Monday, June 24, 2024
Homeராசிபலன்ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2024ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-ரிஷபம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-ரிஷபம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

சிறந்த உழைப்பாளியான ரிஷப ராசி அன்பர்களே!! உங்கள் ராசியை சுக்கிரனும், புதனும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால், பணியிடத்தில் திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செயல்பட்டால் சங்கடங்கள் நீங்கி சாதனைகள் உருவாகும். சிலருக்கு இடமாற்றம் பதவி மாற்றம் வரலாம், மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். பணி சார்ந்த பயணம் செல்லக்கூடிய சமயத்தில் உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

பொறுப்பு, சுமை பற்றியோ மேல் இடத்தைப் பற்றியோ உங்கள் நிழலிடம் கூட புலம்ப வேண்டாம். செல்போன் பேசும் சமயத்தில் வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். எந்த காரணத்தை முன்னிட்டும் வீண் ரோஷத்தால் இருக்கின்ற வேலையை உதற வேண்டாம். அப்புறம் வேலை தேடுவதே வேலையாகிவிடலாம். 

விட்டுக் கொடுத்துப் போனால் வீட்டில் விசேஷங்கள் வரும். சுப காரியங்களில் வீண் ஆடம்பரம் வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வரவு சீராக இருக்கும். வரவில்  ஒரு பங்கை சேமிக்க பழகுங்கள். வீணான சகவாசம் தேனாக பேசி உங்கள் குடும்ப விஷயங்களை பஞ்சாயத்து சொல்ல நினைக்கலாம் அவர்களின் வார்த்தைகளில் மயங்கி உங்கள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்.

4ல் சந்திரன் 

ராசிக்கு 4-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பெறுவீர்கள். பணம் வரத் தொடங்கும். வழக்குகள் சாதகமாகும். 

12ல் குரு 

குருபகவான் 30.04.2024  வரை 12 ஆம் வீட்டில் இருப்பதால் சின்ன சின்ன செலவுகள் அதிகமாகி கொண்டே போகும். ஆக்கபூர்வமான பணிக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்க.ள் பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

01.05.2024ம்  தேதி முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசியில் வந்து அமர இருக்கிறார். எனவே உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும். லாகிரி வஸ்துகளை பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவையும் எடுப்பது நல்லது. 

11ல் ராகு 

இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் நிற்பதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். 

5ல் கேது 

கேது பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இந்த ஆண்டு முழுக்க தொடர்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். அவர்களின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வறுத்து, பொறித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் தெய்வ நேர்த்திக் கடனை குடும்பத்துடன் சென்று முடிப்பீர்கள்.

10ல் சனி 

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் தொடர்வதால் உங்கள் திறமை வெளிப்படும். பண பலம் கூடும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ். கௌரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். 

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை திருப்பதி சென்று அந்த வேங்கடவனை தரிசித்துவிட்டு வாருங்கள் வாழ்வில் நன்மை கிட்டும்.

மொத்த பலன் : முற்பகுதி -சூப்பர் ,மையப்பகுதி -சுமார் ,பிற்பகுதி -மோசம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்521அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular