Saturday, June 15, 2024
Homeராசிபலன்மார்கழி மாத ராசி பலன்கள்-2023மார்கழி மாத முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் கடன் தீர்க்க ,புது வாகனம் வாங்க உகந்த...

மார்கழி மாத முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் கடன் தீர்க்க ,புது வாகனம் வாங்க உகந்த நாட்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மார்கழி

மார்கழி -01(17.12.2023)

தனூர் மாத பூஜை ஆரம்பம். அதிகாலையிலேயே நீராடி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், ரங்கமன்னரையும் திருப்பாவை பாசுரங்களை சொல்லி வணங்கி வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். அதுபோன்று தினமும் “திருவம்பாவை” பாடல்களையும் அதிகாலையில் சொல்லி பார்வதி-பரமேஸ்வரரை வணங்கி, மாணிக்கவாசகர் உள்ளிட்ட அனைத்து நாயன்மார்களையும் மானசீகமாக(மனதால்) பூஜித்து வந்தால் அளவற்ற நன்மைகள் கிட்டும்.

மார்கழி -04(20.12.2023)

வக்ரகதியிலிருந்து வரும் சனிபகவான் மகர ராசியை விட்டு தனது மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசிக்கு பிரவேசிக்கும் விசேஷ தினம். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, நவகிரக சந்நிதிகள்  தரிசனம் மற்றும் நெய், எள் எண்ணெய் தீபம் ஏற்றுதல் கிரக தோஷங்களை போக்கும். சூரியனார் கோயில் தரிசனமும் தோஷங்களை போக்கும். மேஷம் ,கன்னி, தனுசு ஆகிய ராசியினரை தவிர மற்ற ராசியினர் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

மார்கழி

மார்கழி -07(23.12.2023)

‘வைகுண்ட ஏகாதசி’ முப்பது முக்கோடி தேவர்களும் இந்த “ஏகாதசி” விரதத்தை கடைபிடிப்பதால் “முக்கோடி ஏகாதசி” என தெய்வீக புகழ் வாய்ந்த புண்ணிய தினம். இன்று உபவாசம் இருந்து பகவானை பூஜித்தால் நல்வாழ்வு கிட்டும். அனைத்து வைணவ தலங்களிலும் விசேஷ தரிசனம். மேலும் இன்று பெருமாள் கோயில் சென்று பரமபத வாசல் கடந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும். 

மார்கழி -10(26.12.2023)

“தத்தாத்ரேய ஜெயந்தி” -மும்மூர்த்திகளும் ஒன்றாய் இணைந்து அத்திரி மகரிஷியின் தர்மபத்தினியான  அனுசூயை தேவிக்கு, தந்தாத்ரேயராக தரிசனம் அளித்த மகத்தான புண்ணிய தினம். மேலும் திரிபுர பைரவி ஜெயந்தி. திருமாலின் அவதாரங்களில் பத்தாவது அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு ஈடான, மகத்தான சக்தி வாய்ந்ததாகவும் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் உண்டாகும் தோஷங்களை போக்க வல்லதான சக்தி மிகுந்த அவதாரமாகவும் போற்றி புகழப்படுகிறது.

மார்கழி -11(27.12.2023)

“ஆருத்ரா தரிசனம்”– சிதம்பரம் நடராஜ பெருமாள் திவ்ய தரிசனம் விசேஷம். பாவங்கள் விலகும். மனம் தெளிவு வரும்.

மார்கழி -12(28.12.2023)

“பரசுராம ஜெயந்தி” -மகரிஷி ஜமதக்னிக்கும், அவர்தம்  தர்மபத்தினி ரேணுகாதேவிக்கும் புத்திரராக பரசுராமர் அவதரித்த புண்ணிய தினம். கர்ணனுக்கு போர் வித்தைகளை கற்றுத் தந்தவர். கேரள மாநிலம் இவரால் சிருஷ்டிக்கப்பட்டதே !

மார்கழி -19(04.01.2024)

“சங்கராஷ்டமி”– இவ்விரதத்தை கடைபிடித்தோமையானால்,தொய்வுற்றிருந்த  சொந்த தொழில் அபிவிருத்தடையும். தொழில் முன்னேற்றத்திற்காக தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும்.

மார்கழி -23(08.01.2024)

“காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை தினம்”- கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என பூஜக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் மகா பெரியவாளின் ஆராதனை தினம். அன்றைய தினம் காஞ்சி சென்று மகா புருஷரின் பிருந்தாவனத்தை தரிசிப்பது நல்வாழ்வினை பெற்று தரும். பாவங்களைப் போக்கும்.

மார்கழி

மார்கழி -25(10.01.2024)

செல்வத்திற்கு அதிபதியானவளும், திருமாலின் திரு மார்பை அலங்கரிப்பவளும், மகாலட்சுமியின் அம்சங்களை ஒருங்கே பெற்ற “கமலா ஜெயந்தி”. தசாவதாரத்தில் பரசுராமருக்கு இணையான அனைத்து சக்திகளை பெற்றவரும், ஜென்ம ஜாதகத்தில் சுக்கிர பகவானின் தோஷங்களை அடியோடு போக்குபவளுமாகிய கமலா அவதார தினம்.

மார்கழி -29(14.01.2024)

“போகிப் பண்டிகை” தேவர்களின் தலைவரான இந்திரனை குறித்து கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பும், சக்தியும் உண்டு. அதேபோல் இப்ப பண்டிகைக்கும் பழையனவற்றை கழிதலும், புதியனவற்றை புகுத்துதலும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. கடைபிடி போருக்கு துன்பங்கள் விலகும். நன்மைகள் பெருகும்.


மார்கழி மாதம் கடன் தீர்க்க உகந்த நாள் மற்றும் நேரம்

1.டிசம்பர் -21-மார்கழி -05-வியாழன் -பகல் 12:00-01:30

2.டிசம்பர் -23-மார்கழி -07-சனி -பகல் 12:00-01:00

3.ஜனவரி -2-மார்கழி -17-செவ்வாய் -பகல் 12:00-01:00

4.ஜனவரி -5-மார்கழி -20-வெள்ளி -பகல் 12:30-01:30

5.ஜனவரி -6-மார்கழி -21-சனி-பகல் 12:00-01:00

6.ஜனவரி -14-மார்கழி -29-ஞாயிறு -பகல் 2:00-04:00


புது வாகனம் வாங்க உகந்த நாள் மற்றும் நேரம்

1.டிசம்பர் -18-மார்கழி -02-திங்கள் -பகல்- 06:30-07:30

2.டிசம்பர் -28-மார்கழி -12-வியாழன் -பகல்-08:00-09:00

3.ஜனவரி-08-மார்கழி -23-திங்கள் -பகல் –06:30-07:30

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்97குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20அற்புத ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular