயன்றவரை எழுதவும்.(சுமார் 108 முறை தினமும் ).தனி நோட்டில் ஒரு மண்டலம் தொடந்து எழுதும்போது,இடையில் வியக்கத்தக்க அதிஷ்டம் தேடி வரும்.

20.துளசி செடியில் இருந்து துளசி இலைகளை வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் பறிக்கக் கூடாது.

இல்லம் செழிக்க சில ஜோதிட ஆலோசனைகள்

21.வீட்டை விட்டு முக்கிய காரியமாக வெளியில் கிளம்பும்போது அசரீரியாக (தெருவில் யாரோ ஒருவராக இருக்கலாம்). அமங்கல சொல் நம் காதில் விழுந்தாலோ, படிக்கட்டு தட்டினாலோ, நாம் எதிரில் ஒற்றை பிராமணர் வந்தாலோ, சண்டையிடும் பெண் வந்தாலோ, சந்நியாசி எதிரில் வந்தாலோ, சகுன தடை. நாம் உடனே நம் வீட்டுக்கு சென்று ஒரு டம்ளர் ஜலம் பருகி சிறிது நேரம் அமர்ந்து பின் பயணத்தை தொடங்கவும்.

22.விளக்கேற்ற உகந்த திரிகள்

 • பஞ்சு திரி நல்லதே நடக்கும்.
 • தாமரை தண்டு திரி முன் ஜென்ம பாவம் விலகும்.
 • வாழைத்தண்டு திரி பிதுர் சாபம் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.
 • வெள்ளெருக்கு பட்டை திரி நீண்ட ஆயுள் உண்டாகும்.தொழில் விருத்தி ஏற்படும்.
 • புது மஞ்சள் துண்டால் செய்யப்பட்ட திரி தேவியின் அருள் கிடைக்கும்.
 • புது வெள்ளைத்துணி திரி செய்வினை தோஷங்கள் நீங்கும்.

23.குத்து விளக்கு முகம்

 • ஒரு முகம் ஏற்றினால் குடும்பம் வளம் பெரும்.
 • இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
 • நான்கு முகம் ஏற்றினால் பசு ,பூமி ,செல்வம் கிட்டும்.
 • 5 முகம் ஏற்றினால் சகல நலன்களும் கிட்டும்.
 • 3 முகம் ஏற்ற கூடாது.

24.காரிய சித்திக்கு எந்த தெய்வத்துக்கு எந்த தீப எண்ணெய் உகந்தது.

 • கணபதிக்கு நெய் தீபம்
 • குலதெய்வத்துக்கு வேப்பெண்ணை ,இலுப்பண்ணை தீபம்.
 • மகாலட்சுமிக்கு பசு நெய் தீபம்.
 • நாராயணனுக்கு நல்லெண்ணெய் தீபம்.
 • ருத்ரருக்கு இலுப்பண்ணை தீபம்.
 • பராசக்திக்கு பசு நெய் , விளக்கெண்ணெய்.
 • மாரியம்மனுக்கு இலுப்பெண்ணை கலந்த எண்ணெய் தீபம்.
 • கடலெண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி போன்றவற்றை தெய்வ தீபத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

25.தீப எண்ணெய் பலன்

 • பசு நெய் தீபம் கிரக தோஷம் விலகும்.
 • ஆமணக்கு எண்ணெய் தீபம் உறவினர்கள் ஒற்றுமை உண்டாகும்.
 • வேப்பெண்ணெய் தீபம் உற்றார் உறவினர் மூலம் உதவி கிடைக்கும்.
 • நல்லெண்ணெய் தீபம் நவகிரக பீடை விலகும்.
 • கலப்பு எண்ணெய் (கடலெண்ணெய் தவிர்க்கவும் )சகல பீடைகளும் அகலும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular